அறிவிப்பு…

2:10 பிப இல் நவம்பர் 25, 2008 | கடிதங்கள், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: ,

முந்தைய பதிவில் இடம்பெற்ற புகைப்படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது. முன்பும் சில புகைப்படங்களுடன் என்னுடைய கமெண்ட்டையும் இணைத்துப் பதிவாக வெளியிட்டுள்ளேன். அதே போல இந்தப் புகைப்படத்தையும் எனது கமெண்ட்டுடன் வெளியிட்டிருந்தேன். ஆனால் புகைப்படத்தில் இருந்த குறிப்பிட்ட சாராரின் மனதைப் புண்படுத்தலாமோ என்ற எண்ணம் பதிவை வலையேற்றிய இரவே எனக்குத் தோண்றியது.

மறுநாள் காலையே அப்பதிவை நீக்கிவிடலாம் என்றும் அப்போதே முடிவு செய்தேன். “அப்துல்” என்ற பெயரில் வந்த அனானி கமெண்ட் வராதிருந்தால் அந்தப் பதிவு அப்போதே நீக்கப்பட்டிருக்கும். மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளுடன் வந்திருந்த அந்தப் பின்னூட்டம், பதிவை நீக்குகிற என்னுடைய முடிவை மாற்றிவிட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கொண்டு இந்த அனானி பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறார் அந்த அன்பர். அன்பரின் ஐபி முகவரியைக் கொண்டு அவரது தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்தாகிவிட்டது. இனியொரு முறை அந்த அன்பரிடமிருந்து பின்னூட்டங்கள் வந்தால் அவருடைய தொலைபேசி எண் பதிவு மூலமாக பகிரங்கமாக வெளியிடப்படும். தற்சமயம் அவரது இல்ல முகவரியை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிற்க. முக்கியமான செய்தி இனிமேல்தான் வர இருக்கிறது. நேற்று நண்பர் ஏ.எம்.ஜமால் அவர்களின் பின்னூட்டத்தைப் படித்த பிறகு, இவருக்காகவாவது அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று தோண்றியது (பதிவை நீக்குங்கள் என்று அவர் கோராதபோதும்). பதிவு நீக்கப்பட்டால் அவருடைய பின்னூட்டமும் அதனுடன் அழிந்துவிடும் என்பதால் தனிப்பதிவில் அதனை வெளியிடுகிறேன். “பின்னே எதுக்குடா போட்டோ எடுக்குறீங்க” என்ற அந்தப் பதிவு கடவுச்சொல்லால் காக்கப்படுகிறது. இனி எவரும் அதனைப் படிக்க இயலாது. மோசமான வார்த்தைகளால் குட்டிக் காட்டாமல், சரியான வார்த்தைகளால் சுட்டிக் காட்டிய நண்பர் ஜமால் அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

விஜய்கோபால்சாமி

நண்பர் ஜமால் அவர்களின் பின்னூட்டம்:

நீங்கள் சொல்ல வரும் செய்தியின் முக்கியத்துவம் மறைந்து, புகைப்படத்தை கிண்டல் செய்யும் என்னமே மேலோங்கி நிற்கிறது. உங்கள் மனசாட்சியை கேளுங்கள் – உண்மை புரியும்.சரியோ தவறோ – ஒரு சாராரை புண்படுத்தி என்ன செய்ய போகிறீர்கள்.

நண்பரின் தள முகவரி: http://adiraijamal.blogspot.com/

1 பின்னூட்டம் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. தமிழனாய் பிறந்ததில் இன்றும் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

    நிச்சயமாக யாரையும் புண்படுத்த நினைப்பதில்லை நாம்.

    ஏதோ நடந்துவிடுகிறது, சில விஷமிகளாள் அது வேறு திசைக்கு நம்மை இட்டுச்செல்கிறது.

    நாம் அவற்றை அடையாளம் கண்டுகொண்டால் நிச்சியம் நம் வாழ்வில் வெற்றி தான்.

    மிக்க நன்றி தோழரே.


பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.