எனக்கு மட்டும் ஏன் இப்படி… – 1

6:31 பிப இல் மே 26, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 19 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

என்னுடைய முந்தைய பதிவில் எழுதியதைப் போல சமுதாயம் மொத்தமும் ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய மூளை மட்டும் வேறு யோசிக்கிறது. அவ்வப்போது என்னை விவகாரமாகவே சிந்திக்க வைக்கிற சிந்தனைகளை ”எனக்கு மட்டும் ஏன் இப்படி” என்ற தலைப்பின் கீழ் எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

இப்போது நான் எழுதப் போகிற எ.ம.ஏ.இ நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வந்த விபரீத சிந்தனை. சன் குழுமத்தின் தெலுங்கு தொலைக்காட்சியான ஜெமினி டிவியில் ஜோடி நம்பர் ஒன் மாதிரி ஒரு நடனப் போட்டி போய்க்கொண்டிருந்தது. அடுத்து அடுத்து சேனலை மாற்றிக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஜோடி நம்பர் ஒன் போலல்லாது பிரபலமல்லாதோருக்கான நடன நிகழ்ச்சி அது.

ஆடிக்கொண்டிருந்த ஒரு ஜோடி ஆட்டத்தை முடித்து நடுவர்களின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது. திரையில் தோண்றிய நடுவர்களைக் கண்டவுடன் பேரதிர்ச்சி. அங்கே… மா… ள… வி… கா…..

மாளவிகா… இது எங்க இங்க வந்துச்சு? அதிர்ச்சி விலகாமல் மாளவிகாவுக்கு இந்தப் பக்கமிருந்த நடுவரைப் பார்த்தால் மாபெரும் அதிர்ச்சி. கவர்ச்சிக் கிழவி ஜோதிலட்சுமி. இதயம் கொஞ்சம் பலமாக இருந்ததால் வந்திருக்கவேண்டிய முதல் அட்டாக் நல்லவேளையாக வரவில்லை. கவர்ச்சிக் கிழவிக்கு அடுத்து ஒரு தெலுங்கு சினிமா நடன நாரீமணி, யாரென்று தெரியவில்லை. சன் டிவியை நாறடித்த அதே கூட்டணி (லலிதாமணி மட்டும் மிஸ்சிங்).

நிகழ்ச்சி முடிந்ததும் ”குச்சி குச்சி கூனம்மா பிள்ளலிவ்வு” என்ற தெலுங்கு பாட்டு ஓடியது (தமிழில் குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்”). இந்த பாட்டுக்கு மாளவிகாவைத் தவிர மற்ற இரண்டு நடுவர்களும் கெட்ட ஆட்டம் போட்டனர். எ.ம.ஏ.இ. – 1 க்கும் இந்த கெட்ட ஆட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிந்தனையை (வேறு விதமாக) வளர்க்காமல் தொடர்ந்து படியுங்கள்.

இதன் பிறகுதான் என்னுடைய விவகாரமான சிந்தனை வேலை செய்யத் தொடங்கியது. யாருக்குமே தோண்றாத விபரீத சிந்தனை. இந்த நடன நிகழ்ச்சியையும் நிஜ நீதிமன்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது என்னுடைய விபரீத சிந்தனை.

யோசித்துப் பாருங்கள், நடன நிகழ்ச்சியின் நடுவர்களைப் போலவே நீதிமன்றத்திலிருக்கும் நீதிபதிகளும் நடந்துகொண்டால்… உதாரணத்துக்கு ஒரு நஷ்ட ஈடு வழக்கு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலே பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கிவிட்டு நீதிபதி அந்த பாதிக்கப்பட்டவரின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள அவரைக் கட்டிப்பிடித்து ஆடினால் எப்படி இருக்கும்?

அதே போல ஒருவருக்கு ஆயுள் தண்டனையோ தூக்கு தண்டனையோ வழங்கப்படுவதை, நடன நிகழ்ச்சிகளில் நிகழும் எலிமினேஷனுடன் ஒப்பிடலாம் அல்லவா? அவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நீதிபதி, வக்கீல்கள், குறிப்பாக அந்தக் குற்றவாளியை எதிர்த்து வாதாடிய அரசுத் தரப்பு வக்கீல், கைது செய்து அழைத்துவந்த போலீசார், அனைவராலும் அந்த குற்றவாளியைக் கட்டி அணைத்து ஆறுதல் கூற முடியுமா? அப்படிக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லும்போது தண்டனை வழங்கிய நீதிபதியின் உயிருக்கும், தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த பப்ளிக் ப்ராசிக்யூட்டரின் உயிருக்கும் என்ன உத்திரவாதம்?

நடன நிகழ்ச்சியில் நடுவரை எதிர்த்துப் பேசினால் இனி நீ ஆட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவரை விடுவித்துவிடுகிறார்கள். நீதிமன்றத்தில் மட்டும் ஒருவர் நீதிபதியை எதிர்த்துக் கேள்வி கேட்டால் இனி நீ வழக்கு நடத்த வேண்டாம் வெளியே போ என்று ஏன் அந்த நபரை விடுவிப்பதில்லை? மாறாக நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி அவருடைய குற்றத்தை அதிகப்படுத்துவது ஏன்?

குப்புறப் படுத்து மெத்தையைப் பிறாண்டிக்கொண்டே நீண்ட நேரம் யோசித்ததில் அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டேன். வழக்கம் போல் நாலு மணிக்கு எழுந்திருக்க வேண்டியவன் கேப் டிரைவர் கொடுத்த மிஸ்டு கால் புண்ணியத்தில் நாலு ஐம்பதுக்கு எழ நேரிட்டது. அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்துவிட்டு ஐந்து பத்துக்கு கேபில் அமர்ந்த பிறகும் ராத்திரி யோசித்த அதே விஷயம் மூளைக்குள் சுற்றி சுற்றி வந்தது. தயவு செய்து சொல்லுங்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி….

டிஸ்கி: இந்த பதிவுக்கு டிஸ்கியா என்று சிலர் வியப்படையலாம். ஆனாலும் டிஸ்கி போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஜோதிலட்சுமியைக் கவர்ச்சிக் கிழவி என்று அழைத்ததற்கு பெண்ணுரிமை ஆர்வலர்களிடமிருந்து கண்டனம் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் இந்த பதிவிற்கு டிஸ்கி மிகவும் அவசியமாகிறது.

ஜோதிலட்சுமிக்கு ”கவர்ச்சிக் கிழவி” பட்டம் கொடுத்தது நானல்ல. கொடுத்தவர் அண்ணாமலை தொலைக்காட்சித் தொடரில் நடித்த பொண்வன்னன், புருஷன் ஆஃப் சரண்யா ஆண்ட்டி. கவர்ச்சிக் கிழவி குறித்த மேலதிக விவரங்களுக்கு அவரையே தொடர்புகொள்ளவும்.

தொடை பதிவுக்கு பின்னூட்டம் போட்ட குந்தவை அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நல்ல எண்ணம் இல்லையாம். குந்தவையோடு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று கூடி செருப்பு, துடைப்பம், சாணக் கரைசல் இதை எல்லாம் எடுத்துக் கொண்டு சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறிவிடுவார்களோ என்ற பயமும் இந்த டிஸ்கி எழுதுவதற்கு முக்கிய காரணமாகும்.

19 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. இப்படியே கோக்கு மாக்கா யோசிச்சி யோசிச்சி லூசு ஆயிடாதிங்க அண்ணாச்சி. ஒரு காற்பந்து ஆட்டத்தை எடுத்துக் கொள்வோம், நடுவர் சிகப்பு கார்டு கொடுத்து வெளிய தானே போகச் சொல்லுறார். அவரேவா ஆட்டத்தை ஆடிக் காண்பிக்கிறார். நீதி மன்ற பாணியில் இதை எடுத்துக் கொண்டால், நீ தவறாக ஒரு கொலை செய்துவிட்டாய் என சொல்லி நீதிபதி கொலை செய்து காண்பிக்க முடியுமா…???

  2. அய்யா, அந்த நீதிபதிங்க மாதிரி இந்த நீதிபதிங்களும் பண்ண ஆரம்பிச்சுட்டா எப்படி இருக்கும்னு பிச்சுப் பெறாண்டுன சிந்தனையத்தான் எழுதிருக்கேன். பதிவு படிச்சா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது…

  3. //பதிவு படிச்சா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது…//

    நிகழ்ச்சிய பார்த்தா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது

  4. அடப்பாவி, பதிவுக்குப் பின்னூட்டம் போடுவாங்க பாத்திருக்கேன். நீ பின்னூட்டத்துக்கே பின்னூட்டம் போடுறியே….

  5. இதெல்லாம் வெளியில் நாற்பது டிகிரி வெய்யிலிந் தாக்கம்!
    கமலா

  6. //எனக்கு மட்டும் ஏன் இப்படி//

    இதே மாதிரி நிறைய பேரு ஊருல சுத்துறாங்க. என்ன பண்ணுறது. எல்லாம் போக போக சரியாகிவிடும். கவலைபடாதீங்க.

  7. எனக்கு ஒரு கற்பனை. rape case la நீதிபதி இப்படி நடந்தால்

  8. ///
    எனக்கு ஒரு கற்பனை. rape case la நீதிபதி இப்படி நடந்தால
    ///

    அய்யய்யோ…. சத்தியமா நா அந்த மாதிரியெல்லாம் கற்பனை பண்ணல… அய்யா மகாஜனங்களே இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக முடியாது….

  9. எழுத்துப்பிழைகளைக் களைய முயற்சி தேவை.

  10. nadana nigalchikal tv il athiga magi vitana. atharku oru kandanam.;

  11. கலக்கிட்டீங்க போங்க… உங்க நகைச்சுவை உணர்வு வாழ்க… வாழ்க… 🙂

  12. என்ன அண்ணே பன்றது, அக்னி வெயில் போயிருச்சு இன்னும் உங்களுக்கு தெளியவில்லை…. ஒரு எட்டு குற்றாலம் வேண்டாம் வேண்டாம்… திருமூர்த்தி மலைக்கு போயிட்டு வாங்க..

  13. //கவர்ச்சிக்கிழவி//

    ஜோதிலட்சுமிக்கு பொருத்தமான பெயர்,

    கொளுத்தும் வெய்யிலில் வெளியே அலைந்தால் இப்படித்தான் சிந்திக்க தோன்றும் 🙂

  14. வாம்மா, மின்னல்…. சாரி… கயல்

    ஒரே ஐ.பி.ல வந்திட்டு எதுக்கு வேற வேற இ-மெயில் ஐ.டி. அப்படி ஒன்னும் மோசமான பின்னூட்டம் கூட கிடையாதே நீங்க எழுதிருக்கறது. எதுக்கு ஒளிஞ்சுக்கறீங்க?

  15. கோச்சுக்காதீங்க கோபால் சார், ப்ளாக் ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகுது அதனால் அனுபவமின்மை. வேற எந்த ரீசனும் இல்லை.

  16. ///
    கோபால் சார்
    ///

    என்னம்மா இது, என்னை ஏதோ மிடில்கிளாஸ் குடும்பத்து மாமனார் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிக்கிட்டீங்க போல இருக்கு? வாழ்க்கைல எனக்கே இன்னும் ஒரு மாமனார் கெடைக்கலம்மா….

  17. //வாழ்க்கைல எனக்கே இன்னும் ஒரு மாமனார் கெடைக்கலம்மா….
    //

    ippadi iruntha eppadai kidaikkum

  18. எனக்கு மட்டும் ஏன் இப்படி — இத படிச்சதுகு பிறகு யாரவது… பெண் குடுக்க யாருக்காவது…….. தில் வருமா……………

    பெண் பார்க்க தானே ஊருக்கு போனிங்க?

  19. ///
    எனக்கு மட்டும் ஏன் இப்படி — இத படிச்சதுகு பிறகு யாரவது… பெண் குடுக்க யாருக்காவது…….. தில் வருமா……………

    பெண் பார்க்க தானே ஊருக்கு போனிங்க?
    ///

    உஸ்……………… நாம சும்மா இருந்தாலும் வென தேடி வந்து வம்பிழுக்குதே…..


பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.