இந்து நாளிதழை ஏன் காப்பாற்ற வேண்டும் – வாக்கெடுப்பு

11:05 முப இல் ஏப்ரல் 21, 2011 | அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , ,

தமிழாக்கம்: இந்து நாளிதழை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்?

1. #TNFishermen இலங்கைக் கடற்படை, தமிழ் மீனவர்களைக் கொல்லும் போது கைதட்டி ரசிக்க

2. தமிழ் உடன்பிறப்புகளைக் கொன்று, துன்புறுத்தி, வன்கொடுமை செய்யும் இலங்கை ராணுவத்தைக் கைதட்டி ஊக்குவிக்க

3. உலகத் தமிழர்களின் நலனுக்கு எதிராகத் தொடர்ந்து சிங்கள ஆதரவுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள

இதனால் சகலமானவர்களுக்கும்…

4:27 பிப இல் பிப்ரவரி 6, 2011 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இந்தத் தளத்தை எழுதி வந்த கருங்காலி, ப்ளாகருக்குப் போய் விட்டதால், புதிய பதிவுகளைப் படிக்க http://vijaygopalswamihyd.blogspot.com என்ற முகவரிக்கு வந்து சேரவும் சாமீஈஈஈஈஈஈயோய்….

எழுத்து மாமா vs. சுசி கனேசன்

10:51 முப இல் செப்ரெம்பர் 28, 2009 | அங்கதம், அரசியல், சினிமா, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

டிஸ்கி: எழுத்து மாமா அல்லது சுசி கனேசன், இருவரில் ஒருவரை ஆதரிக்கும் நோக்கில் இப்பதிவு எழுதப்படவில்லை. நான் இன்னும் கந்தசாமி படம் பார்க்கவில்லை. டிவிடியில் தவிர்த்துத் திரையில் பார்க்கிற உத்தேசமும் இல்லை.

கடந்த வாரம் எழுத்து மாமாவிற்கு சுசி எழுதிய காரசாரமான எதிர் கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. சரி எழுத்து மாமா அப்படி என்ன தான் எழுதியிருப்பார் என்ற குறுகுறுப்பில் வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று கடந்த வார குமுதத்தைத் தேடி வாங்கினேன். எழுத்து மாமா எப்போதுமே தன்னை ஒரு பல்துறை வித்தகராகக் காட்டிக் கொள்வதில் விருப்பமுடையவர். பத்திரிகையில் எழுதுகிற அரசியல் விமர்சகர்களில் முதன் முதலில் கணிணிப் பரிச்சயம் பெற்றது அவர்தான் என்று அவரே சொல்லிக் கொள்வார். அதே போல சினிமாக்களை விமர்சிக்கும் தகுதியும் தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ள சமீபகாலமாக சினிமா விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.

எழுத்துமாமா கடைசியாக எழுதிய சினிமா விமர்சனம் கந்தசாமி படத்தைப் பற்றியது. எழுத்து மாமா என்ன இழவை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எழுத்து மாமாவின் விமர்சன நேர்மையை அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதாரம் குசேலன் படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம். அந்தப் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வாசகத்தை மீண்டும் ஒரு முறை உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…”. சரி எழுத்து மாமா சங்கரனை தூக்கி ஓரமாகப் போடுங்கள். லெட் சுசி கனேசன் கம் டு த சீன்.

சுசி கனேசனின் கட்டுரையைப் படித்தபோது ஒரு நாராசமான குழாயடிச் சண்டையைப் பார்த்த உணர்வே ஏற்பட்டது. “என் குடத்தையாடி தூக்கிப் போட்டே, நீ கட்டைல போவே, காளியாயி வந்து உன்ன வாறிகிட்டுப் போக, ஒரே வாரத்துல உன் புருஷன் செத்து நீ தாலியறுப்பெடி” என்ற வசவுகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்தது கட்டுரை.

கந்தசாமி படத்தின் அதி முக்கியமான சிறப்பாக சுசி சொல்வது முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தது. முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தோம் என்று சொல்வதே மிகப் பெரிய மோசடி. முப்பது கிராமங்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவிலான ஒரு உதவியைச் செய்தார்கள் என்பது மட்டுமே உண்மை. கந்தசாமி இசை வெளியீட்டு விழாவைக் கவனமாகப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். தத்தெடுப்பது என்பது அந்தக் கிராமங்களை முழு அளவில் தன்னிறைவு பெறச் செய்வது. இவர்கள் தந்த இரண்டு லட்சத்தில் ஒரு கிராமத்தை அல்ல, ஒரு சந்தில் வசிக்கிற மக்களைக் கூட தன்னிறைவு பெற்றவர்களாக்க முடியாது.

பஞ்ச தந்திரம் படத்தில் ஜெயராம் ஒரு வசனம் சொல்வார் “குடுத்த காசுக்கு எப்படி புடிச்சா பாரு” என்று. இவர்களும் தாங்கள் எடுக்கிற சினிமா ஒரு “வர்ச்சுவல் விபச்சாரி”யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ!

கந்தசாமி படத்துக்குச் சென்னை நகரத்தில் மட்டும் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் வசூல் என்று அபிராமி ராமநாதன் அறிவிக்கிறார். படத்தின் மொத்த வசூல் 37 கோடி ரூபாய் என்று சுசியும் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் தெரிவிக்கிறார்கள். இது அத்தனையும் ஒரே வாரத்தில் ஈட்டிய வருமானம் என்பதை மிகப் பெரிய சாதனையாக ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதற்கான பதிலை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

வேர்வை சிந்தி உழைத்த உழைப்பைக் களங்கப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறார் சுசி. தன்னெஞ்சறிவது பொய்யற்க சுசி கனேசன். இந்த வெற்றி நீங்கள் வேர்வை சிந்தி உழைத்து ஈட்டியதா அல்லது மக்களின் பணத்தை அநியாயமாக உறிஞ்சி ஈட்டியதா என்பதை ஊரறியும்.

உங்கள் படத்தை மற்றவர்கள் குறை சொல்லுகிறார்கள் என்பதால் நாடோடிகள், சுப்ரமணியபுரம், பசங்க ஆகிய படங்களைப் பற்றி நீங்களும்தான் குறை சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பைக் குறை சொன்னதற்காக வருந்துகிற நீங்கள், சமுத்திரக்கனி, சசி குமார், பாண்டிராஜ் ஆகிய இயக்குநர்களின் உழைப்பைக் குறை சொல்லியிருக்கிறீர்களே. குறைந்தபட்சம் இனியாவது ஒரு நாணயமான சினிமாகாரனாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

சுசியின் கண்டனம் வெளிவந்த குமுதத்தைப் படித்த அடுத்த நாளே முந்தைய பத்தி வரை எழுதி வரைவில் வைத்திருந்தேன். எழுத்து மாமா ஓட்டை போடுவதற்கென்று சில பக்கங்களைக் குமுதம் ஒதுக்குவதால் அவரது பதிலையும் தெரிந்துகொண்டு பதிப்பிக்கலாம் என்று கடந்த குமுதம் இதழ் வெளிவரும் வரை காத்திருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. சுசியின் கண்டனத்துக்கு பதில் சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னைத் தானே அம்பலப்படுத்திப் கொள்கிறார் எழுத்து மாமா. அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆடவிட்டு சென்சார் போர்டை ஏமாற்றி யூ சான்றிதழ் வாங்கிவிட்டு வெட்கமில்லாமல் பேசுகிறார் என்று கூவுகிற எழுத்து மாமா, “குசேலன்” படம் அதே பாணியில் யூ சான்றிதழ் வாங்கியதைக் குறித்து ஒரு வார்த்தை கூடக் கண்டிக்கவில்லையே! எழுத்து மாமா யோக்கியனாக இருந்தால் அடுத்த வார குமுதத்தில் போடுகிற “ஓ” தான் கடைசி “ஓ”வாக இருக்க வேண்டும்.

இனி கந்தசாமியின் வசூல் குறித்துப் பார்ப்போம். முன்பெல்லாம் படங்களுக்கு பட்ஜெட் போடுகிறவர்கள் டிக்கெட்டின் அசல் விலையை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் போட்டு வந்தனர். இப்போது ப்ளாக்கில் விற்கிற விலையை அடிப்படையாகக் கொண்டுதான் பட்ஜெட்டே போடுகிறார்கள். ஒரு ஓட்டு எதிராக விழுந்தாலும் நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன் என்று சொல்லுகிற சுசிகனேசன் ஒரு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் “கந்தசாமி” படத்துக்காக விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் சராசரி விலை என்ன என்று மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அத்தனை திரையரங்கிலும் ஒவ்வொரு டிக்கெட்டும் என்னென்ன விலைக்கு விற்கப்பட்டது என்று டினாமினேஷனுடன் சொல்ல வேண்டும். சொல்வாரா?

வசூலையே ஒரு சாதனையாகச் சொல்லுகிற இவர்கள் இந்த வசூலை அள்ள என்னென்ன மோசடி செய்திருக்க வேண்டும்! வெட்கமில்லாத இந்த பிறவிகளை எந்த இந்தியன் தாத்தா வந்து குத்துவான் அல்லது எந்த அந்நியன் இவர்களுக்கெல்லாம் “கும்பிபாக”மும் “கிருமி போஜன”மும் செய்வான்.

விடுப்புக்கு விளக்கம்: நீண்ட விடுப்புக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். இதைக் குறித்து பின்னூட்டத்திலும், ஜி-டாக் உரையாடலிலும், தொலைபேசியிலும் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் இத்தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய விபத்தொன்றில் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தனை நாளும் கணிணியில் எழுத இயலாத நிலையிலிருந்தேன். இப்போதுதான் சரியானது. இனி வாரம் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் பதிவுகளை எழுத இருக்கிறேன். இனி யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.

கொலை வெறிக் கவிதைகள் – 6

6:32 பிப இல் ஓகஸ்ட் 2, 2009 | அனுபவங்கள், கவிதை, கவிதையைப் போல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

நல்ல மழை அன்று,
உன் பூப்போட்ட குடையுடன்
பள்ளியிலிருந்து புறப்பட்டாய்.

உன் குடைக்குள்
எனக்கும் ஒரு இடம் தேடி
கையிலிருந்த குடையை
சட்டைக்குள் பதுக்கினேன்.

வேண்டுமென்றே உனக்கு முன்னால்
நனைந்தபடியே ஓடியபோது,
எதிர்பார்த்தபடியே என்னை
விரல் சொடுக்கி அழைத்தாய்.

நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்…

என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்.

என் வீதித் திருப்பத்தில்
நம்மிருவர் வழியும் வேறானது…

வீதிக்குள் நுழைந்ததும்
மறைத்த குடையை
விரித்துப் பிடித்தேன்…

வீட்டை நெருங்கிய நொடிகளில்
தற்செயலாகத் திரும்பியபோது
விழியெல்லாம் நெருப்பாக நீ…
அப்பட்டமாய்ப் புரிந்தது
உன் விழிகளின் மொழி…
திருட்டுப் பயலே…

சொல்றா மணியா – 25/07/2009

5:03 பிப இல் ஜூலை 25, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், கருணாநிதி, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,


திருவள்ளுவர் vs. சர்வக்ஞர்

பண்ட மாற்று முறையில் கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும் தமிழ்நாட்டில் சர்வக்ஞர் சிலையும் நிறுவப்பட உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு சிலை திறப்புத் தேதி உறுதியாகத் தெரியவில்லை. திருவள்ளுவரைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. சர்வக்ஞர் என்ற கன்னட கவிஞரைப் பற்றி எடியூரப்பா கோபாலபுரம் வந்து போன பிறகுதான் நமக்கெல்லாம் தெரிகிறது. அத்தினி, சித்தினி, பத்மினி போன்ற பெண் வருணனைகளையும், வீரசைவப் பெருமை பேசுகிற சுயசாதி பெருமைப் பாடல்களையும் எழுதிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்ஞர். திருவள்ளுவருக்கு எதிராக அறிவார்ந்த ஆளுமையாக முன்னிறுத்த கன்னடர்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எடியூரப்பா இப்படி ஒரு கோரிக்கையை வைத்த பிறகு கோபாலபுரத்தார் என்ன கேட்டிருக்க வேண்டும்? “சரிப்பா, நீ சொல்ற படி சர்வக்ஞர் சிலையை தமிழ்நாட்டில வைக்கிறோம். திருவள்ளுவர் சிலையக் கூட திறக்க வேண்டாம், ஒரே ஒரு பெரியார் சிலைய நாங்க அல்சூர் ஏரிக்கரைல வச்சிக்கிறோம், டீல் ஓகேவா” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். [கடைசிக் கட்ட செய்தி: ஆகஸ்ட் 9ம் தேதி சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி.]


காண்டினெண்ட்டல் vs. கலாம்

காண்டினெண்ட்டல் நிறுவனம் அப்துல்கலாமை சோதனை செய்து விமானத்தில் அனுமதித்தது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. இந்தியத் தலைவர்களுக்கு இது புதிதல்ல, ஆனால் இந்தியாவிலேயே நடந்திருப்பதுதான் புதுமை. குடியரசுத் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தால் அதைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறவர்கள், எல்லோரையும் போல பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் என்ன தவறு. சாதாரண மக்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்புச் சோதனைகள் ஒரு குடியரசுத் தலைவருக்குச் செய்யப்படும் போது அது அவமாணகரமானதாகக் கருதப்படுகிறது எனில் அதே சோதனை முறை கண்ணியமானதா என்ற கேள்வியல்லவா பிரதானமாகி இருக்க வேண்டும். ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பயணி எதையாவது மறைத்து எடுத்துச் செல்கிறாரா என்று சோதிக்க முடிந்தாலும் ஆடைகளை எல்லாம் களைந்து சோதிக்கிற முறை கண்ணியமானதா? இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம்? இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும்? அதற்குப் பிறகு எதிர்த்துப் பேசுவோர் மிது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டட்டும்.


ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா

டிவியப் போட்டா ஒரே களேபரம். எங்க பாத்தாலும் ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா? ன்னு. பண்றது சோப்பு வெளம்பரம். அதுக்கு எதுக்குடா ஸ்ரேயா எங்க வீட்டுக்கு வரனும். எட்டுதோ எட்டலியோ, என் முதுகுல என் கையாலதான் சோப்பு போடனும். அந்தப் புள்ளையா வந்து சோப்பு தேய்க்கப் போகுது. அவனவனுக்குப் போன கரண்ட்டு எப்போ வருமான்னே தெரியல, இதுல ஸ்ரேயா என் வீட்டுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன? (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ!!! நான் பாத்த தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வருவாங்களா வருவாங்களான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க.)



சொல்றா மணியா (முன்னாள் மாதவா) – 18/07/2009

12:04 முப இல் ஜூலை 19, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 

தானே உக்காந்த தானைத் தலைவர் குலாம் நபி ஆசாத்… வாழ்க…

சமீபத்துல காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஒரு கூட்டத்துல பேசுனாருங்க. மக்கள் தொகை குறித்த அக்கறையோட யாரும் யோசிக்காத கோணத்துல போச்சுங்க அவரோட பேச்சு. கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி இல்லாத காரணத்தால பொழுது சாஞ்ச ஒடனேயுமே அல்லாரும் மக்கள் தொகையைக் கூட்டக் கெளம்பிற்றாங்களாம். கரண்ட் வசதி இருந்தா ஜனங்க டிவிய பாத்துக்கிட்டு ஏதாவது ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்க ஏத்திவிடுவாங்க, அதனால கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி கொண்டு வர எங்க அரசாங்கம் வேண்டியதை எல்லாம் செய்யும்னு சொல்லிருக்காருங்க அந்தக் கூட்டத்துல. ஆக அம்பது வருஷமா இவுரு கட்சி ஆட்சியில இருந்தும் எல்லா கிராமத்துக்கும் கரண்ட் வசதி குடுக்க முடியலைங்கறத இவரே ஒத்துக்கிட்டாருங்க. ரொம்பப் பெரிய மனசு. தானே ஒக்காந்தாருன்னு சொன்னேன், எங்கேன்னு சொன்னேனா? எத்தனையோ பேரு காங்கிரசுக்கு ஆப்பு வைக்கோனும்னு காத்திருக்கும்போது, தனக்கான ஆப்பத் தானே தரையில குத்தி வச்சிட்டு தானே போய் உக்காந்தாரு பாருங்க, அங்க நிக்கிறாரு… மன்னிச்சுக்குங்க உக்காறாருங்க நம்ம குலாம் நபி… பட்டைய கெளப்புங்க.

செல்லக் குரலுக்கான இம்சைத் தேடல்

மனைவியுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது விஜய் டிவி வைங்க… விஜய் டிவி வைங்க… என்று அவசரப் படுத்தினாள். விஜய் டிவிக்கு மாற்றினால் அங்கே செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சி. சரியாகப் பேசக் கூடத் தெரியாத ஒரு குழந்தையை அதன் தாயார் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார். நடுவர் ஷாலினி குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகச் சொன்னதும் குழந்தைக்கு ஒரே அழுகை. தாயார், உண்டா இல்லையா என்று தெரிந்தால் நாங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இன்னுமொரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார். குழந்தை மீண்டும் பாடியது. அப்போதே நிராகரிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்துவோர் மீதான கோபத்தை விட இது போன்ற பெற்றோர்கள் மீதுதான் எனக்கு கோபம் அதிகம். தங்கள் குழந்தையின் நிலை நகைப்புக்கு இடமாகும் என்று தெரிந்தே அழைத்துவருகிற இவர்களை என்னவென்று சொல்வது?

அய்யய்யோ ஆடி மாசம்…

இவன் ஏண்டா ஆடி மாசத்துக்கு அலறுறான்னு யாரும் தப்பா நெனைக்க வேண்டாம். ஆடி மாசமானாலே அந்தக் காளிக்கு, இந்தக் காளிக்கு, தக்காளிக்கு, வக்காளிக்குன்னு கூழுத்த வசூலுக்குக் கெளம்பிருவானுங்க செல பேரு. பெரு நகரங்கள்ளயும் இந்த அடாவடிக்கு பஞ்சமில்ல. பெருநகரங்கள்ள ஆடி மாசத்த விட விநாயக சதுர்த்திக்குத்தான் இந்த அடாவடி அதிகம். வாடகை வீட்டில இருக்கவுங்களுக்கு ஒரு ரேட், சொந்த வீட்டுல இருக்கவுங்களுக்கு ஒரு ரேட்டுன்னு ரக ரகமா வசூல் நடக்கும். இங்க ஹைதராபாதிலையும் அப்படித்தான். கடந்த விநாயக சதுர்த்தியின் போது அறிய நேர்ந்த தகவல் சொந்த வீட்டுக்காரர்கள் ஐந்தாயிரமும் வாடகை வீட்டுக்காரர்கள் ஐந்நூறும் தந்தே ஆக வேண்டுமாம். இப்படி வசூலித்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், தேவையற்ற அலங்காரங்களும், வீண் விரயங்களுமே காணக் கிடைக்கின்றன. ஒரே சந்தில் மூண்று விநாயகன் சிலைகள். ஏண்டா இப்படின்னு அங்கிருந்த நண்பனைக் கேட்டால் வசூல் ஜாஸ்தி, வேற என்ன பண்ணுவாங்க என்கிறான். இதைத்தான் எங்க ஊருல “சந்தனம் மிஞ்சுனா உக்காற்ற இடத்துல கூட பூசிக்குவாங்கன்னு”  சொல்லுவாங்க. பழமொழிய கொஞ்சம் லைட்ட சொல்லிருக்கேன், ராவா சொன்னா கண்டனப் பதிவு போடறதுக்குன்னே லேப்டாப்ப கைல புடிச்சிக்கிட்டு அலையுற கூட்டம் என்னையும் கிழிச்சுத் தொங்க விட்டுடும். இவுங்களுக்கெல்லாம் பீய பீன்னு சொல்லக் கூடாதாம், மலம்னு சொல்லனுமாம். எதிலையும் பொலிட்டிகல் கரெக்ட்னஸ் இருக்கனுமாம். கெரகம்…

 

என்னமோ போடா மாதவா – 10/07/2009

9:38 பிப இல் ஜூலை 9, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், சோதனை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,
தமிழ்மணக் கருவிப்பட்டை

சேர்க்கவும்

தமிழீஷில் வாக்களிக்க

லபூப்-ஈ-சகீர்

தமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் ஆண்மைக் குறைவுக்கான மருந்து ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அரைக் கிலோ மருந்துக்கு நூற்றைம்பது ரூபாய்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால் அங்கே செய்தி சேகரிக்க வருகிற நிருபர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் லபூப்-ஈ-சாகரும் அடக்கம். யுனானி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தாம். ஒரு அரசாங்கம் இது மாதிரி மருந்துகளைத் தயாரித்து விற்கலாமா என்றும் கேள்விகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் சாராயம் விற்பதைவிட மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக ஆண்மைக் குறைவு மருந்து விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. தொன்னூறு வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிற டாம்ப்கால் நிறுவனத்தின் லாபம் இந்த ஒரு பொருளால் இருமடங்காகப் பெருகியிருப்பது குறிப்பிடத் தக்கது. இனிமேலாவது ஒரு மாத மருந்து மூவாயிரம், மூண்று மாத மருந்து பத்தாயிரம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிற மருத்துவர்கள் எல்லாத்தையும் மூடிக் கொண்டு சும்மா இருப்பார்களா பார்ப்போம்.

லாலுவின் பரந்த மனது

ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய லாலு ஒரு மிகப்பெரிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் யாராலும் சொன்னதைச் செய்ய முடியாது என்பதுதான் அந்த உண்மை. “கடந்த முறை நான் ரயில்வே அமைச்சராக இருந்த போது பாட்னா ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில்நிலையமாக மாற்றுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆகவே அரசு வெளியிடுகிற எந்த அறிவிப்பையும் மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை மக்களுக்குக் கூறிய காரணத்துக்காகவே லாலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சானியா நிச்சயதார்த்த வைபோகமே

எனக்காகப் பிறந்த சானியா இன்னொருவரை மணப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று சானியாவின் வீட்டுக்குள் புகுந்த பெங்களூர் இளைஞர் சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார். இந்த லிஸ்ட்டில் இன்னொரு இளைஞரும் உண்டு, ஆனால் அவரைக் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே இன்று சானியாவின் திருமண நிச்சயம் ஹைதராபாத் “தாஜ் கிருஷ்னா” ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சானியாவின் உடை நிறமென்ன, முக்கியஸ்தர்கள் யார் யார் இந்த விழாவுக்கு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் நுழைய முடியும். பத்திரிகையாளர்களுக்குக் கூட அனுமதி இல்லையாம். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு “சானியா இவ்விழாவில் பச்சை நிற ஷரோரா அணிந்து வருவார்” என்று சாக்‌ஷி டிவியின் பெண் நிருபர் ப்ளாட்பாரத்தில் நின்றபடியே தொலைகாட்சியில் லைவாகப் சொல்லிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளன. இவற்றுள் பிரியாணி மட்டும் பதினைந்து வகை. மாப்பிள்ளை ஹைதராபாதின் பிரபல ஹோட்டல் நிறுவன முதலாளியின் மகனாம்.

ஓரினச் சேர்க்கை

ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குறிய குற்றம் என்று கூறுகிற சட்டப்பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே குஜராத் அமைச்சர் ஒருவர் இந்தியா முழுவது ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டாலும் குஜராத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். புரியாமல் பேசியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஓரினச் சேர்க்கை சரியா தவறா என்பதல்ல இப்போதைய விவாதம். அது தண்டனைக்குரிய குற்றமா இல்லையா என்பது மட்டுமே அலசப்பட்டு வருகிறது. அதற்குள் கலாச்சாரக் குண்டர்களுக்கும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களுக்கும் முட்டல் ஆரம்பித்துவிட்டது. ஒரு முடிவு தெரியும் வரை நமக்குப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமிருக்காது. ஸ்டார்ட் ம்யூஜிக்… டிஞ்சக்கு டிஞ்சக்கு டிஞ்சக்கு டிங் டிங்…

சோதனை முயற்சி

ஒரு சோதனை முயற்சியாக இந்தப் பதிவுடன் தமிழ்மணத்துக்கான கருவிப்பட்டை ஒன்றைத் தயாரித்து இணைத்திருக்கிறேன். இங்கே தமிழ்மணத்தின் முத்திரையுடன் தமிழ்மணம் வழங்கும் பதிவு சார்ந்த பிற சேவைகளுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மென்நூல்,  வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகள் ஆகியவற்றுக்கு உங்கள் வலைப்பதிவு முகவரியே போதும். பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்க உங்கள் இடுகையின் முகவரியை ஹைப்பர்லிங்க் ஆகக் கொடுக்க வேண்டும். ஆதரவு மற்றும் எதிர் வாக்குகளுக்கு பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த பிறகு அங்கே வழங்கப்படும் போஸ்ட் ஐடி எண்ணை அதற்குரிய இடத்தில் வழங்கவேண்டும். இருந்தும் ஒரே ஒரு குறை, உங்களுக்கு எத்தனை வாக்குகள் விழுந்தது என்பதை இந்தக் கருவிப்பட்டையைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியாது. உங்கள் இடுகைகள் சூடான இடுகையானால் தமிழ்மண முகப்பில் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலும்.

தமிழீஷில் வாக்களிக்க

தமிழ்மணக் கருவிப்பட்டை

சேர்க்கவும்

ஊடகப் பொறுப்பின்மை

4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

imageவிஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன?” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.

இதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.

ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.

செய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.

சந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம்? என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிழீஷில் வாக்களிக்க

கொலை வெறிக் கவிதைகள் 1754 – 5

1:18 முப இல் ஜூன் 17, 2009 | அங்கதம், கவிதை, கவிதையைப் போல், பகுக்கப்படாதது, படங்கள் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஆட்டோகிராஃப்

image

மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் சுமதி
ஐந்தாம் வகுப்பில் ரோசி
ஆறாம் வகுப்பில் தென்றல்
+1ல் திரிபுரசுந்தரி
கல்லூரியில் மாதங்கி
2003 ஜனவரி முதல் மே வரை வித்யா
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை அனுஷா!

இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!

[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]

தமிழ்மண ஆதரவு வாக்களிக்க

தமிழ்மண எதிர் வாக்களிக்க

தமிழீஷில் வாக்களிக்க

என்னமோ போடா மாதவா – 13/06/2009

12:11 முப இல் ஜூன் 14, 2009 | அங்கதம், அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

தமிழ்நாட்டுல ஏனய்யா காமெடி பண்றீங்க…

என்னமோப்பா, இந்த மார்க்சிஸ்ட் காரங்களுக்கு எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தலைன்னா தூக்கமே வராது போல இருக்கு. நிலச் சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க, மலச்சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க. இன்னிக்கும் ஒரு போராட்டம் நடத்திருக்காங்க. கேரளா கவர்னர் கேரளா அமைச்சர் ஒருத்தர் மேல வழக்குத் தொடுக்கலாம்னு சிபிஐக்கு அனுமதி குடுத்தாராம். அது ஒரு குத்தமாம், தோழர்கள் குளத்துல… மன்னிக்கனும் களத்தில குதிச்சுட்டாங்க. ஏம்ப்பா, அவரு அனுமதிதானே குடுத்தாரு, தீர்ப்பா குடுத்துட்டாரு? நீ எப்படி அனுமதி குடுக்கலாம்னு இங்கேர்ந்தே போராடுனா, கேரளாவுல இருக்குற கவர்னருக்கு எப்படித் தெரியும், கேரளாவுலயே போய் போராடலாம்ல, அங்க உங்க கவர்மெண்ட்தானே நடக்குது. ஏன் தமிழ்நாட்டுல உக்காந்துக்கிட்டு காமெடி பண்றீங்க.

ஸ்ஸ்ஸப்பா… முடியலடா…

தமிழகத்தின் “நம்பர் ஒன்” தலைவலி சன் டிவியில உண்மைய அலசுற ஒரு நிகழ்ச்சியப் பாத்தேன். ஒரு கோயிலப் பத்தி விரிவா அலசிக்கிட்டிருந்தாங்க. அந்த கோயில்ல இருக்கற சாமி யார் கனவுலயாவது வந்து எனக்கு ஏகே-47 வச்சு பூசை பண்ணு, மண்ண வச்சு பூசை பண்ணு சாணிய வச்சு பூசை பண்ணுன்னு வித விதமா சொல்லுமாம். அதே மாதிரி அவுங்களும் வச்சு பூச பண்ணுவாங்களாம். அப்படிப் பண்ணுனா இந்திரா காந்தி கொலைலேந்து, சுனாமி வரைக்கும் ஹைலெவல்ல ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி நடக்குமாம். இந்தக் கோயில்ல ஏகே-47 வச்சு பூசை பண்ணுனதாலதான் இலங்கையில தமிழினம் பூண்டோடு அழிந்து வருகிறதாம். ஸ்ஸ்ஸப்பா… முடியலடா….

விட்டா வெளிக்குப் போறதக் கூடக் காட்டுவானுவ…

தொலைக்காட்சியில சென்னையில கடந்த வாரம் துண்டு துண்டா வெட்டப்பட்டு வெவ்வேற இடங்கள்ள வீசப்பட்டவரப் பத்திய செய்தி போயிக்கிட்டிருந்துச்சு. கேட்கும் போதே பகீர்னு இருக்கு. ஆனா தமிழ்நாட்டு செய்தி அலைவரிசை ஒன்னுல துண்டா வெட்டப்பட்ட அவருடைய கைகள காட்சியாவே காட்டினாங்க. இதல்லாம வாரமிருமுறை வற்ற புலணாய்வு ஏடு ஒன்றும் இடுப்புக்குக் கீழுள்ள அந்த சடலத்தின் பாககங்களைப் படமாக வெளியிட்டிருந்தது. இதுங்கள எல்லாம் என்ன சொல்லுறது.

டேய், நீ மயிருன்னா நான் ஆளு மயிரு

பயப்படாதீங்க. கடந்த வாரம் ஊர்ல இருந்தப்ப ஒன்வேல வந்த ஒருத்தரிடம் டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் சொன்ன பஞ்ச் டயலாக் இது. ஒன்வேல வந்தவர் வெளியூர் ஆள், வண்டி உறவினரிடம் இரவல் வாங்கியதாம். லைசென்சில் இருக்கிற தன்னுடைய முகவரியைக் காட்டியும் “ஆளு ம**” கேட்பதாக இல்லை. இத்தனைக்கும் அந்த வண்டி ஓட்டி செய்த தவறு வேறு ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்த சொன்னதும் நிறுத்தி சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார். “ஆளு ம**” கையில் சாவி கிடைத்திருந்தால் ராத்திரி கட்டிங்கிற்கு துட்டு தேறியிருக்கும். அது கிடைக்காத வயித்தெறிச்சலோ என்னவோ. முக்கியமான விஷயம் என்னன்னா “டேய், உன்னால என்ன புடுங்க முடியும். என் பேரு கண்ணன், நம்பர் 181” என்றும் கர்ஜித்தார். சம்பவம் நடந்த இடம் குடந்தை டைமண்ட் தியேட்டர் இறக்கம். இதையெல்லாம் கவனித்த எனக்கு ஆ.ம.வுக்கு அனஸ்தீசியா இல்லமலே குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா என்னுமளவுக்குக் கொலை வெறியாகிவிட்டது. உடனிருந்த என் தம்பி சமாதானம் செய்ததால் ஆ.ம. பிழைத்தது.

எல்லாம் ஒரு வெளம்பரந்தான்

ஒரு சோப்பு வெளம்பரம். அம்மா மகளக் கூப்பிட்டு சோப்பு வாங்கியாரச் சொல்றா. மகளும் போறா. திடீர்னு அம்மா பதட்டமாகிடுறா, என்ன சோப்பு வாங்கனும்னு சொல்லி உடலியாம். தெருவெல்லாம் தேடி அலைஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்து பாத்தா, பொன்னு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருக்கறா. “பவித்திரா” ன்னு சத்தமா கூப்புடுறா. ஹமாம் சோப்போட பவித்திராவோட கையும் முகமும் மட்டும் பாத்ரூம் கதவுக்கு வெளிய தெரியுது. அப்பத்தான் அம்மாகாரி வயித்தில பால் வார்த்த மாதிரி இருக்குது. அந்த அம்மாகாரிய நான் பாக்கனும், ஒரு முக்கியமான விஷயம் கேக்கனும். “அடிங் கொய்யாலே, அந்தப் பவித்திரா கிட்ட குளிக்கிற சோப்பா தொவைக்கிற சோப்பான்னு மொதல்ல சொல்லி உட்டியா? அதையே சொல்லாம, உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு?”

தமிழ்மண ஆதரவு வாக்கு

தமிழ்மண எதிர் வாக்கு

தமிழீஷ் வாக்கு

கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…

6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

கொடுமை நடந்த இடம் கும்பகோணம்

[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]

கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.

அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.

மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்கு

தமிழ்மணத்தில் எதிர் வாக்கு

தமிழீஷ் வாக்கு

தேர இழுத்துத் தெருவுல உட்டுட்டாங்களே….

8:42 பிப இல் ஜூன் 7, 2009 | அரசியல், கடிதங்கள், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

விஜய் என்பது பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் விஜய்கோபால். தகப்பன் மீதுள்ள மரியாதையின் பேரில் எனக்கு நானே வைத்த பெயர் விஜய்கோபால்சாமி. இந்தப் பெயரை விரும்பி ஏற்பதை என் தகப்பனுக்குச் செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

முதல் முறையாக என் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்டபோது. முன்னோர்களை நினைவுபடுத்தும் முகச்சாயலுடன் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சைச் செயலாகக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

யாருடைய கையெழுத்தாக இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு புரியுமளவு இருந்தால் போதும் என்பது என்னுடைய அளவுகோல். அந்த வகையில் என்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதமும் மிளகாய் ஊறுகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தங்கையின் திருமண நிச்சய நிகழ்வில் என் நண்பன் அண்ணாமலை உணவருந்திக் கொண்டிருந்தான். சம்பந்தி வீட்டார் சிலருக்கு உணவருந்த உடனே இடம் தேவையாயிருந்தது. சிறிதும் யோசிக்காமல் “அண்ணாமலை, ஏந்திரிடா” என்றேன். சம்பந்தி வீட்டாருக்கு என்னோடு அண்ணாமலையும் உணவு பரிமாறினான். அண்ணாமலையைப் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். எத்தனை பேரிடம் நான் அண்ணாமலையின் நாகரிகத்துடன் நடந்துகொள்வேன் என்றுதான் தெரியவில்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

சென்னை, மல்லை, திருச்செந்தூர், நாகை என்று பல ஊர்க் கடல்களில் குளித்தாகிவிட்டது. அருவிக் குளியலுக்கு இன்னும் வேளை வாய்க்கவில்லை. ஒரு முறை குளித்துப் பார்த்துவிட்டால் பதில் சொல்லிவிடலாம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சோர்வாக இருக்கிறாரா உற்சாகமாக இருக்கிறாரா என்று கவனிப்பேன். சோர்வாக இருந்தால் தேநீரிலிருந்து சாப்பாடு வரை உபசரிப்பு வேறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது “கிட்டாதாயின் வெட்டென மறப்பது”. பிடிக்காது “சிலவற்றை மறக்க முடியாமல் தவிப்பது”.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது “என் எழுத்துக்களை ஆராய்ந்து கேள்வி கேட்காதது”. பிடிக்காதது “ராத்திரி ரெண்டு மணியாகுதுல்ல. இன்னும் என்ன கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு”. [வீட்டுக்கு வருவது ஒன்றேகால் மணிக்கு]

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அடுத்த ஆறு மாதங்களுக்கு மணைவியும் குழந்தையும் ஊரில் இருப்பார்கள் (நான் ஹைதராபாதில்). அதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தம்தான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நிற பனியன். சிறிதும் பெரிதுமாகக் கட்டம் போட்ட லுங்கி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஜெமினி தொலைக்காட்சியில் “நீ மனசு நாக்கு தெலுசு” உன் மனதை நானறிவேன் என்பது நேரடிப் பொருள். [இதே படம் தமிழில் “எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விவேக் வருகிற காட்சிகள் மட்டும் தமிழ்ப் படத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது].

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மர வண்ணத்தில் டெக்ஸ்சருடன் (texture) கூடிய பேணாவாக…

14. பிடித்த மணம்?

ஏலக்காய் மணக்கும் தேநீர் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

சேவியர்: ஐயா, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கடிதம் வரைக என்றால் அதையும் கவிதை நடையிலேயே எழுதக் கூடியவர். சிறப்பு என்னவென்றால் அதுவும் அம்சமாக ரசிக்கும்படியாக இருந்துவிடும். நீரை விடுத்து பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை. சமகாலத்தைய சமய இலக்கியங்களில் இவருடைய பங்களிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாம் கிருஷ்னப் பிள்ளை என்றே கூறலாம். இவரை அழைக்கக் காரணம் இந்தக் கேள்விகளில் ஒருசிலவற்றுக்கு நல்ல கவிதைகளே பதில்களாகக் கிடைக்கலாம்.

இந்தத் தொடரை எழுத பலரும் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யார் யார் இத்தொடரை எழுதினார்கள் என்று தெரியவில்லை. சேவியர் இதுவரை இத்தொடரை எழுதவில்லை என்று உறுதி செய்துகொண்டு இந்த அழைப்பை விடுக்கிறேன். நான் அழைக்க விரும்பும் இன்னொரு பதிவர் தம்பி விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் இதுவரை எழுதியிராவிட்டால் இந்த அழைப்பை ஏற்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

“பண்டிதன் கடிதம்” என்ற பெயரில் தமிழ்ப் பாடலாசிரியர்களுக்கு இவர் எழுதிய பகிரங்கக் கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதல்லாமல் வலைப்பதிவர்களுக்கு இவர் கூறுகிற வழிகாட்டுதல் தனிப்பட்ட முறையில் நான் இன்றளவும் பின்பற்றி வருவது. அவற்றையும் இங்கே தருகிறேன்.

அ. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.

ஆ. உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.

இ. குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.

ஈ. அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

உ. உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.

ஊ. உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் – பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.

எ. நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி, சிலம்பம்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆம், கடந்த பதினெட்டு வருடங்களாக.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

விரும்பிப் பார்ப்பதில்லை, மற்றபடி நண்பர்களோ, தம்பி தங்கையரோ அழைத்தால் எத்தகைய அடாசு படத்தையும் பார்ப்பேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இந்திரா (தெலுங்கு).

20. பிடித்த பருவ காலம் எது?

கார்காலம், பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் இணைத்து வைக்கும் கார்காலம்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நான் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை – வே. மதிமாறன்

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இரு காதல் குழந்தைகளின் படம். மாற்றுவதாக உத்தேசமில்லை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது குதிரை கணைக்கும் ஒலி. பிடிக்காதது வீடு அதிர ஒலிக்கவிடுகிற எந்த இசையாக இருந்தாலும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

வீட்டை விட்டு அதிக தொலைவு சென்றது இருக்கட்டும், என்னுடைய ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே தூரம் அதிகம். அய்யய்யோ, தவறாக நினைக்காதீர்கள். மனைவியோடு நான் இருக்கிற ஹைதராபாத் விட்டுக்கும், அப்பா அம்மா இருக்கிற தஞ்சாவூர் வீட்டுக்குமே ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தூரம். அதைச் சொன்னேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சிரித்த முகமாக இருந்தபடியே எதிரிலிருப்பவருக்குக் கொலை வெறி ஏற்றுவது. சமீபத்தில் மாட்டியவர் ஒரு டிராபிக் கான்ஸ்டெபிள்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

“நீ நல்லா இருக்கனும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்” என்று தெரிந்தே அடுத்தவர்களை நோகடிப்பதை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பழிவாங்கும் குணம். நண்பர்களை விட உறவினர்களை அதிகம் பதம் பார்த்திருக்கிறது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனித நடமாட்டம் குறைவாக இருக்கிற கடற்கரைகள். குறிப்பாக சென்னையில் திருவான்மியூர் மற்றும் சாந்தோம் தேவாலயம் பின்புறமுள்ள கடற்கரைப் பகுதிகள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

எதிரி பொறாமைப்படும் படி.

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் சொல்றேன். முகச் சவரம். இப்பக் கூட ரத்தக் காயம் இல்லாம சரியா மழிக்கத் தெரியல. மனைவியின் கேலிக்குப் பயந்தே பரம ரகசியமாக முகச் சவரம் செய்து வருகிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

எவ்விதக் குற்ற உணர்ச்சியும் ஏற்படாத வகையில் வாழ்வதே வாழ்க்கை.

நன்றி: லதானந்த் மாம்ஸ் தனிப் பதிவு போட்டு அழைத்தமைக்கு.

வாழ்க துட்டகேமுனு…

11:30 பிப இல் மே 28, 2009 | அங்கதம், அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 13 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

[துட்டகேமுனு என்பது ஒரு சிங்கள மன்னனின் பெயர். சரியான உச்சரிப்பு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.]

கவிக்கோ அப்துல் ரகுமான் ஆனந்த விகடனில் எழுதிய ஈழம் குறித்த தொடர் ஒன்றில் வழியாக இந்த ஆளுமை எனக்கு அறிமுகமானது. சிங்கள இதிகாசமான மஹாவம்சத்தின் நாயகன். ஒரு நாள் தனது மஞ்சத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான். “கொஞ்சம் வசதியாகத்தான் படுத்துக் கொள்ளேன்” என்கிறாள் அவனது அன்னை விகாரமகாதேவி (விகார என்பது புத்த விகாரையைக் குறிக்கும் சொல் என்றே கருதுகிறேன்). மகன் பதில் சொல்கிறான் “தென்புறத்தில் கடலும், வட புறத்தில் சைவமும் தமிழும் நெரிக்கும் போது உடலைக் குறுக்கிக் கொண்டு இப்படித்தான் படுக்க முடியும்” என்கிறான்.

மேலே சொல்லப்பட்ட உரையாடல்தான் மஹாவம்ச நாயகனின் அறிமுகம். இந்தியாவில் குண்டு வெடிப்பில் செத்தவனெல்லாம் அடுத்த தலைமுறையின் பாடப் புத்தகத்தில் இடம்பெறுகிறனல்லவா, அதே போல தமிழர்களை எதிர்த்தவன் என்ற காரணத்தால் நமது கதையின் நாயகன் சிங்கள காப்பியத்துக்கே நாயகனாகிறான். மொத்த மகாவம்சமும் தனி ஒருவரால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்தவர்கள் நாயகனின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தத்தமது கற்பனையையும் கதையில் நுழைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆக துட்டகேமுனுவின் நாயக பிம்பம் என்பது மற்றவர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய “கைப்புள்ளையின் வீரம்” போன்றதுதான் என்றும் அவதானிக்க நேர்கிறது.

கதையின் நாயகன் செய்த உச்சபட்ச சாதனையாக இன்றளவும் சொல்லப்படுவது “எல்லாளன்” என்ற தமிழ் மன்னனைப் போரிட்டு வென்றதுதான். அதுவும் கூட படையுடன் படை பொருதிய யுத்தமல்ல. பாட்டன் வயதுள்ள எல்லாளனை துட்டகேமுனு “ஒண்டிக்கு ஒண்டி வற்றியா” என்று அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு மோதினார். எதிர்பார்த்த மாதிரியே எல்லாளன் தோற்றுப் போனார். கள்ளியிலும் பாலிருப்பதைப் போன்று துட்டகேமுனுவின் மனதிலும் கொஞ்சம் ஈரம் இருந்தது. “முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது” என்று சாக்குப் போக்கு சொல்லாமல் தன்னோடு மோதி உயிர் துறந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ய எண்ணி, அவரை அடக்கம் செய்த இடத்தை அனைவரும் வழிபாட்டுக்குரிய இடமாகக் கருத வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அநுராதபுரத்திலுள்ள அந்த இடம் இன்றளவும் சிங்களர்களின் வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. அறியாமையினால் சிங்களர்கள் அதை எல்லாளனின் சமாதியாகக் கருதாமல் துட்டகேமுனுவின் சமாதி என்று நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தமிழனாக இருந்தாலும் எல்லாளனின் நேர்மையை மதித்துள்ளான் துட்டகேமுனு.

இவ்வாறான கதைகளால் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு துட்டகேமுனுவுக்குப் பௌத்தக் காவலன் என்ற பிம்பமும் வந்து சேர்கிறது. இந்த பௌத்தக் காவலன் பிம்பத்தின் விளைவாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் துட்டகேமுனுவின் பெயர் பாடசாலைகளுக்குச் சூட்டப்படுகிறது. துட்டகேமுனுவின் பெயரால் “கேமுனு வாட்ச் (Kemunu Watch) என்ற படைப் பிரிவு சிங்கள ராணுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பௌத்தத்தைக் காக்க அதிபர் ராஜபக்‌ஷே துட்டகேமுனு வழியில் போராட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். துட்டகேமுனு துதிபாடல் இத்துடன் நிற்க.

புலிகளின் வீழ்ச்சி தற்போது ராஜபக்‌ஷேவுக்கு இரண்டாம் துட்டகேமுனு என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. “உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் நாயுடுஹாலுடா” என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், “உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் காம்பு வீங்குதே” என்று எழுதியவன் முன்னவரை நல்லவனாக்கிவிடுகிறனல்வா. இதையே துட்டகேமுனு ராஜபக்‌ஷே சம்பவத்தில் பொருத்துங்கள்.

இன்னுமொரு இருநூறு ஆண்டுகள் சென்று இரு சிங்களர்கள் இப்படிப் பேசினாலும் பேசிக் கொள்ளலாம் (சிங்களத்தில்). முதலாமவன்: “துட்டகேமுனு என்று ஒரு மகாராஜா இருந்தார் தெரியுமா? தமிழர்களை என்னமாய் ஒடுக்கினார்.” இரண்டாமவன்: “மடையா, ராஜபக்‌ஷே என்று ஒரு அதிபர் இருந்தார், அவரது கால் தூசுக்குப் பொற மாட்டான் இந்த துட்டகேமுனு.”

ஆம் நண்பர்களே, ராஜபக்‌ஷேவை இரண்டாம் துட்டகேமுனு என்று அழைப்பதை இன்றுடனாவது நிறுத்துங்கள். வேண்டுமானால் துட்டகேமுனுவை இரண்டாம் ராஜபக்‌ஷே என்று அழைத்துக் கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், “துட்டகேமுனு நல்லவன்”. எங்கே, என்னோடு சேர்ந்து எல்லோரும் குரலெழுப்புங்கள்… “வாழ்க துட்டகேமுனு…”

கொலை வெறிக் கவிதைகள் 1754 – 4

2:23 முப இல் மே 27, 2009 | கவிதை, கவிதையைப் போல் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

ஹாய் விஜயகோபால்,

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் எனக்கிருக்கும் அறியாமையை உங்களிடம் காட்சிப்படுத்த எனக்கு விருப்பமில்லை. “பொன்னியின் செல்வனுக்கு” நன்றி. ஐந்தாம் பாகத்தை வேறு எங்கேயாவது தேடிப் படித்துக் கொள்கிறேன். தமிழ் மீதான எனது ஈடுபாட்டை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். அனைத்தும் சிறப்பாக அமைந்து, அனைவரிலும் சிறப்பானவராக வாழ வாழ்த்துகிறேன்.

______________________________________________________

Hai Vijayagopal,

Sorry for writing in English, but I’d not want to exhibit my Tamil ignorance to you. Thanks for “பொன்னியின் செல்வன்”. I’ll manage to get the fifth volume & read it. Thanks for reminding me of my liking for tamil.

All the best! Wishing to see Vijayagopal to be the “Best of all!”

Hope all your dreams come true.

தங்கள்,

XXXXX (நெஜப் பேர போட நான் என்ன மடையனா)

மேலே இருப்பது, என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழர் (பால் வேறுபாட்டை வலிந்து மறைக்கும் முயற்சி) ராஜினாமா செய்த பிறகு கடைசி நாளில் எனக்கு எழுதித் தந்த பிரிவு மடல் (ஆட்டோகிராப்). கீழே இருக்கும் கவிதை (கோவப் படாதீங்க, வேணும்னா கவித மாதிரீன்னு வச்சுக்குங்க) இதனோடு தொடர்புடையதே.

ஜனவரி பத்து,
நாம் ஒன்றாய்ப்
பணிபுரிந்த
கடைசி நாள்!

விடை பெறும் முன்பு
கையில் கிடைத்த
காகிதமொன்றில்
நீ எனக்காகக்
கிறுக்கித் தந்த வாசகங்களை
மனைவி பார்த்துவிடக்
கூடாதே என்ற பதைப்புடன்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

வேலையை விடுவதற்கு
முன்பொரு நாள்
என்னிடம்
“பொன்னியின் செல்வன்”
படிக்கக் கேட்டிருந்தாய்.
என்னிடம் இல்லாததை
நீ கேட்டும்
இல்லையென்று
சொல்ல,
மனம் வரவில்லை.
மாதக் கடைசியில்
புதிதொன்று வாங்கவும்
வழியில்லை.

“பத்து நாள்
பொறுப்பாயா?
ஊர் சென்று
எடுத்து வர
வேண்டும்”
பொய் சொன்னேன்.
சரியென்றாய்!

அடுத்த திங்கட் கிழமை
லேண்ட்மார்க்கில்
தேடி வாங்கிய
“பொன்னியின் செல்வனுடன்”
உன் இருக்கை
தேடி வந்தேன்.

ஐந்து பாகங்களையும்
ஒன்றாய்த் தரத்தான்
எண்ணியிருந்தேன்!
நூலின் எடையால்
நூலிடை நோகுமென்று
ஒவ்வொன்றாய்த்தான்
தந்தேன்.

அன்றுதான் ஒரு
விஷயம் தெரிந்தது,
நீயும் என்னைப் போல்
புதிய புத்தகத்தின்
பக்கங்களை விசிறி
வாசம் நுகர்வாய் என்று!
“அடப் பாவி,
நான் கேட்டதற்காகப்
புதியதாய்
வாங்கியிருக்கிறாய்தானே!”
பொய்க் கோபம் காட்டினாய்.

நான் வாசித்த
புத்தகம் என்று
சொன்ன பொய்யை
நிரூபிக்க,
பாகம் ஒன்றில்
வந்தியத் தேவனும்
குந்தவையும்
முதல் முறை
சந்திக்கும் காட்சியை
வரிக்கு வரி
அடிக்கோடு
போட்டிருந்ததைக்
காட்டினேன்.
ஒரு வழியாய்
சமாதானமடைந்தாய்.

ஒவ்வொரு பாகத்தையும்
படித்துத்
திருப்பித் தரும் நாளில்
அடுத்த பாகத்தைத்
தரவேண்டுமென்பது
நாம் எழுதிக்
கையொப்பமிடாத
ஒப்பந்தம்.

உன் மீதான
என் விருப்பத்தை
ஒரு காகிதத்தில்
எழுதி வைத்திருந்தேன்.
ஒவ்வொரு முறை
புத்தகம் மாற்றும்போதும்
அதை அடுத்த பாகத்தினுள்
மறைத்து வைத்துதான்
வீட்டிலிருந்து
கொண்டு வருவேன்.

புத்தகம்
உன்னைச்
சேரும்போது
கடிதம் என்
சட்டைப் பையில்
சிறைப்பட்டிருக்கும்.

எப்படியும்
கொடுத்துவிட
வேண்டுமென்ற
துணிச்சல்
ஐந்தாம்
பாகத்தில்தான்
வந்தது.

வேர்வையில் நைந்த
அக்கடிதத்தின்
உள்ளடக்கத்தை,
கடைசிப் பக்கத்தை
அடுத்த
வெள்ளைத் தாளில்
பென்சிலால்
எழுதியிருந்தேன்.

நீ விடைபெறும்
நாளும் வந்தது.
எனக்கான
பிரிவு மடலுடன்
கைப்பையிலிருந்த
ஐந்தாம் பாகத்தையும்
என்னிடம் தந்தாய்.

திருப்பித் தந்த போது
நூலின் ஒருசில
அத்தியாயங்களை
மட்டுமே
படித்திருந்தாய்.
காபி அருந்திய பின்
நீ எச்சில் தொட்டுப்
புரட்டிய பக்கங்கள்
காட்டிக்
கொடுத்து விட்டது.

“நான் சென்ற பிறகு
இரவல் தந்த நூல்
கிடைக்குமோ
கிடைக்காதோ என்று
நீங்கள் சங்கடப்
படக் கூடாதல்லவா?”
புன்னகையும் பதிலும்
ஒன்றாய் வந்தது.

கையும் மனதும்
கணக்க
பேருந்து
புறப்படும் வரை
உடனிருந்து
வழியனுப்பினேன்.

இதோ,
நாலு வருடங்கள்
கழித்து, அந்தப்
பென்சில் வரிகளை
ரப்பரால் அழித்துக்
கொண்டிருக்கிறேன்!

மனைவி அறிந்தால்
மண்டை உடையும்!

[இந்தக் கவிதையைப் படித்து என்னை அடிக்க வேண்டும் என்று கொலைவெறியோடு தேடுகிறவர்கள் என்னை அடிப்பதற்குப் பதில் நான் கைகாட்டுகிற நபரை அடிக்கத் தயாரா? ஆம் எனில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்கி அவரது வலைப்பூவுக்குச் செல்லுங்கள். வயது அறுபதானாலும் தன் வயதில் நான்கில் ஒரு பங்கே உடைய கதாநாயகியுடன் டூயட் பாடுகிற நடிகரைப் போல, பள்ளியில் படிக்கும் மகள் இருக்கும் போதும் கவிதைகளை எழுதிக் குவிக்கிற இவரால் உந்தப்பட்டுதான் நான் இப்படி எழுத நேர்ந்தது. மாமனாருக்குக் கடிதம் எழுதும்போது கூட கவிதை கவிதையாக எழுதுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தக் கவிதையை எழுதும்போது எழுத்துக்களை அடித்ததை விடவும் “எண்ட்டர்” விசையை அடித்தது தான் அதிகம். நீட்டி எழுதிட்டா பேராகிராப், ஒரே வரியை நான்கு அல்லது ஐந்தாகப் பிரித்துப் போட்டால் கவிதை என்ற அவதானத்துக்கு வந்ததற்கும் இவர் தான் காரணம். இதற்கும் சேர்த்து நன்கு கவனிக்கவும்.]

அவரது தள முகவரி. பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போனா போதும்.

உங்கள் கவனத்துக்கு: நகைச்சுவை, அல்லது கற்பனை போன்ற குறிச்சொற்கள் கொடுக்கப் படவில்லை. வெகு சமீபத்தில் கொலை வெறிக் கவுஜைகள் எதுவும் எழுதாததாலும், யாரையும் ஒரண்டை இழுக்காததாலும் இப்பதிவை நீங்கள் அன்புடன் அல்லது வெறுப்புடன் படித்தே ஆகவேண்டும்.

அளவிலா லந்துடன்,

விஜய்கோபால்சாமி

கொலைவெறிக் கவிதைகளின் முந்தைய பாகங்கள்: [பாகம் 1][பாகம் 2][பாகம்3]

இது உண்மையா…

8:25 பிப இல் மே 24, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

அல்ஜெசீராவின் தளத்தில் வெளிவந்துள்ள இந்த செய்திகளைக் குறித்து கடந்த பதிவில் பின்னூட்டமிட்ட அன்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

Tamil Tigers Confirm Leader’s Death

Obituary: Velupillai Prabakaran

நக்கீரன் vs. பதிவர்கள் – அட்டைப்பட சர்ச்சை

6:53 பிப இல் மே 24, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: ,

பதிவுலகின் மந்தை மனப்பான்மை தேர்தல் முடிவுகளைப் போலவே பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த பரப்புரையினாலும் அம்பலமாகியிருக்கிறது. இன்று என்ன பதிவு போடலாம் என்று தமிழ்மண முகப்பைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பிரபாகரன் சடலத்தைக் காட்டுகிற தொலைக்காட்சி செய்தியை அவரே பார்த்து சிரிப்பது போன்ற அட்டைப் படம்தான் தற்போது பதிவர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. என்னைக் கேட்டால் இதில் நக்கீரனின் தவறு என்று சொல்ல எதுவுமில்லை. தமிழகத்தின் ஏனைய புலனாய்வுப் பத்திரிகைகள் பலவற்றிலும் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிகை உள்ளிருக்கக் கூடிய கட்டுரைக்குப் பொருத்தமான கருத்துப் படத்தையே அட்டைப் படமாக வெளியிட்டு வரும்.

உதாரனமாக 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஹிட்லர் மீசையுடன் இருப்பது போன்ற அட்டைப் படமும், கருணாநிதி புலிகேசி உடையில் வில்லில் அம்பு பொருத்தி நிற்பது போலவும் அட்டைப் படங்கள் வந்திருந்தன. வெகு சமீபத்தில் ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படமும் நக்கீரனில் அட்டைப் படமாக வந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அறிவார்கள், ஜெயலலிதா மீசை ஒட்டிக் கொண்டும், கருணாநிதி புலிகேசி உடையிலும், ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலை அணிந்தும் போஸ்கொடுத்து அதை நக்கீரன் புகைப்படமாக எடுத்து வெளியிடவில்லை என்று.

இம்முறையும் அதே போன்று பிரபாகரன், அன்றன் பாலசிங்கத்துடன் உரையாடுகிற படத்தில் சில மாற்றங்களைச் செய்து அட்டைப் படமாக வெளியிட்டது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த பதிவர்கள் சிலர் இதை உண்மை என்று நம்பி பதிவு போட்டனர். இதில் நக்கீரன் செய்த பொறுக்கித்தனம் என்னவென்று எனக்குத் விளங்கவில்லை. மக்களின் உணர்ச்சியைக் காசாக்குகிறது நக்கீரன் என்று குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்குள் தமிழில் வரும் பெரும்பாலான சஞ்சிகைகளிலும் இலங்கை அல்லது பிரபாகரன் அல்லது புலிகள் குறித்த ஏதாவது ஒரு தொடர் வெளியாகி வருகிறது. இலங்கை என்ற தீவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடலுக்குள்ளிருந்து முளைத்துவிடவில்லை, பிரபாகரனும் புலிகளும் இலங்கை அரசை எதிர்த்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்கு முன்பு இதன் தொடர்பில் தொடர் எழுதாத சஞ்சிகைகள் இப்போது எழுதிவருவது மக்களின் உணர்ச்சிகளைக் காசாக்குகிற கயமை அல்லவா?

தமிழ்ப் புலனாய்வு ஏடுகளில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் நக்கீரன் தொடர்ந்து துணிச்சலுடன் எழுதி வருகிறது. அந்த வகையில் நக்கீரனோடு ஒப்பிட்டால் விலை போன அல்லது இருட்டடிப்பு செய்கிற பத்திரிகைகளின் செயல்களில்தான் ஊடகப் பொறுக்கித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.

என்னமோ போடா மாதவா – 16/05/2009

2:45 முப இல் மே 16, 2009 | அங்கதம், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

image

சொல்லுங்க எசமான், நான் செல்போன் திருடனா?

கடந்த வாரம் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்த நேரத்தில் நண்பன் ஒருவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த பெண்மணி தெலுங்கில் பேசியதால் நண்பண் என்னிடம் தொலைபேசியைக் கொடுத்துப் பேசச் சொன்னான். உரையாடல் மொத்தமும் தெலுங்கில், உங்கள் வசதிக்காக தமிழில் பெயர்த்திருக்கிறேன். எதிர்முணை அம்மணி “புருஷோத்தமன் இருக்காரா” என்றார். “இல்லைம்மா, என் பேரு குமார்” என்றேன் (நண்பனின் தொலைபேசி என்பதால் அவன் பேசுவது போலவே பேசினேன்). “பொய் சொல்லாதீங்க, நீங்க புருஷோத்தமன் தானே!” என்று மறுபடியும் கேட்டாள் எ.மு. அம்மணி. கொஞ்சம் சுதாரித்து, “உனக்கு என்ன நம்பர்மா வேணும்” என்றேன். அப்போதும் “இந்த நம்பர் தான், நான் சரியாத்தான் போட்டேன்” என்றார். “இல்லையம்மா, நான் புருஷோத்தம் கெடையாது போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.

இரண்டே நிமிடத்தில் அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு. குமார் இம்முறையும் என்னிடமே கொடுத்தான். பொத்தானை அழுத்திக் காதில் வைத்தால் “புருஷோத்தமன் சார், வெளையாடுறீங்க தானே” என்று அதே அம்மணி. “இல்லையம்மா, நீ தப்பான நம்பர் போட்டு பேசிக்கிட்டிருக்கே, போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன். போனைக் குமாரிடம் கொடுக்குமுன்பே மறுபடியும் அதே எண்ணிலிருந்து இன்னொரு அழைப்பு. “நம்பர் புருஷோத்தமனோடது தான், ஆனா அவரு போன நீங்க ஏன் வைச்சிருக்கீங்க” என்று போட்டாளே ஒரு போடு, உஷ்ணம் தலைகேறி “நோரு முயி (வாய மூடு). நேனு புருஷோத்தமன் காது, காது, காது…. ரெண்டு சாரி செப்பேனுகா… கட் ச்செய்…” என்று நான் கத்திய கத்தலில் சுற்றியிருந்த பத்துப் பதினைந்து பேரும் தங்கள் அலுவல் மறந்து சிரித்தனர். அதிலொருவர், “நம்பரக் குடு நயனா, வீட்ல தனியாதான் இருக்கேன்” என்றதும் மீண்டும் ஒருமுறை வெடிச் சிரிப்பு.

அவளாவது என்னை “செல்” திருடனாக்கினாள், இன்னொருவர் என்னை தரகனாகவே ஆக்க நினைத்துவிட்டார். சொல்லுங்க எசமான், நான் “செல் திருடனா”?

எஸ்.எம்.எஸ்.

நண்பர்களே, இது அந்தப் படத்தைக் குறித்த விஷயமல்ல. ஆந்திரத் தேர்தல் முடியும் வரை நான் அனுபவித்த கொடுமை. ஒவ்வொரு நாளும் ஆந்திராவின் முக்கியத் தலைவர்களிடமிருந்து என் தொலைபேசிக்கு ஓட்டுக் கேட்டுக் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது (என்னைப் போல நெறைய பேருக்கு அனுப்புனாங்கன்னு தனியா வேற சொல்லனுமா…). “வேலையிழந்த இளைஞர்களே, (அடப் பாவி, என்ன இன்னும் வேலைய உட்டுத் தூக்கலடா) உங்கள் வேலைக்கு உத்திரவாதம் தரும் ஆட்சியை அமைக்க எனக்கு வாக்களியுங்கள் – உங்கள் சந்திரபாபு”, “வளாமான ஆந்திராவை உருவாக்க காங்கிரஸ் இயக்கத்துக்கு வாக்களியுங்கள் – உங்கள் ஒய்.எஸ்.ஆர்.”, “நான் விபத்திலிருந்து குணமாகி வர உங்கள் அனைவருடைய அன்பும் பிரார்த்தனைகளுமே காரணம். மிக்க நன்றி. – உங்கள் ஜூனியர் என்.டி.ஆர்”, தேர்தல் முடியும் வரை இவ்வாறாக நாளொன்றுக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்த வன்னமிருந்தன. இன்னைக்கு முடிவுகள் வெளியான பிறகு ஜெயிச்ச கட்சிக்காரனுங்க நன்றி சொல்லி வேற சாகடிப்பானுங்களே (சொல்லுவானுங்க?), நான் என்னாத்த செய்வேன்…. தமிழ்நாட்டு சொந்தங்களே, உங்களுக்கு இது மாதிரி எதுவும் வரலியா? ஈரோட்டுத் தாத்தா அப்பவே சொன்னாரு “ஓட்டுன்னா எத வேணாலும் தருவான். பொண்டாட்டியத் தவிற” அப்படீன்னு. எனக்கென்ன வருத்தம்னா அவரு சொன்னத இவனுங்க பொய்யாக்கிருவானுங்களோன்னு தான். அட, திருந்திட்டாப் பரவாயில்லீங்க, பொண்டாட்டியையும் குடுத்துட்டானுங்கன்னா?.

இதுவும் ரிசல்ட்டு மேட்டர்தான்

அரசியல்வாதிகளைப் போலவே ரிசல்ட்டுக்குக் காத்திருந்த இன்னொரு கூட்டம் மாணவர் கூட்டம். இவுங்க பதட்டம் ரெண்டு நாளைக்கு முன்னயே தணிஞ்சிருச்சு. முதலிடத்தில் மூன்று மாணவர்கள், ஒரு மாணவி. கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. தெனமும் ஒரு கிழம் (இதுக்கு மரியாத வேறயா) ராஜ் டிவில “சுய இன்பத்தால வீணாப் போகாதீங்கடா. தமிழ்நாட்ல ஒரு மாணவன் கூட ஏன் மொதலிடம் வரமுடியல? எல்லாரும் கைப்பழக்கத்தால வீணாப் போறானுங்க” என்று தினந்தோறும் ஒப்பாரி வைக்கும். என்னமோ தமிழ்நாட்டுல அத்தன பயலும் இருபத்திநாலு மணி நேரமும் கைல புடிச்சிக்கிட்டு அலையிற மாதிரி ஒரு பில்டப் குடுத்துக்கிட்டிருந்துச்சு. ஒருத்தனுக்கு மூணு பேரு மொதலிடத்துக்கு வந்திருக்காங்க. சேலம் வரைக்கும் போய் அது மூஞ்சில யாராவது கரியப் பூசிட்டு வாங்களேன்.

என்ன கூத்துடா இது?

இந்த ஜோசியக் காரணுங்க முன்னையெல்லாம் விதவிதமா தோஷத்துக்குப் பரிகாரம் சொல்லுவானுங்க. இப்போ இவனுங்களும் ரொம்ப ஹைடெக்கா மாறிக்கிட்டிருக்கானுங்க. முந்தாநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு விஜய் டிவியில ஒருத்தன் பரிகாரம் சொல்லிக்கிட்டிருந்தான் “ஆள் காட்டி வெரல்ல மச்சமிருக்கவனுக்கெலாம் அல்ப ஆயுசாம். அதுக்காகத் திருவண்ணாமலை கோயில்ல இருக்க சித்திரகுப்தன் செலைக்கு முன்னால ரெண்டு நோட்டும் ரெண்டு பேணாவும் வாங்கி வைங்கடாங்கறான். விட்டா ஒரு லேப்டாப்ப வாங்கி எனக்கு அனுப்பி வைங்கடான்னு சொன்னாலும் சொல்லுவானுங்க. ஆறு ஏழு மாசத்துக்கு முன்னால என் நண்பன் ஒருத்தன் ஏதோ ஒரு நாடி ஜோதிட வெப்சைட்டப் பாத்துட்டு கைய ஸ்கேனர்ல வச்சு படத்த அந்த நாடிஜோதிட கம்பெனிக்கு அனுப்பி வைச்சான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு ரிப்ளை வந்திருந்துச்சு “தங்களது நாடியை ஆராய்ந்து பார்த்ததில், நீங்கள் கோதானம் கொடுத்தால் தங்களது தோஷங்கள் விலகி இன்னல்கள் தீரும் என்று தெரிய வந்துள்ளது. மாட்டின் விலையான பன்னிரண்டாயிரத்தை டிடி எடுத்து அனுப்பினால் உங்கள் சார்பில் நாங்களே கோதானம் கொடுத்துவிடுவோம். மாட்டைப் பெற்றுக்கொள்ள நாங்களே ஆட்களை ஏற்பாடு செய்துகொள்வோம்” என்று ரிப்ளையில் கண்டிருந்தது. படித்துப் பார்த்த நண்பன் சத்தமாக “ஓ” போட்டான்… (__த்தா) அடைப்புக் குறிக்குள் கோடிட்ட இடத்தில்.

தமிழ்மண ஆதரவு வாக்கு | தமிழ்மண எதிர்வாக்கு

நான் தமிழன் – குமுதத்தின் கயமை

2:03 பிப இல் ஏப்ரல் 18, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

நேற்றைய தினம் “குமுதம் – சாக்கடை நதிகளின் மகாசங்கமம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விரைவில் பதிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கட்டுரைக்கு ஆதாரமாகப் பெரிதும் பயன்பட்டவை மதிமாறன் அவர்களின் கட்டுரைகள். ஆகவே வரைவை எழுதி முடித்து தோழர் மதிமாறன் அவர்களின் கருத்தை அறிவதற்காக மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவருடைய தளத்திலேயே வெளியிட முடியுமா? என்று கேட்கும் எண்ணமும் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய ஒரு கட்டுரையை அவருடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆகவே தொடர்ந்து இது போல் கோரிக்கை வைப்பது முறையாகாது என்ற காரணத்தால் இது குறித்து அவரிடம் கேட்கவில்லை.

இன்று காலை தொலைபேசியில் அழைத்து கட்டுரை சிறப்பாக வந்திருப்பதாகவும், இது பரவலாகப் பலபேரைச் சென்றடைய வேண்டுமென்றும் சொன்னார். தொடர்ந்து இக்கட்டுரையைத் தன்னுடைய தளத்தில் வெளியிடலாமா என்றும் கேட்டார். இருவரின் சிந்தனையும் ஒன்றுபோல் இருந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.

மிகப் பொருத்தமான படத்துடன் கட்டுரையை இன்று காலையே பதிவேற்றமும் செய்திருக்கிறார். [குமுதத்தின் கயமை] இந்தத் தொடர்பைச் சொடுக்கினால் மதிமாறன் அவர்களின் தளத்திலுள்ள கட்டுரைக்குச் செல்லலாம். மீண்டும் ஒருமுறை தோழர் மதிமாறன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவிப்பு…

9:43 பிப இல் ஏப்ரல் 17, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: ,

kumudam

[தமிழீஷில் வாக்களிக்க]

[தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க]

[தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க]

நம்முடைய கவலையெல்லாம்…

9:07 முப இல் ஏப்ரல் 12, 2009 | அங்கதம், அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஈழத் தமிழினத்தின் மீதான உண்மையான அக்கறையுடன் (?!) கலைஞரவர்கள் தற்போது பேசி வருகிறார். நம்முடைய கவலையெல்லாம் கலைஞரவர்களைக் குறித்தே சுற்றிவருகிறது. ஈழத்தில் இரண்டு விதமான விளைவுகளே நடக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். ஈழம் அமைவது அல்லது விடுதலைப் புலிகள் வீழ்வது. இரண்டாவது விளைவு, அதாவது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளபடியே வரவேற்கத்தக்க விஷயம்.

கலைஞரைப் பொறுத்த அளவிலே பிரபாகரன் கவலைக்குரிய கட்டத்தில் இருக்கிறார். ஆனால் நமக்கோ பிரபாகரனைவிடவும் கலைஞரே பெரிய கையறு நிலையிலிருப்பதாகத் தோன்றுகிறது. ஈழ விவகாரத்தில் இரண்டே விதமான விளைவுகளை அவதானிக்க முடிந்தவர்களால் கூடத் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எத்தனை விதமான விளைவுகள் ஏற்படும் என்று அவதானிக்க முடியாது. இருந்தாலுல் சில விதமான விளைவுகளின் போது அதைத் தொடர்ந்து என்ன நடைபெறலாம் என்று பார்க்கலாம்.

தேர்தலில் இந்தியா முழுவதும் (தமிழகம் உட்பட) காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைப் பெறலாம். அவ்வாறாயின் கலைஞரின் நிலைமையில் யாதொரு மாற்றமும் இல்லை. செல்வாக்குள்ள அமைச்சர் பதவிகளைக் கேட்டுப் பெறுவார். இங்கே மீண்டும் “அமைச்சரவையில் காங்கிரசுக்குப் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் டெல்லிக்கு விமானம் ஏறுவார். சோனியாவைச் சந்தித்துத் திரும்புவார். இங்கே அமைச்சரவையில் பங்கு என்ற கோஷம் ஆறிப் போன பூரியாக அமுங்கிவிடும்.

அடுத்தபடியாக காங்கிரசுக்கு இந்தியா முழுவதும் பெருவாரியான இடங்கள் கிடைத்து தமிழகத்தில் திமுக பெருவாரியன இடங்களில் தோற்கலாம். அப்போது ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களுடன் கலைஞர் அமைதியாகலாம். அந்த நேரத்தில் 2004ல் நாற்பதையும் வென்று தந்தவன் என்ற பழைய பெருமையெல்லாம் அப்போது வேலைக்காகாது. தமிழகத்திலும் “ஆட்சியில் பங்கு” கோஷம் மீண்டும் தலையெடுக்கும். டெல்லி மேலிடத்திலும் “கொடுதால்தான் என்ன” என்பார்கள். ஐந்து பதவிகள் என்ற பழைய கணக்கையெல்லாம் அப்போது சொல்ல முடியாது. பத்திலிருந்து பதினைந்து அமைச்சர்கள் வரை கொடுத்தே ஆக வேண்டும். அப்போதுதான் 2011 வரை கலைஞரின் நாற்காலியில் நாலு காலும் தரையிலிருக்கும்.

காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் போகலாம். இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி உள்ளிட்ட சாதனைகளைச் சொல்லித் தமிழகத்தில் திமுக பெரும்பாலான தொகுதிகளை வென்றிருக்கலாம். இப்போது கலைஞர் முன்பு இரண்டு வாய்ப்புகள். வசதியாக ஆட்சியமைக்கும் கூட்டணியிடம் சரணடையலாம். ஆட்சியமைப்பது பாஜக வாக இருந்தால், உடனடியாகத் தனது ஆதரவைக் கொடுத்துவிடவும் முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக திமுக வை ஆதரிக்க பிஜெபி யிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அதனால் 2011 வரை பொறுமையாக இருக்க வேண்டும். டெல்லி ஆட்சிக்கு கலைஞரின் தயவு தேவையில்லை என்பதாலும் மீண்டும் “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். இப்போது திமுக வின் குடுமி மட்டும்தான் காங்கிரஸ் வசம். கொடுத்துதான் ஆகவேண்டும், இன்னும் இரண்டாண்டு ஆட்சி மிச்சமிருக்கிறதே.

மூண்றாவது அணி ஆட்சியமைக்கலாம். அப்போதும் காங்கிரஸ் தரப்பிலிருந்து “ஆட்சியில் பங்கு” கோஷம் எழுப்பப்படலாம். காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காவிட்டால் அப்போதும் சிக்கல்தான். அத்துடன் இன்னொரு சிக்கலையும் திமுக சந்திக்க வேண்டும். மூண்றாவது அணியில் செல்வாக்கு மிக்க அதிமுக தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நிர்பந்திக்கலாம். ஆட்சிக் கலைப்புக் கோரிக்கைக்கு மூண்றாவது அணி ஆட்சி செவிசாய்த்தால் அப்போதும் கலைஞருக்கு சிக்கலே. திமுக வின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இந்த நேரத்தில் முக்கியமாகிறது. அதிமுக வை விட அதிகமாக அல்லது சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் மூண்றாவது அணிக்கு ஆதரவளித்துவிட்டு பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மாநில ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

மேற் சொன்ன விளைவுகள் ஏதொன்று நடந்தாலும் கலைஞருக்குப் பெருத்த சங்கடமே காத்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கட்சியின் வடிவத்தில். ஆகவே கலைஞரின் நலவிரும்பிகளாகிய நாம் காங்கிரஸ் கட்சியிடம் வைக்கும் கோரிக்கையெல்லாம் “தேர்தலுக்குப் பிந்தைய விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும், கலைஞருக்குத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும்” என்பதுதான்.

திமுக அபிமானிகளே, பதிவை நன்றாகப் படியுங்கள். ஒரு இடத்தில் கூட கலைஞரைக் கருணாநிதி என்று குறிப்பிடவில்லை.
[தமிழீஷ்] [தமிழ்மண ஆதரவு] [தமிழ்மண எதிர்ப்பு]
தொடர்புடைய பதிவுகள்:
1. குளோபன்: பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி பேச்சுக்கு எனது பின்னூட்டங்கள்
2. வினவு: கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
3. குண்டுமணி: புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அழிந்துவிட்டதா..?!
4. என்வழி: கருணாநிதியின் விஷமத்தனம் – பழ. நெடுமாறன்
தொடுப்புகளில் உள்ள பதிவுகளின் உள்ளடக்கங்கள் அவற்றை எழுதியவர்களில் சொந்தக் கருத்து.

மக்களே, தமிழக மக்களே

11:35 முப இல் ஏப்ரல் 10, 2009 | அங்கதம், அரசியல் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

image

காங்கிரஸ் கட்சி “ஜெய் ஹோ” பாடலை தங்களது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறது. சளைக்காமல் பா.ஜ.க.வும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிரச்சாரப் பாடலை உருவாக்கியுள்ளது. இவர்களில் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவிருக்கும் மக்களுக்காக எந்த பாடலும் இல்லை. அந்த வேதைனையின் விளைவாய் உருவானதே இப்பாடல். அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் பாடல். ரீமிக்ஸ் எழுதியும் வெகுநாளாகிவிட்டதால், ரீமிக்ஸ் எழுதவும் என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்பாடலை எழுதியுள்ளேன். எனக்கு இசையமைத்துத் தந்த இசைஞானிக்கு (?!) இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!! இனி தொடர்வது பாடல்…

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே – நாங்கள்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே…

தேர்தலென்னும் செலவோடு செல்வாக்கும்
வசதியும் இணைத்தொரு பதவி தரும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே (2)

ஐந்தே ஆண்டுகளில் வந்ததே… – தேர்தல்
ஆணையம் தலைவலி தந்ததே… (2)

உண்மையை நீரறியாததால்… (2)
சிறுபொம்மையாய் உமையெண்ணி
உம்மிடம் உம்மிடம்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே (2)

அத்தனை கட்சியும் கூட்டணியில் – எனக்
கெத்தனை தொகுதிகள் தமிழகத்தில்… (2)
வெறும் நோட்டுகள் உள்ளது என்னிடத்தில்
வேண்டிய ஓட்டுகளோ அது உம்மிடத்தில்

ஒருமுறையா இருமுறையா
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அலையவிட்டாய்
பணம் கொடுத்தேன்
பொருள் கொடுத்தேன்
பதவியில் எனைக் கொண்டு
அமரவைத்தாய்

செலவுக்குக் கணக்கு கேட்டு
தேர்தலாணையமும் துரத்துதே
தேர்தல் நிதி நிதி நிதி என்று
வசூலுக்கு சென்று மனம் சலித்ததே

கரண்சிகளை நீட்டுவோம் – ஓட்டு
எங்களுக்கே போடுவீர்
உம் திருக்கரம் எங்கள் சின்னம்
தொடுவதில் எதிர்காலம்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே

தேர்தலென்னும் செலவோடு செல்வாக்கும்
வசதியும் இணைத்தொரு பதவி தரும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே தமிழக மக்களே

சவுண்ட் மிக்சிங்கில் நல்ல ஞானமுள்ளவர்கள் யாராவது இப்பாடலை இசையுடன் இணைத்துத் தந்தால் மிக்க மகிழ்ச்சி. அவ்வாறு செய்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைக்கவும். இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஓட்டளிக்க மறந்துவிடாதீர். 🙂 ஹி ஹி எல்லாம் ஒரு வெளம்பரந்தான்…

[தமிழீஷ்] [தமிழ்மண ஆதரவு] [தமிழ்மண எதிர்ப்பு]

என்னமோ போடா மாதவா – 03/04/2009

6:51 பிப இல் ஏப்ரல் 3, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

சொன்னதை மறந்தோர்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இருவரைக் குறித்த தகவல் இது. ஒருவர் தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே பிறவாதவர். இன்னொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் பதவியேற்ற புதிதில் செய்த அறிவிப்பில் செய்யத் தவறியவை குறித்தே சொல்ல வருகிறேன்.

தி.மு.க. மேடைப் பேச்சாளர் ஒருவர் நம்முடைய முதல் பிரபலத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார், “நம்ம மணிசங்கரய்யர் லாகூரில் பிறந்தவர் என்று சொன்னார்கள், எனக்கென்னவோ நாகூரில் பிறந்தவர் என்றுதான் கேட்டது” என்று. அவர் லாகூர்காரரா நாகூர்காரரா என்பதல்ல இங்கே கேள்வி. காங்கிரஸ் அரசின் தொடக்க காலத்தில் பெட்ரோலியத் துறை மணிசங்கரய்யர் வசமிருந்தது. அப்போது, சமுதாய சமைற்கூடங்களை ஊர்தோறும் அமைக்க உள்ளதாக அறிவித்தார். சோதனைக் கட்டமாக மயிலாடுதுறையில் செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த சமையற்கூடங்களில் ரூ. 4 செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்குள்ள எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி சமைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இடையே அவரிடமிருந்து பெட்ரோலியத் துறையும் பறிக்கப்பட்டது. திட்டம் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை. குறைந்தபட்சம் மயிலாடுதுறை வாசிகள் இதைக் குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தவர் மாண்புமிகு இந்நாள் ரயில்வே அமைச்சர் லாலு. லாலு பதவியேற்ற புதிதில் “ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இனி மண்பாண்டங்களில் மட்டுமே பாணங்கள் விற்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்தபடி சில நாள் விற்கப்பட்டதாக வடநாட்டு நண்பர்கள் சிலர் கூறினர். தன்னைச் சந்திக்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குக் கூட ஒருமுறை மண் குவளைகளில் அருந்தக் கொடுத்தார். குயவர்களின் நலனைக் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்சமயம் அந்தத் திட்டம் செயல்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு அகல் விளக்கு செய்யத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டு ஒரு தேநீர் குவளையைச் செய்யலாம். ஆகவே அடக்கவிலை ஒரு பிரச்சனையில்லை. ஆனால் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.

காணாமல் போனோர்:

காணாமல் போனவர்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு பகுதிகளுடன் முடித்துவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சிலர் தொடருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் தனிப்பதிவாக இல்லாமல் இந்தத் தொடரில் ஒருவர் அல்லது இருவரைப் பற்றி எழுதுகிறேன்.

கண்ணதாசனின் மக்களில் அதிகப் பிரபல்யம் உடையவர் காந்தி கண்ணதாசன். அவரை அடுத்து நடிகை, கவிதாயினி, பேச்சாளர் விசாலி. கடைசியாக தியாகராய நகர் பகுதி மக்களுக்கு அங்கே உணவகம் நடத்திவரும் அவருடைய இன்னொரு மகளைப் பரவலாகத் தெரியும். மூவருள் விசாலி அவர்களைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறேன். பாலசந்தர் இயக்கத்தில் “வானமே எல்லை” என்ற படத்தில் இவருடைய திரையுலக அரங்கேற்றம் நிகழ்ந்தது. விசாலி கண்ணதாசன் திருமணத்திற்குப் பிறகு விசாலி மனோகரன் ஆனார். பேச்சாளராகி வாயை வாடகைக்கு விடுவதற்குத் தோதாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கருணாநிதி குமரியில் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த பிறகு அதே மாவட்டத்தில் இவருடைய கூட்டமொன்று நடந்தது. அதில் இப்படிப் பேசினார், “வள்ளுவர் சிலை என்ன சிலுக்கு மாதிரி இடுப்ப வளைச்சிக்கிட்டு நிக்கிது”. கண்ணதாசன் மகளா இப்படி என்று அதிர்ந்தாலும் வனவாசம் என்ற பெயரில் வசைவாசம் எழுதியவரின் மகள்தானே என்று அனைவரும் சமாதானமாயினர். தற்சமயம் இவரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லை. தெரிந்தோர் கூறுக தொல்லுலகம் தெளிவுறவே…

அவரைத் தொடர்ந்து வரவிருப்பவர் ஜான் டேவிட். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனான நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜான் டேவிட். கடலூர் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. ஜான் டேவிட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சாட்சிகள் திருப்திகாரமாக இல்லை என்று கூறி சந்தேகத்தின் பலன் ஜான் டேவிடுக்கு வழங்கப்பட்டது. காவல் துறை இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கின் நிலவரம் தெரியவில்லை. இதன் பின்னர் ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராகிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. பத்திரிகைகளையும் கவனமாகத் தவிர்த்து வருகிறார்.

வாக்களிக்க இருப்போர்க்கு:

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று 49-ஓ வுக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். 49-ஓ மீண்டும் நம் மீது ஒரு தேர்தலைத்தான் திணிக்கும். கட்சி என்ற அமைப்பு தனிமனிதர்களை மட்டுமே வளர்த்து விடுகிறது. ஆகவே அது தி.மு.க.வாக இருந்தாலும், அ.தி.மு.க.வாக இருந்தாலும், கேடு கெட்ட காங்கிரசாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும், மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்லிக் கொண்டே அதே ஓட்டுப் பொறுக்கி வேலையைச் செய்யும் இரு கம்யூனிஸ்ட்டுகளானாலும், சேலை வேட்டி அண்டர்வேர் என்று சகலத்தையும் மாற்றி மாற்றித் துவைக்கும் பா.ம.க.வாக இருந்தாலும், கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் நல்ல தகுதியுள்ளவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள். தகுதி என்று குறிப்பிடுவது பாராளுமன்றத்தில் தொகுதியின் தேவைகளை எடுத்துக் கூறுமளவுக்குக் ஆங்கில அல்லது ஹிந்தி மொழியறிவு, நிதி மேலாண்மை, மக்கள் தொடர்பு, அரசியலறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவையே. முக்கியமான விஷயம், கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களைத் தயை கூர்ந்து நிராகரித்துவிடுங்கள். இவர்களில் பலர் அல்லது அனைவரும் ஜெயித்த பிறகு மீண்டும் தாய்க்கழகத்தில் இணைகிற அபாயம் இருக்கிறது.

அரசியலமைப்பில் எந்த இடத்திலும், பெரும்பாண்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவரே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்று கூறப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோரால் தேர்வு செய்யப்படுபவரே முதல்வர் அல்லது பிரதமர் ஆகமுடியும் என்று தான் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே வாக்காளர்களே இம்முறை கட்சிகளைப் புறக்கணித்துப் பாருங்கள். சுயேச்சை உறுப்பினர்கள் கட்சிகளுக்கு விலை போய்விட மாட்டார்களா என்று கேட்கலாம். போகிறார்களா இல்லையா என்பது வாய்ப்பளித்தால்தானே தெரியும்? ஐந்து ஐந்து ஆண்டுகளாகப் பலமுறை ஏமாந்தாகிவிட்டது. இன்னொரு ஐந்தாண்டு பார்போமே.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன், இனி எல்லாம் உங்கள் கையில்…

தமிழீஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

நறுக்*

5:30 பிப இல் ஏப்ரல் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

திருமங்கலம் இடைத் தேர்தல் போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து யாரும் ஜெயிக்க முடியாது.

வை.கோ.

ஆமாங்க, திருமங்கலத்துல குடுத்த மாதிரி குடுத்தா ஜெயிக்க முடியுமா? அதவிட அதிகமா குடுத்துத்தான் ஜெயிக்கனும். வெலவாசி ஏறுதுல்ல…

இலங்கையை 200 ஆண்டுகள் ஆண்ட இங்கிலாந்து நாட்டுக்கு, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.

பழ. நெடுமாறன்

எதுக்கெடுத்தாலும் தார்மிகம், தார்மிகம்னு சொல்றீங்களே, தார்மிக அடிப்படயில அதக் கொஞ்சம் நிறுத்தக் கூடாதா?

அதிமுக உட்பட எல்லா கட்சிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.

அன்புமணி ராமதாஸ்

கூட்டணி வெக்கிற அத்தன பேரும் இதத்தான சொல்றானுவ. வித்தியாசமா எவனாவது கள்ள ஒறவு இருக்குன்னா சொல்றான்?

தனியாகக் கட்சி நடத்த முடியாமல்தான் திமுகவில் இணைகிறோம். இதில் வெட்கப்பட எதுவுமில்லை!

எல். கனேசன்

எல்.ஜி. அண்ணே, பொய் சொல்லக் கூடாது. தனியா கட்சி நடத்த முடியாதாம்ல… கொஞ்ச நாள் பொறுங்க… நீங்க முடியலைன்னு சொன்ன வேலைய புரட்சிப் புயல் கில்லி மாதிரி செய்வாரு பாருங்க…

டாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.

விஜயகாந்த்

கேப்10, இன்னும் ஹீரோவா நடிச்சு பொதுமக்களத் தொவைக்கிறீங்களே, அத நிறுத்திட்டு இதையெல்லாம் பேசக் கூடாதா… சரி… தேர்தலப் புறக்கணிக்கனும்னு சொன்னீங்களே… மொதோ ஆளா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருக்கீங்க… பல்ல வெளக்குங்க கேப்10… நாறுது…

சுயமரியாதை கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பேன்!

நடிகர் கார்த்திக்

அப்போ நாமக்கட்சி… மன்னிக்கனும், நாடாளும் மக்கள் கட்சி யாரோடயும் கூட்டணி வைக்கப் போறதில்லையா! டேய் மணியா… போற போக்கப் பாத்தா ஊட்டிக்குத் தனியாத்தான் போகனும் போலருக்கே…

காங்கிரஸ் கட்சிக்குத் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், வாக்காளர்கள் இல்லை!

லாலு பிரசாத் யாதவ்

அப்புறம் எதுக்குண்ணே அந்த “மூணு சீட்டு” வெளையாட்டு விளையாண்டீங்க… அடுத்த ஸ்டேட்டப் பாருன்னு அப்பவே சொல்லிருக்கலாம்ல!

நாடளுமன்றத் தேர்தலில் தலைமை எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொல்லுகிறதோ, அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன்!

மு.க. அழகிரி

ஆக மொத்தம் தலைமை உங்களப் போட்டியிடச் சொல்லியே ஆகனும்னு சொல்றீங்க…

தங்கபாலு என்று யாராவது அரசியலில் இருக்கிறார்களா? எனக்கு அவரைத் தெரியாது!

வை.கோ.

டேய், இங்க வை.கோ., வை.கோ.ன்னு ஒரு மானஸ்தன் இருந்தாருடா… அவரத்தான்டா தேடிக்கிட்டிருக்கேன்…

image *ஃபேண்டா ஆப்பிளுக்கும் இந்தப் பதிவுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

    என்ன கூத்துடா இது!

    3:11 முப இல் மார்ச் 29, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , ,

    image எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும் அணைப்பதா அல்லது எந்த மின்சாரக் கருவிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதா என்று?

    சன் தொலைக்காட்சியின் செய்தியிலும் இத்தகவல் அறிவிக்கப்பட்டது. ஆனால் விளக்குகள் மட்டுமா அல்லது அனைத்து மின் கருவிகளுமா என்று அதிலும் கூறவில்லை. அதிலும் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தின் நிர்வாகி “நாங்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறோம். அந்த ஒரு மணிநேரமும் எங்கள் உணவகம், மது அருந்துமிடம், சமையல் கூடம் எங்குமே மின் விளக்குகள் பயன்படுத்தப் போவதில்லை” என்றார். இத்துடன் நிறுத்தியிருந்தால் நல்லது. மேலும் ஒரு வாக்கியத்தையும் சொன்னார். “மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்துவது ரொமாண்டிக்காக இருக்கும்”. இது போன்ற பண்ணாடைகள் எதைச் செய்தாலும் தங்களுக்கென்று அதில் ஒரு ஆதாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போலிருக்கிறது.

    பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் திடீர் சூழலியல் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறன. மதிமாறன் அவர்கள் ஒரு கட்டுரையிலே கார்ல் மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டியிருப்பார் “முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் தரும் செயல் என்று தெரிந்தால் தனக்கான கல்லறைக் குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்” என்று. அப்படித்தான் இந்த நிறுவனங்களும் தங்களது சிக்கனத்தை சூழலியல் ஆதரவு என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. நண்பன் ஒருவனின் அலுவலகத்தில் வழக்கமாக கைதுடைக்கும் காகிதம் வைக்குமிடத்தில் காகிதங்கள் இல்லை. மாறாக அங்கே ஒரு சிறிய சுவரொட்டி. “வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். காகிதத்துக்குப் பதிலாக சூடான காற்றை உமிழும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவீர்” என்று அதில் அச்சிட்டிருந்ததாம்.

    வழக்கமாக கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு கைகளை மட்டும் கழுவிக் கொள்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. என் நண்பனோ சட்டை, கால்சராய், காலுறை இவற்றுக்கு வெளியே தெரிகிற எல்லா இடங்களையும் கழுவிக் கொள்பவன். அதாவது கைகளுடன் சேர்த்து முகத்தையும் கழுவிக் கொள்பவன். அன்றைக்கு முகத்தைக் கழுவிய பிறகுதான் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறான். மூ… மன்னிக்கவும், ஆத்திரத்தில் முகம் சிவந்துவிட்டது. ஈரக் கையுடன் தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அதே சுவரொட்டியில் “மின்சாரமும் ஒரு வளம்தான் என்று சொல்லி வெகு விரைவில் இந்த சூடான-காற்றடிக்கும் இயந்திரத்தையும் நிறுத்திவிடாதீர்கள். பின்குறிப்பு: முகம் கழுவிய பிறகு இந்த இயந்திரத்தினுள் என்னுடைய முகத்தை நுழைக்க முடியவில்லை.” என்று எழுதிவிட்டு வந்தான். அவனது பெயரிலிப் பின்னூட்டத்திற்குப் பிறகு காகிதங்களும் வைக்கப்படுகின்றனவாம்.

    இன்னொரு நண்பனின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் குளிர்சாதனத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவார்களாம். அவனுடைய குழுவில் வெகு சிலர் மட்டுமே இரவுப் பணியில் இருப்பதால் மொத்தத் தளத்துக்கும் குளிர்சாதனத்தை இயக்க முடியாதாம். கொடுமை என்னவென்றால் அவன் பணிபுரியும் தளம் தரை மட்டத்துக்கு அடியில் இருக்கிறது. புழுங்கி சாக வேண்டியதுதான்.

    சரி, விட்ட இடத்துக்கே வருவோம். இந்த “எர்த் ஹவர்” செய்தியைக் கூறிய சன் தொலைக்காட்சி 8:30 முதல் 9:30 மணி வரை ஏன் ஒளிபரப்பை நிறுத்தவில்லை (கேள்வி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்)? அந்த நேரம் நீ என்னடா செய்தாய் என்று கேட்க இருப்பவர்களே, பொறுமை! எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டிவியை மட்டும் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் விளக்குகளை மட்டும் தான் அணைக்கச் சொல்லியிருந்தனர். தாகம் எடுத்தபோது குளிர்சாதனப் பெட்டியைக் கூடத் திறக்கவில்லை, அதற்குள்ளும் ஒரு விளக்கெரியுமே. 9:30 ஆன பிறகு தான் தண்ணீர் குடித்தேன்.

    “எர்த் ஹவர்” எல்லாம் எடிசன் நினைவைப் போற்றுவதற்கு மட்டுமே மின்வெட்டு அனுசரிக்கும் நாடுகளுக்குச் சரி. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்”? அதுவும் இரவு 8:30 முதல் 9:30 வரை (பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வேறு நடைபெறுகின்றன).

    என்னமோ போடா மாதவா 21/03/2009

    12:23 முப இல் மார்ச் 22, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
    குறிச்சொற்கள்: , , , , , ,

    இந்த ஆண்டு தமிழகத்தில் நூறு கைதிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக சென்னை புழல் சிறைச்சாலையில் தனியே ஒரு தேர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இரவுகளில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்கும் கைதிகளை உற்சாகப்படுத்த தேநீர் மற்றும் சப்பாத்தி ஆகியவையும் வழங்குகின்றனர். சிறைச்சாலைகள் உருவானதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருவது போல் தோன்றுகிறது. சல்யூட் நட்ராஜ் சார்.

    பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு மூண்று இடங்கள் மட்டுமே தரப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் லாலு. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் தனது நிலையில் உறுதியாக இருந்து வருகிறார். கூட்டணியே முறிந்த போதும் முடிவில் உறுதியாக இருக்கிறார். பாராட்டுக்கள். மிரட்டல் சுயாட்சியாகவாவது மாநில சுயாட்சி அமைந்தாலும் பரவாயில்லை போலிருக்கிறது. லாலு பெருமளவு இடங்களைக் கைப்பற்றினால் அது நடந்தேவிடும். தமிழக நிலைமையைப் பொருத்திருந்து பார்ப்போம்.

    வருண்காந்தி இந்திய அளவில் கடந்த வாரத்தின் சூடான இடுகை. மூளை (அவருக்கு இருக்குமா?) சூடாகிப் பேசிய விஷயங்களால் பல அரசியல் கட்சிகளிடமிருந்து சூடான கருத்துக்கள் வந்த வன்னமிருக்கின்றன. வருணின் உரை அடங்கிய வீடியோ காட்சி விஷயம் சூடான இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆறாயிரம் முறை பார்வையிடப் பட்டிருக்கிறது. சூடு ஆற இரண்டொரு நாட்களாலாம்.

    இந்த விஷயம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே வர வேண்டியது. இரண்டே பகுதிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததால் இங்கே எழுதுகிறேன். இம்முறை இந்த அரசியல் பிரபலத்துக்கு அவருடைய கட்சி சீட் தரவில்லை. அதனால் கடந்த முறை போட்டியிட்ட முசாபர்பூர் (பீகார்) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம். கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படத் தேவையில்லை. தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஆடைகளைக் களையச் செய்து சோதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்தான் நான் குறிப்பிடும் அரசியல் பிரபலம்.

    தங்கபாலு எங்கே போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாடார் பேரவை அறிவித்துள்ளது. கள் இறக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்திய தங்கபாலுவைக் கண்டிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். புதுவை மாநிலத்தில் சாராயத்தை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திவரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கேட்டுப் போராடுவது எத்தனை பெரிய கயமை.

    பிட்டடித்துப் பிடிபட்ட மும்பை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். வேதனைக்குரிய நினைவு என்றாலும் என்னுடைய பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. பொதுத் தேர்வுக்கு முந்தைய கடைசி வேலை நாளில் தலைமை ஆசிரியர் மாணவர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். முடிக்கும் போது “பரிட்சையில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். முறைகேடுகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு பள்ளியின் மானத்தை வாங்காதீர்கள்” என்றார். புரிய வேண்டிய விதத்தில் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வெளியேறினர்.

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு – இறுதிப் பாகம்

    7:42 பிப இல் மார்ச் 5, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: ,

    1. செரீனா: குட்டைப் பாவாடையுடன் கால் மேல் காலிட்ட படி, ஒரு ஏர் ஹோஸ்டசுக்குரிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்துக்குப் பக்கத்தில் “அழகி செரீனா கைது” என்று செய்தித் தாளில் சில ஆண்டுகள் முன்பு செய்தி வந்தது.  இவரது பெயர் செரீனா தானா என்பதிலேயே பெரும் குழப்பம். நக்கீரன் ஏடு மட்டும் இவரது பெயர் ஜனனி என்று தொடர்ந்து சொல்லி வந்தது. இவரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் இருந்த கொஞ்சம் நோட்டுகளின் சீரியல் நம்பர், ரிசர்வ் வங்கி சில ஆண்டுகள் கழித்து அச்சிடுவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த சீரியல் நம்பர்கள் என்று செய்தி வெளியானது. பின்பு ரிசர்வ் வங்கி அந்தத் தகவலை மறுத்தது. தற்சமயம் மதுரையில் வசிப்பதாகக் கேள்வி.

    2. டி.டி.வி. தினகரன்: பெரியகுளம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அம்மாவின் கோபப் பார்வையால் பதவியை இழந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் இழந்தது பொருளாளர் பதவியை. செல்வாக்கு மிக்க மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மீது ஃபெரா வழக்கு ஒன்று இருந்ததாக ஞாபகம். (தஞ்சையிலிருக்கும் புகழ்பெற்ற விநோதகன் மருத்துவமணையின் நிறுவனர் டாக்டர் வினோதகன் தினகரனின் தாய் மாமன்.)

    3. குமரிஅனந்தன்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். பெரியவர் குமரிஅனந்தன் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் டிவியில் நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவருடைய மகள் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். திமுக, வாரியத் தலைவர் பதவிகளை காங்கிரசுடன் பகிர்ந்துகொண்ட போது இவருக்கு அடித்த ஜாக்பாட், பணை வாரியத்தின் தலைவர் பதவி. விசிட்டிங் கார்ட பணை ஓலையில அடிச்சு வச்சிருக்காறாம். கள்ளு இறக்க விடாம பணை தொழிலாளர்கள் வயித்திலயும் அடிச்சுக்கிட்டிருக்கார். இந்தப் பதவிய போயும் போயும் இவருக்கா கொடுக்கனும் என்று பணைத் தொழில் செய்துவரும் பலரும் அங்கலாய்க்கின்றனர்.

    4. நடிகை ஜெயசித்ரா: பழம்பெரும் தமிழ் நடிகை என்றே சொல்லலாம். சென்னையில் வசித்த காலத்தில் மெரினா கடற்கரையில் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு வருவார், அப்போது பார்த்ததுதான். காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் சில மூவர்ண போஸ்டர்களில் இவருடைய பெயரையும் பார்க்கலாம். அம்மா அக்கா வேடங்களில் கூடத் தற்சமயம் தலைகாட்டுவதில்லை.

    5. கார்த்திக் ராஜா: ராஜா வீட்டுக் கன்றானாலும் மூத்தது மோனை என்று காட்டிவிட்டார். ராஜாவின் வாரிசு என்ற எதிர்பார்ப்பை யுவன் நிறைவு செய்த அளவுக்கு கார்த்திக்கால் செய்ய இயலவில்லை. வளம் பெற வாழ்த்துக்கள்…

    6. வழக்கறிஞர் ஜோதி: அம்மாவின் கோபப் பார்வையால் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர். இந்த மடம் போனால் சந்தைமடம் என்று அதிமுக வில் கட்டம் கட்டப்பட்ட ஒரு வாரத்துக்குள் திமுகவுக்கு வந்தவர். வழக்கறிஞர்கள் போராட்டம் பரபரப்பாக நிகழ்ந்துவரும் இந்த சமயத்திலும் இவரைப் பற்றிய தகவல் எங்கும் வருவதில்லை. ஜோதி என்றால் வெளிச்சம், திமுக வுக்கு வெளிச்சம் வந்திருக்கிறது என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு இவர் கையில் தந்ததென்னவோ மூண்று ரூபாய் அடையாள அட்டை மட்டுமே. கொடுத்தது அட்டையா அல்வாவா, தீனா மூனா கானாவுக்கே வெளிச்சம்.

    7. பாடகர் மனோ: தற்சமயம் தமிழில் பாடல் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. கடைசியாக சிவாஜி படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்தார். சிங்காரவேலன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், பாலச்சந்தரின் “ஊஞ்சல்” தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். இவரது மகன் ஷகீர் இணையதளக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டது பரவலாக வெளியில் வராத விஷயம்.

    8. எல். கனேசன்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அவைத் தலைவர். இவருடைய மகன் எல்.ஜி. அண்ணா, தஞ்சாவூரில் எஸ்.என்.எம். உபயதுல்லாவை எதிர்த்துப் போட்டியிட்டு, எதிர்பார்த்த படியே வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர். தவில்னு சொன்னா நாயனமும் ஞாபகம் வற்ற மாதிரி இவர் பேர சொன்னா செஞ்சி ராமச்சந்திரன் பேரும் ஞாபகத்துக்கு வரும். ரெண்டு பேரும் திமுக வில் இணையப் போறோம், இணையப் போறோம்னு பல மாசமா சொல்லிக்கிட்டிருந்தாங்க. இணைஞ்சாங்களா தெரியல. (பதிவை எழுதி வரைவில் வைத்த இரண்டாவது நாள், “மார்ச் 17 போட்டி மதிமுக திமுகவில் இணையும்” என்று தொலைக்காட்சியில் செய்தி. ஏன்யா என் வயித்தெரிச்சல கெளப்புறீங்க. இந்த லட்சணத்துல ஒரு லட்சம் தொண்டர்களோட இணையுறாங்களாம். காமராஜர் அரங்கம் பத்தாதுங்கறதால இப்போதைக்கு ஆயிரம் பேரோட மட்டும் இணையுறாங்களாம்.)

    9. பேராயர் எஸ்றா சற்குணம்: கலைஞரின் உற்ற நண்பர். சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஒரு நரை கூட இல்லாமலிருந்தவர் திடீரென தலையெல்லாம் நரையாகத் தொலைக்காட்சி செய்திகளில் முகம் காட்டத் தொடங்கினார். நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது தலைக்கு டை உபயோகிப்பதை நிறுத்திவிட்டாராம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் முன்பு போல் பொது நிகழ்ச்சிகளில் இவரைப் பார்க்க முடியவில்லை.

    10. தீப்பொறி ஆறுமுகம்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக முகாமிலிருந்து அதிமுகவுக்குத் தாவினார். அதுவரை கலைஞர் என்றும் ஜெயலலிதா என்றும் சொல்லி வந்தவர் மிகுந்த சிரமத்துக்குப் பிறகு கருணாநிதி என்றும் அம்மா என்றும் சொல்லப் பழகிக்கொண்டாராம். சன்மானம் சரியில்லாததால் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவில் இணைவதாகச் சொல்லிச் சென்றார். ஆள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

    11. நடிகை மும்தாஜ்: டி.ராஜேந்தரின் அறிமுகம். மோனிஷா என் மோனோலிசா படத்தில் தொடங்கியது இவரது கலைச்சேவை. தெற்றுப் பல்லை சரி செய்துகொண்டு மலபார் போலீஸ் படத்தில் நடித்தார். எஸ்.ஜே. சூரியா தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்தது “கட்டிப்புடி கட்டிப்புடிடா” என்ற பாடல் மட்டுமல்ல, ______________. (கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள். எதையாவது எழுதினால் பெண்ணுரிமை ஆர்வலர்கள் என்னைக் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள்.)

    12. ஆனந்தகீதன்: சன் டிவியின் அறிமுக காலத்தில் இவரும் ஒரு தொலைக்காட்சிப் பிரபலம். வார்த்தை விளையாட்டு, ஹீரோ ஹீரோயின் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியில் இவர் கேட்கும் ஏழு கேள்விகளுக்குள் இவரது மனதிலிருக்கிற பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதே கான்செப்ட் பின்னர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் பயன்படுத்தப்பட்டது.

    13. ஈ. மாலா: யார் பார்த்தாலும் “நம்ம வீட்டுப் பொண்ணு” என்று சொல்லக் கூடிய முகம். சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் குறித்து எதுவும் நினைவில் இல்லை. ஆனாலும் மறக்க முடியாத முகம். திரைப்பட இயக்குனர் ஒருவரை மணந்து இல்லத்தரசியாக இருக்கிறாராம்.

    14. சுரேஷ் சக்ரவர்த்தி: இவரும் சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரே. “அழகன்” படத்தில் அதிராம்பட்டினம் சொக்குவாக (சீக்கு மாமா) வந்து சிரிக்க வைத்தவர். இவரது டிக் டிக் டிக் நிகழ்ச்சி நான் தவறாமல் பார்த்து வந்த நிகழ்ச்சி. ஒரெ செயலை ஒரு நிமிடத்துக்குள் எத்தனை முறை செய்வது என்பதுதான் சவால். ஒவ்வொரு வாரமும் புதிய புதிய சவால்களுடன் நிகழ்ச்சி களை கட்டும். சன் டிவியிலிருந்து விலகிய பின்பு சிறிது காலம் ஜெயா டிவியில் பணிபுரிந்தார். கே.எஸ். அதியமானின் “சொர்ணமுகி” படத்தில் நாயகன் ப்ரகாஷ்ராஜின் தோழனாகவும் நடித்தார். தற்சமயம் இவரைக் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

    15. எம்.ஜே.ரெகோ: ஜோடிப் பொருத்தம் என்ற அசத்தலான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். நிகழ்ச்சிக்காக பங்கேற்பவர்களை சென்னைக்கு வரவழைக்காமல் நிகழ்ச்சியே மக்களைத் தேடி ஊர் ஊராக வந்தது. அதிரடியாக இறுதிச் சுற்றில் வென்ற ஜோடிக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. உபயம் ஆர்.எம்.கே.வி. சன் டிவியிலிருந்து விலகிய பின்னர் இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை ஜெ.ஜெ. டிவியில் தொகுத்தளித்து வந்தார். தற்சமயம் இவரைக் குறித்தும் தகவல்கள் இல்லை.

    16. சந்திராசாமி: இவர் ஊருகாய் வியாபாரி லக்குபாய் பாதக் என்பவரை ஏமாற்றிய வழக்கு வெகுகாலம் செய்திகளில் ஊறுகாய் போல வந்துகொண்டிருந்தது. ஒத்த ரூவா பொட்டுக்காரி என்று திரையுலகில் ஹீரோயின்களை ஹீரோக்கள் பாடுவார்கள். அதைவிடப் பெரிய வட்டமாக பொட்டு வைத்திருப்பார். இவரது இயற்பெயர் நேமிசந்த் ஜெயின். இவர் மீது 12 ஃபெரா வழக்குகள் நிலுவையில் இருந்தன. மண்டையைப் போட்டுவிட்டார் என்று சில வருடங்களுக்கு முன் செய்திகளில் பார்த்ததாக ஞாபகம்.

    17. நடிகை வினிதா: படிக்கிறவர்கள் என்னைத் தவறாக எண்ணக் கூடாது. நடந்த விவரங்களை மட்டுமே இங்கே எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஓராண்டு கழித்து காவல் துறை குற்றத்தை நிரூபிக்காததால் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் பிரபு மகன் திருமணத்தில் கலந்துகொண்டு அட்டகாசமாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார்.

    18. பிரேமானந்தா: திருச்சி பாத்திமா நகரில் ஆசிரமம் வைத்திருந்த இவர் மீது தொண்ணூறுகளின் மத்தியில் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள் வந்த வன்னம் இருந்தது. கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் இதில் அடக்கம். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் இருக்கிறார். அவ்வப்போது பரோலில் ஆசிரமத்துக்கு வந்து பக்த கே… மன்னிக்கவும், கோடிகளுக்கு ஆசி வழங்கிச் செல்கிறார். சர்க்கரை நோயின் தீவிரத்தால் ஒரு கண்ணில் பார்வைக் குறைபாட்டுடன் கஷ்டப்படுவதாக பத்திரிகை செய்திகளில் கூட வந்தது. இவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த பெண்கள் சிலரும் இதே பாத்திமா நகர் ஆசிரமத்தில் வசித்து வருவது குறிப்பிடத் தக்கது.

    தற்செயலாகத் தோண்றிய சிந்தனையின் விளைவாக இதன் முதல் பதிவை எழுதினேன். வாசகர்களின் வரவேற்புக்கிணங்க இரண்டாவது பதிவையும் எழுதியாகிவிட்டது. இன்னொரு பாகம் எழுதக் கூடாது என்பதால் இரண்டுடன் முடிக்க வேண்டிய கட்டாயம். அதனாலேயே பதிவு சற்று நீண்டுவிட்டது. பொருத்தருள்வீர்.

    முந்தைய பதிவுகள்:

    சைதை தமிழரசி தாக்கப்பட்டார்…..

    இரண்டு கைகள் நான்கானால்…

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

    சைதை தமிழரசி தாக்கப்பட்டார்…..

    9:09 பிப இல் மார்ச் 3, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , ,

    image பல வருஷம் முன்னாடி பங்காளீன்னு ஒரு படம் வந்துச்சு. அதுல கவுண்டமணி சொல்ற டயலாக்தான் இந்த பதிவோட தலைப்பு.

    சத்தியராஜ் ஒரு அசைவ ஹோட்டல்ல லெக் பீசா தின்னுட்டு பில்லு குடுக்க காசில்லாம உக்காந்திருக்கும் போது. “சைதை தமிழரசி தாக்கப்பட்டார்… ஒரு கண்ணீரில்லையா, கம்பலையில்லையா, கடையடைப்பு இல்லையா…. ஹர்தால்” அப்படீன்னு கத்திக்கிட்டே கவுண்டமணி ஓடி வருவாரு.

    ரெண்டு பேருமா சேந்து கடைகள எல்லாம் அடிச்சு நொறுக்கி அவுங்களுக்கு வேண்டியத எல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. மறுநாள் சைதை தமிழரசிக்காக நிதி திரட்டுறதுக்காக வீடு வீட போவங்க. அப்படிப் போகும்போது பானுப்பிரியா வீட்டுக்கும் போவாங்க. அவுங்க கிட்டயும் நிதி கேப்பாங்க. ஆனா, பானுப்பிரியா தான் அவுங்க சொன்ன சைதை தமிழரசி.

    அந்த மாதிரிதான் ஈராக்குல உள்ள புகுந்து காட்டடி அடிச்சு, கைல அகப்பட்டத எல்லாம் சுருட்டிக்கிட்டிருக்கு அமெரிக்கா. 2012 க்குள்ள அங்க அனுப்புன ராணுவத்த கொஞ்ச கொஞ்சமா திருப்பிக் கூப்பிட்டுக்கப் போறாங்களாம். கொள்ளையடிச்சதெல்லாம் பத்தல போல இருக்கு. கால நீட்டிப்பு…

    அடுத்த டார்கெட் கெடைச்சுட்டா இருபத்திநாலு மணிநேரத்துல கூட ஈராக்க காலி பண்ணிட்டு போயிருவானுங்க. அவிங்க ரொம்ப நல்லவனுங்க. இன்னிக்கு பாகிஸ்தான்ல இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரங்கள (வார்த்தை உபயம்: வே. மதிமாறன்) சுட்டுட்டாங்களாம். ஒருவேளை நான் எழுதிக்கிட்டிருக்கற இந்த நிமிஷத்துக்கு முன்னால கூட முடிவெடுத்திருக்கலாம். “பங்காளி, இங்க ஒருத்தன் சிக்கிட்டான்னு” சிக்னல் குடுப்பான். யாருக்கு? “நம்ம பிரிட்டிஷ் மாமனுங்களுக்குத் தான்”.

    நாம என்னத்த சொல்றது!!! கவுண்டமணி சொன்னதத்தான். “அட்றா சக்க… அட்றா சக்க… அட்றாஆஆஆஆஆ சக்க”.

    உபரி:

    நம்ம ஊர் மீனவர்கள் எத்தனையோ பேரு நடுக்கடல்ல செத்தப்போ வராத அதிர்ச்சி இலங்கை ஆட்டக்காரர்கள் தாக்கப்பட்டதும் நம்ம பானா சீனாவுக்கு வந்துருச்சாம். “டேய், ஆதிடா….” “போடா….” கோவாலு வேணாண்டா…. “கபோதின்னு சொல்ல வந்தேன்பா”.

    “the government of Srilanka never support any form of violence” நான் சொல்லைங்க, ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பொக்கவாய் பொக்கலஹாமா கொல்றாரு… சாரி, சொல்றாரு.

    இரண்டு கைகள் நான்கானால்…

    6:08 பிப இல் மார்ச் 2, 2009 | கருத்துப் படம் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , , ,

    image

    நல்லா பாத்துக்குங்கப்பா,  தட்டு ரெண்டும் நேரா இருக்கு, நேரா இருக்கு, நேரா இருக்கு…

    ஓ பக்கங்களில் எழுத்து மாமா கேட்ட இந்த வாரக் கேள்வி:

    பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி ‘‘ ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்ட்டது மரன தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேன்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் 6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துகு அனுப்பியவன் ராஜீவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ?  ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம் செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்’’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

    ராஜீவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றால், அந்த ‘குற்ற’த்துக்கு தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் ஸ்ரீபெரும்புதூரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா? அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா? புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போரில் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா சொன்னதைப் போன்றதுதானே அது ?

    குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால் இந்திய சட்டபடி குற்றவாளிகளான ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ? சில மரண தண்டனைகள் மட்டும் அநியாயமானவை; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா?

    அதிசயம் ஆனால் உண்மை, ஓ பக்கங்களில் முதல் முறையாக, கருந்தேள், நெருஞ்சி முள், நச்சுப் பாம்பு முதலியவை பதுக்கி வைக்கப்படாத பூச்செண்டை முதல்வர் கருணாநிதிக்கு வழங்கவிருக்கிறார் எழுத்து மாமா. ஏனெனில் எழுத்து மாமா போட்டுக் கொடுத்ததற்கினங்க “பெரியார் திராவிடர் கழக” தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்!!!

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

    5:05 பிப இல் மார்ச் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , ,

    1. ஆதிகேசவன்: வெறும் ஆதிகேசவன்னு சொன்னா தெரியாது, ஆல் இன் ஆல் ஆதிகேசவன்னு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும். அய்யா அழுக்கு வேட்டியவே ஆகாயவிமானத்துல அனுப்பி டெல்லியில சலைவைக்குப் போடுவாராம். ஒரு தரவுக்காக கூகுள்ல இவரோட படத்தத் தேடின். ஒன்னு கூடக் கெடைக்கல. இவரு எங்க இருக்காரு, இவரு மேல இருந்த வழக்குகளின் நிலைமை என்ன, எதுவும் தெரியல. தெரிஞ்சவங்க தாராளமா சொல்லுங்க.

    2. முத்துக்கருப்பன்: வராற்றுச் சிறப்பு மிக்க கலைஞர் கைதில் பங்கேற்ற அதே முத்துக்கருப்பன்தான். கொஞ்ச நாள் திருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியின் தலைவரா இருந்தார். ஒரு முறை தற்கொலை முயற்சி செய்ததாகக் கூட சொல்லிக்கிட்டாங்க. தற்சமயம் என்ன செய்கிறாருன்னு தெரியவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரை நேர்ல சந்திச்சு கோரிக்கை வைச்சதா பத்திரிகை செய்திகள் கூட வந்துச்சு. ஒன்னும் வேலைக்காகல.

    3. ஸ்ரீ ஹரி பரணிதர ஸ்வாமிகள்: சேலத்துல, ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த பையன் அவனா சாமியாரானானோ, இல்லை வேற யாராவது ஆக்குனாங்களோ தெரியாது! கொஞ்ச நாள் காவித்துணியும் தண்டமுமா (தண்டமா) திரிஞ்ச பையன், இப்போ மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டதா கேள்வி. கொஞ்ச நாள் மதுரை ஆதினம் கூட இந்தப் பையன இளைய ஆதினமா நியமிக்கப் போறதா நம்மள வச்சு காமெடி பண்ணுனாரு. அதுக்காக ஏற்கெனவே அப்பாயிண்ட் பண்ண இளைய ஆதினத்த டிஸ்மிஸ் பண்ணி போஸ்ட்ட வேக்கெண்ட்டா வச்சிருந்தாரு. ஆனா பாருங்க எல்லாம் புஸ்வானமாயிருச்சு.

    4. சிவகாசி ஜெயலட்சுமி: பல காக்கிங்க இந்த அம்மாவப் பாத்து ஒரு காலத்துல “சிவகாசி ரதியே” ன்னு பாடிக்கிட்டிருந்தாங்க. மாட்டினதும் சிவகாசி ரதி சிவகாசி வெடியாகிருச்சு. இவங்க பேரக் கேட்டால காக்கிப் பேண்ட் எல்லாம் ஈரப் பேண்ட் ஆனதெல்லாம் ஒரு காலம். இப்போ இவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி மல்ட்டி லெவெல் மார்க்கெட்டிங்ல இவங்க பெரிய தில்லாலங்கடியாம்.

    5. இவர் பேரு எனக்கு ஞாபகத்துலயே இல்லை. ஆனா இப்படி ஒரு மனுஷன் இருந்தாரே, போலீஸ்ல மாட்டுனாரே, தியாகராயநகர் தொழிலதிபர் ஒருத்தரோட மனைவியையும் மகளையும் தன்னோட கஸ்டடீல வச்சிருந்ததா கூட குற்றம் சாட்டுனாங்களேன்னு பல விஷயம் ஞாபகத்துக்கு வருதே ஒழிய இவரு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. கடைசியா காலைக் கடன செட்டில்பண்ணிக்கிட்டிருந்தப்போ இவரோட பேரு ஞாபகத்துக்கு வந்துச்சு. சதுர்வேதி சாமியார்.

    6. ஜீவஜோதி: சரவணபவன் அண்ணாச்சிக்கு இந்தம்மா கனவுல வந்தா கூட பிரஷர் ஏறிக்கிட்டிருந்துச்சு. தஞ்சாவூர்ல “ஜீவ்ஸ்” டெய்லரிங்ன்னு ஒரு தையல்கூடம் வச்சிருந்தாங்க. அப்புறமா அதே தஞ்சாவூர்ல கந்தசரஸ் மஹால் திருமண மண்டபத்துல உறவுக்காரர் ஒருவரையே மறுமணம் செஞ்சுக்கிட்டாங்க. கல்யாணத்துல செய்தி சேகரிக்க வந்த பத்திரிகைக்காரங்க வாசல்லயே தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டாங்க. அதனால அன்னைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையே ரொம்ப கலவரமா இருந்துச்சு. ஜீவஜோதி இப்போ வெளிநாட்டுல இருக்கறதா கேள்வி. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா, நானும் அதே தஞ்சாவூர்க்காரன்தான்.

    7.  ஜோஷ்வா ஸ்ரீதர்: “காதல்” படத்துக்கு இசை அமைச்ச இவரோட நிஜவாழ்வுக் காதலில் என்ன சிக்கலோ தெரியலை, கைது கஸ்டடீன்னு பல விதமா செய்திகள் வந்துகிட்டிருந்துச்சு. மீண்டும் கீபோர்டு ப்ளேயரா ஆகிட்டதா கேள்வி. இவரப்பத்தியும் ரொம்ப நாளா எந்த தகவலும் இல்ல.

    8. ஜெயமாலா: சோழிய உருட்டிப் பாத்து ஐயப்பன் கோபமா இருக்காருன்னு உன்னிகிருஷ்ன பணிக்கர் சொன்னாரு, உடனே கொஞ்ச நாள் கழிச்சு இந்த அம்மா “ஆமாஞ்சாமி, நாந்தான் ஐயப்பன் செலையத் தொட்டுக் கும்புட்டேன்னு” சொன்னாங்க. விஷயம் கொஞ்ச நாள் எரிஞ்சுச்சு, கொஞ்ச நாள் பொகைஞ்சுச்சு. அதுக்கப்புறம் இந்த அம்மாவப் பத்தியும் ஒரு செய்தியும் இல்ல.

    9. கிரகலக்‌ஷ்மி: நடிகர் ப்ரஷாந்தின் மனைவி. கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இடையே கிரகலக்‌ஷ்மிக்கும் இன்னொருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்று ப்ரஷாந்த் தரப்பிலிருந்து கூறப்பட்டது. தற்சமயம் விவாகரத்து வழக்கு என்ன நிலையில் இருக்குன்னு தெரியல. இவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்குது.

    10. சிவசங்கர் பாபா: பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இவரப்பத்தி யாருக்கும் தெரியாம இருந்துச்சு. என்னைக்கு இவரு யாகவா முனிவர் கையால துண்டடி வாங்குனாரோ அன்னைக்கு ஆரம்பிச்சுது இவருக்கு சுக்கிர தெசை. “சம்ரஷனா” அப்படீன்னு ஒரு அமைப்ப நடத்திக்கிட்டிருக்கறதா கேள்வி. முன்னையெல்லாம் அடிக்கடி டிவி சேனல்கள்ள பேட்டி குடுப்பார். இப்ப இவரு குடுக்கறதில்லையா இல்லை யாரும் இவர் கிட்ட பேட்டி கேக்கறதில்லையான்னு தெரியல.

    11. ராமர் பிள்ளை: மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளைன்னு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பரபரப்பான பேச்சிருந்துச்சு. ஆனா இவருடைய தயாரிப்பு ஆய்வுக்கூட சோதனையில தோல்வியடைஞ்சிருச்சு. “தமிழ் தேவி” மூலிகை எரிபொருள்ங்கற பேருல இவருடைய கண்டுபிடிப்பு சில காலம் விற்பனை செய்யப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்புக்கு சீனக் காப்புரிமை கோரி வின்னப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருடைய தயாரிப்பை விநியோகம் செய்யப் போவதாகவும் சொன்னது. இவர் தனது மனைவியையும் மகளையும் பிரிந்திருப்பதாக வந்த செய்தியே பத்திரிகைகளில் கடைசியாக இவரைப்பற்றி வந்த செய்தி.

    12. ___________________________.

    பின்குறிப்பு: 12 ஆவது ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆவலா காத்திருப்பீங்க. ஆனாலும் என்னால அவர இந்தப் பட்டியல்ல சேக்க முடியாது. இந்தப் பதிவைப் பத்தொன்பதாம் தேதிக்கு முன்பு எழுதியிருந்தால் அவரையும் இப்படியலில் சேர்த்திருப்பேன். ஆனால் அன்று தான் அவருக்கு ஹைக்கோர்ட்டில் முட்டையடி வைபவம் நடந்தது.

    கலை “மாமா”மணி விருதுகள் அறிவிப்பு

    9:33 முப இல் பிப்ரவரி 28, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , ,

    image

    கலைமாமணி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெகு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் அறியாத பல முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அறிமுகமே தேவையில்லாத சில முகங்களும் அவற்றுள் அடக்கம். அவர்களைப்பற்றிய பதிவுதான் இது.

    image இவருதான் அபிராமி ராமநாதன். அபிராமி மெகா மால்னு ஒரு தியேட்டர் வச்சிருக்காரு. சிவாஜி படத்தோட சென்னை மாநகர, மாவட்ட ஏகபோக உரிமையையும் வாங்கி வச்சிருக்காரு. சமீபத்துல “பஞ்சாமிருதம்” அப்படீன்னு ஒரு படமும் எடுத்து உட்டாருங்க. அதனால தியேட்டர் ஓனரா இருந்தவரு தயாரிப்பாளரா ஆகிட்டாரு. கலைச்சேவை எல்லாத்துலயும் உன்னதமான கலைச் சேவை, இவரு செய்யுறதுதான். ஆட்சியில யாரு இருந்தாலும், திரையுலகத்தோட பொன்னான காலம் உங்க ஆட்சிக்காலந்தான்னு அறிக்கை விடுவார். திரையுலகம், கலைஞருக்கு பவளவிழா எடுத்தப்போவும் இதையேதான் சொன்னாரு, அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்பயும் இதையேதான் சொன்னாரு. இவரப் பொறுத்த வரைக்கும் அன்னைக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சுன்னு இருக்க மட்டாரு. தட்டுற தாளத்த தப்பாம தட்டுவாரு. எனக்கு என்ன வருத்தம்னா திரைப்படத் தயாரிப்பாளரா இவருக்கு விருது குடுத்ததுதான். தவில் கலைஞர், நடனக் கலைஞர் மாதிரி தாளக் கலைஞர் அப்படீன்னு ஒரு பிரிவுல குடுத்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். நாம நெனைக்கிறதெல்லாம் நடந்துடுதா என்ன? சரி… விடுங்க பாஸ்.

    image சிறந்த பரதநாட்டியக் கலைஞரான ஐஷ்வர்யா தனுஷுக்கும் கலைமாமணி விருது குடுத்திருக்காங்க. இவுங்களுக்கு பரதநாட்டியம் ஆடத் தெரியும்ங்கறது இப்ப, கலைமாமணி விருது அறிவிச்ச பெறகுதான் தெரியும். ஒருவேளை ஆஷ்ரம் இஸ்கூலுக்குள்ளாறயே ஆடிருப்பாங்களோ என்னமோ! அங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னுதான் வெளிய யாருக்குமே தெரியாதே. ஒன்னு கேக்குறேன், யாரும் தப்பா நெனைக்கக் கூடாது. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்ததுக்கு தான் இந்த விருதக் குடுக்குறோம்னு வெளிப்படையா சொன்னா நாங்க என்ன வேணாம்னா சொல்லப் போறோம்?

    image இந்த வருஷமும் விருது கிடைக்கலைன்னா “கடிச்ச சிம்புவுக்குத்தான் விருதா? கடி வாங்குன எனக்கு இல்லையான்னு?” இந்தப் புள்ள குங்குமத்துக்கு பேட்டி குடுத்தாலும் குடுத்திருக்கும். “சரக்கடிக்கலாமா…” அப்படீன்னு வில்லு படத்துல கேப்பாங்களே, அந்தப் போர்க்குணத்துக்கே தரலாம்யா பத்து கலைமாமணி. அன்புமணி ராமதாச மருந்துக்குக் கூட மதிக்கலியே… (அந்த ஒதடு கடி படத்த ஏன் போடலேன்னு கேக்கலாம்? படிக்கிறவுங்க கவனச் சிதறலுக்கு எடங்குடுத்துறக் கூடாது பாருங்க… அதுக்குத்தான் அந்தப் படத்தப் போடல. மகா ஜனங்களே இதுக்கு வேற எந்த உள்நோக்கமும் கிடையாது).

    image “அன்பு மகள் அசினுக்கு என் இதயத்திலே எப்போதும் இடம் உண்டு. அசினை பல வருடங்களாகப் படங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்து வருகிறேன். அது ஃபேர் அண்டு லவ்லி விளம்பரமானாலும்  சரி, ஃபேண்ட்டா விளம்பரமானாலும் சரி, அவருடைய நடிப்பிலே ஒரு நேர்த்தி இருப்பதை நான் அறிவேன் என்பதை நீ அறிவாய் என்பதையும் நான் அறிவேன். குறிப்பாக ஹயக்கிரிவா சில்க்ஸ் விளம்பரத்திலே…” இப்படித் தொடங்குற ஒரு கடிதம் முரசொலியில வற்றதுக்கு முன்னாடி நல்ல வேளையா அசினுக்கு விருதக் குடுத்தாங்க.

    image விருதுக் குழுவுல இருந்த புண்ணியவான் யாரோ ஒருத்தர் மீரா ஜாஸ்மினுக்கும் துண்டப் போட்டு எடம் புடிச்சு வச்சிருக்காரு. “நேபாளி” ங்கற படத்துல பரத்துக்கு அக்கா மாதிரி இருந்தாலும் ஜோடியா நடிச்சுது மீரா. இந்தப்புள்ள ரன் படத்துல மாதவன் கையப் புடிச்சிக்கிட்டு ஓடுச்சு, “சண்டைக் கோழி” படத்துல விஷால் கையப் புடிச்சிக்கிட்டு ஓடுச்சு. நடிக்கிற ஒவ்வொரு படத்துலயும் இந்தப் புள்ளதான் ஓடுச்சே தவிற படம் ஓடுச்சான்னு தெரியல. இந்தப் புள்ளைக்கு நல்லா ட்ரெயினிங் குடுத்து ஒலிம்பிக்குக்கு அனுப்புனா ரெண்டு மூணு தங்கப்பதக்கம் கேரண்டியா கெடைக்கும்.

    image ஆரம்பத்துல மூணு நாலு ஹீரோக்கள் கூட நடிச்சிருந்தாலும் தொடர்ந்து சிங்கிள் ஹீரோவா நடிக்கிற அளவுக்கு முன்னேறிருக்காரு, வாழ்த்துக்கள். இவருக்கு ஏன் விருது குடுத்திருப்பாங்கன்னு யோசிக்கும் போது ஒரே ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. “பழநி”! முருகன் கோமணத்தோட நின்ன பழனி இல்லீங்க, பேரரசு இயக்கத்துல வந்த “பழனி” திரைக்காவியம். அதுல ஒரு வசனம் சொல்லுவாரு பாருங்க “டேய், இனிமேலும் எங்க ஐயா கிட்ட வச்சுக்கிட்டே, நீ சோத்துல வைக்கிறதுக்கு சோத்தாங்கையும் இருக்காது, ***ல வைக்கிறதுக்கு பீச்சாங்கையும் இருக்காது” ன்னு, அந்த ஒரு வசனத்துக்காகவே குடுக்கலாம் கலை மாமணி விருது. (நியாயமா இந்த விருது பேரரசுவுக்குப் போக வேண்டியது, ஜஸ்ட் மிஸ்).

    image ரஜினிகாந்து குடும்பத்துல ஒருத்தருக்கு விருது குடுத்துட்டு கமலஹாசன் குடும்பத்து ஆளுகளுக்குக் குடுக்கலைன்னா என்ன ஆகறது. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுடும்ல… ஆட்சிய கலைச்சிருவாங்கள்ள… அதனால அனுஹாசனுக்கும் ஒரு விருது. இவுங்களும் விஜய் டிவியோட கௌரவத் தொகுப்பாளினி. “காஃபி வித் அனு” நிகழ்ச்சியையும் வேற சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குறாங்க. தொழிலதிபரும் கூட.

    image கடைசியா ஒரு விஷயம், இவங்க எல்லாரோடயும் சேந்து “கன்னடத்துப் பைங்கிளி” சரோஜாதேவி அம்மாவும் கலை மாமணி விருது வாங்குறாங்க. பரத், நயன்தாரா, ஐஷ்வர்யா தனுஷ், அசின், மீரா ஜாஸ்மின் இவுங்களுக்கெல்லாம் முப்பது வயசாகறதுக்கு முன்னாலயே விருது குடுக்கற தமிழக அரசுக்கு சரோஜாதேவிய வயசு போன காலத்துல இப்பதான் கண்ணுக்குத் தெரியுது. அடக் கெரகமே… எம்.ஜி.ஆருக்கே ஜோடியா நடிச்சவங்களுக்கு இப்படி ஒரு பரிதாப நெலமையா!

    இதச் சொல்றதுக்கு எதுக்குடா இப்படி ஒரு தலைப்பு வச்சேன்னு யாரும் கேக்கக் கூடாது. தோணுச்சு வச்சேன், அவ்வளவுதான். இவுங்களுக்கெல்லாம் ஏன் விருது குடுத்தோம்னு விருது கமிட்டிக்காரங்களால சொல்ல முடியுமா? அது மாதிரிதான்.

    கலை “மாமா”மணி

    1:18 முப இல் பிப்ரவரி 26, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்

    இந்த டைட்டிலை நான் துண்டைப் போட்டு ரிசர்வ் செய்கிறேன். வேறு யாரும் தலைப்பைப் பயன்படுத்தாதிருக்கும் பொருட்டே இந்த முன்பதிவு. பதிவு உரிய செய்திகளுடன் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.

    image

    என்னமோ போடா மாதவா… 22/02/2009

    11:15 முப இல் பிப்ரவரி 25, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , ,

    image-thumb.png ஈரான் எழுத்தாளரும் “சாத்தானின் வேதங்கள்” நூலை எழுதியவருமான சல்மான் ருஷ்டி மீது ஃபத்வா அறிவித்தார் அந்நாட்டு இஸ்லாமியத் தலைவர் அயத்துல்லா கொமைனி. அதே போல பல்லடத்தில் இந்து மக்கள் கட்சி ராஜபக்‌ஷேவின் தலைக்கு விலை வைத்து ஃபத்வா அறிவித்திருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லியான தலைதான், விலை ஏழரை கோடி ரூபாய். ஏழரை கோடியை ஒவ்வொரு தமிழனும் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்து திரட்ட வேண்டுமாம். தலைக்கு ஒரு ரூபாய் கொடுப்பதல்ல இங்கே பிரச்சனை, இந்த இயக்கம் எதற்காக இந்தியாவை இப்பிரச்சனையில் தலையிடச் சொல்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கைவிட்டுப் போன கச்சத்தீவைப் போலவே இலங்கையும் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற அகண்டபாரத இந்துத்துவக் கனவின் வெளிப்பாடாகவே விளங்குகிறது இந்த ஃபத்வா. இதற்காக முப்பது பேர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மீண்டும் மீண்டும் வளருகிற முடியைக் காணிக்கையாகக் (மொட்டை என்று சொன்னால் எனக்கும் ஃபத்வா விதித்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது) கொடுத்திருக்கிறார்களாம். ஏழரையின் பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று திருமதி ராஜபக்‌ஷே சமீபத்தில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தீக்குளிப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றாலும்,  மக்களை சலிப்படையவே வைக்கின்றன. வருந்தத்தக்க நிகழ்வாகவே இருந்தாலும், முத்துக்குமரனின் மரணம் ஈழப் பிரச்சனையின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கும் உணர்த்தியது. ஆனால், தொடர்ந்து நடைபெறும் தீக்குளிப்புகளும் தீக்குளிப்பு முயற்ச்சிகளும் போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும். இன்று எத்தனை பேர் பற்றவைத்துக்கொண்டார்கள் என்று தொலைக்காட்சி செய்திகளில் தேட நேரிடுகிற அபாயம் இருக்கிறது. நேற்றைய தினம் தீக்குளித்த திமுக தொண்டரின் செயல் ஈழத் தமிழர் மீதான அக்கறையை விட கலைஞர் மீதான களங்கத்தைப் போக்கும் முயற்சியாகவே சித்தரிக்கப்படும். நேற்றைய மரணம் திமுக-விலும் ஒருவர் தீக்குளித்துள்ளார் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுமே ஒழிய ஈழ விடுதலையில் நம்முடைய நோக்கம் நிறைவேற ஒருபோதும் உதவாது.

    image.pngஹெச்.டி.தேவேகௌடா, ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். பொது நிகழ்வுகளின்போது மேடைகளிலேயே தூங்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். வெகு சமீபத்தில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் மூண்றாவது அணியில்தான் இருக்கிறது” என்பதே அந்த அறிக்கையின் சாரம். மீண்டும் கண்விழித்து ஜெயலலிதா அம்மையார் காங்கிரசுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததை அறிந்தால் மாரடைப்பில் மண்டையப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எழுந்த உடன் யாரவது பக்குவமாகச் சொல்லி சாந்தப்படுத்துங்கள்.

    image-thumb.png கடந்த வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதில் ஒருசிலரின் குடும்பத்தார் தெரிவித்த எதிர்ப்பின் பேரில் அவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு சுந்தரராமசாமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அவருடைய எழுத்துக்களுடனும் பரிச்சயம் கிடையாது. ஆதலால் அவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

    எனக்குத் தெரிந்து கண்ணதாசனின் படைப்புகளில் இன்றும் ஓரளவுக்கு நன்றாக விற்பனையாவது எது என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” ஒன்றுதான். தகப்பனை மட்டுமே நம்பினால் கரையேற முடியாது என்று காந்தி கண்ணதாசனுக்கே தெரியும். அதனால் தான் வெளிநாட்டு சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் நூல்களுக்கு மொழிபெயர்ப்பு வெளியிட்டு வருகிறார். அவரது எதிர்ப்பை ஏற்று கண்ணதாசன் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாதது அரசுக்கு லாபமே. கண்ணதாசன் படைப்புகள் அடுத்த தலைமுறையை நோக்கிப் பயணிப்பது சாத்தியமில்லை. இன்னும் இருபது வருடங்கள் சென்று கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாமா என்று பரிசீலிக்கக் கூட ஆளிருக்காது. அந்த வகையில் காந்தி கண்ணதாசனுக்கு இழப்புதான். (கண்ணதாசனைப் பற்றி எழுத உனக்கென்ன அருகதை இருக்கிறது என்று பின்னூட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த தலைமுறை கண்ணதாசனின் எழுத்துக்களை விரும்புமா என்று மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு என்னைத் திட்டி பின்னூட்டம் எழுதலாம்.) கண்ணதாசனை அவரது எழுத்துக்களுக்காக ரசிபவர்களை விடவும் பாடல்களுக்காக ரசிப்பவர்களே அதிகம். அவர்களுக்கெல்லாம் பண்பலை வானொலிகளே போதுமானது.

    தமிழில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு என்று அனைத்திற்கும் பயன்படுபவை புலியூர் கேசிகன் அவர்களின் எழுத்துக்கள். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டது, உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய செய்தி. இதனால் தமிழை மேற்கல்விக்காகத் தேர்ந்தெடுப்பவர்கள் மலிவு விலையில் புலியூர் கேசிகனாரின் நூல்களை வாங்க ஏதுவாகும். தமிழ்க் கல்வி பயிலும் மாணவர் சமுதாயம் இந்த ஒரு காரணத்துக்காக அரசுக்குத் தாராளமாக தங்களது நன்றியைத் தெரிவிக்கலாம்.

    எனக்கு ஒரு சந்தேகம் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் இன்றளவும் பரவலாகப் பலரால் வாசிக்கப்படுபவை. அவற்றுள் வெகு சில நூல்களே முப்பது நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அவருடைய மாஸ்டர் பீஸ்களான நெஞ்சுக்கு நீதி, பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட எந்த நூலும் மலிவாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை. நூற்றைம்பது ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை விலை வேறுபடுகிறது. ஆகவே பகுத்தறிவாளர்களே, கலைஞரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். பயந்து போய், நம்மை விட்டால் போதும் என்று பெரியார் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கினாலும் ஆக்கிவிடுவார்!

    [பதிவு எழுத “விண்டோஸ் லைவ் ரைட்டர்” கருவியைப் பயன்படுத்துவேன். அதில் இருந்த கோளாறு காரணமாக நேற்று முந்தினம் எழுதிய பதிவை உடனே பதிப்பிக்க முடியவில்லை. அதனால் “ரெண்டு நாள் லேட்டுடா மாதவா” என்று கூட சொல்லலாம். ஸ்லம்டாக் ஆஸ்கர் விருதுகள் குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.]

    “ஏன் பிறந்தாய் மகனே…” அல்லது “நான் என்னாத்த சொல்வேனுங்கோ”

    2:37 பிப இல் பிப்ரவரி 21, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , ,

    imageஅலுவலகத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அந்த வாய்ப்பு நேற்று கிடைத்தது. நேற்று இரவு 9:00 மணிக்குப் பக்கமாக நானும் வேறு சில நண்பர்களும் ஒன்றாக உணவருந்தச் சென்றோம்.

    உணவுக்கூடத்தில் (கெஃபெட்டீரியா) உள்ள தொலைக்காட்சியில் சென்னை உயர்நீதிமன்றக் கலவரக் காட்சிகள் வந்தன. ஆந்திர நண்பர் ஒருவர் “என்ன நடந்தது சென்னை உயர்நீதிமன்றத்தில்” என்று ஆர்வமாகக் கேட்டார்.

    ஏறக்குறைய பதினைஞ்சு நிமிஷம் என்ன நடந்துச்சு, ஏன் நடந்துச்சு, இதுக்கு யாரு காரணம், அவருக்கு எதால அடி விழுந்துச்சு, அதுக்கப்புறம் எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டாரு, வெளிய வந்து என்ன பேசுனாரு, போலீஸ் ஏன் வந்துச்சு, யாரு தூண்டுதல்ல வந்துச்சு, இதையெல்லாம் வெளக்கி சொன்னேன்.

    ஆர்வமா கேட்டவரு கடைசிய ஒரு கேள்வி கேட்டாரு. அதக் கேட்ட ஒடனே எனக்கு முகமே சுண்டிப் போச்சு. “ஹூ இஸ் திஸ் சுப்ரமணியம் சாமி? நீ கடைசி வரைக்கும் அவரு யாருன்னே சொல்லலியே”.

    ஓ!!! “சங்கரன்”

    11:33 முப இல் பிப்ரவரி 16, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , , ,

    ஊனமுற்றவர்களை வைத்துப் பிச்சை வியாபாரம் செய்யும் தன்னுடைய தாண்டவன் பாத்திரம் போல, தானும் உடல் ஊனமும் மனநலக் குறையும் உடையவர்களை வைத்துப் படம் எடுத்துக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிப் பிழைப்பதற்காக அவர்களுடைய மனித உரிமைகளை மீறியிருக்கும் இயக்குநர் பாலாவுக்கும், இந்த அராஜகமான படத்தைக் குழந்தைகளும் பார்க்கலாம் என்று யூ ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இந்த வாரக் குட்டு.

    பிள்ளையாராவது தனக்கு முன்னால் மற்றவர்கள் தாங்களாகக் குட்டிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே ஒருவர் வாரம் ஒருவரைத் தானே குட்ட வேண்டும் என்ற வெறியுடன் குமுதத்தில் எழுதிவருகிறார். அவர் தான் சங்கரன். சங்கரனின் குட்டு வெறிக்கு இந்த வாரம் அகப்பட்டவர் இயக்குனர் பாலா. பாலாவைக் குட்டுகிறேன் என்று தன் குட்டுகளைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறார் திருவாளர் சங்கரன். அப்படி என்னென்ன குட்டுக்கள் வெளியே வருகிறது என்பதையும் பார்ப்போம்.

    image “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…” இந்த வரிகள் திருவாளர் சங்கரன் குசேலன் படத்துக்கு எழுதிய விமர்சனத்திலிருந்தவை. சங்கரன் சொல்லியிருப்பது போல குசேலனில் காமெடி அபத்தம், (காமெடி அபத்தம் என்று சேர்த்து எழுதிவிட்டார், என்னுடைய கருத்து காமெடிக்கும் அபத்தத்துக்கும் இடையில் ஒரு கமா வந்திருக்கவேண்டும். காமெடி ஆபாசம் அல்லது ஆபாசக் காமெடி என்று வேண்டுமானால் எழுதியிருக்கலாம்) ஆபாசம் ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் படத்தின் டைட்டில் மட்டுமே மிஞ்சும். சங்கரனைப் போன்ற திறமைசாலிகளுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இப்படித்தான் எழுதுவார்கள்.

    ஏனென்றால், சங்கரன் நடத்திவரும் “சிங்கிள் ரீல்” திரைப்பட இயக்கத்தின் போஷக அல்லது புரவல ஸ்தாபனமானத்தின் புராடக்ட்தான் குசேலன். அதனால்தான் குசேலனுக்கு மயிலிறகால் அடி விழுகிறது. “யெஸ் சார்” குறும்பட விஷயத்தில் புரவல ஸ்தாபனத்துக்கும் திருவாளர் சங்கரனுக்கும் புட்டுக்கொண்டதாகக் கேள்வி… கேள்வி…

    போகட்டும், சங்கரனின் வார்த்தைகளுக்கே வருவோம். பாலாவுக்கும் அவருடைய தாண்டவன் கதாபாத்திரத்துக்கும் வேறுபாடு இல்லை என்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். படத்துக்கு வசனம் எழுதிய ‘சுய’மோகனைக் குறித்து ஒரு வார்த்தையும் வரக் காணோமே! ஒருவேளை தாண்டவனை வைத்து காசு சம்பாதிக்கிற மாதிரி கதாபாத்திரம் ஏதும் படத்தில் இல்லையோ என்னவோ. இருந்திருந்தால் சொல்லியிருப்பார், சங்கரன் “அம்புட்டு நல்லவராயிற்றே”.

    பாலா உடல் இயலாமை உடையவர்களை, மனவளர்ச்சி குன்றியவர்களை வைத்து கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார் என்பதுதான் திருவாளர் சங்கரனின் குற்றச்சாட்டு. சங்கரனின் எழுத்து வியாபாரம் ஓடிக்கொண்டிருப்பதே ஒரு 85 வயது கிழவனை நம்பித்தான். வாரம் ஒரு முறையாவது அந்தக் கிழவனைக் குட்ட வேண்டும், அந்தக் கிழவனின் வேட்டி அவனுடைய மூத்திரத்தால் நனைந்தால் அதையும் எழுதிக் காசாக்கிவிட வேண்டும். ஐயகோ, “விபச்சாரம் செய்யாதவர்கள் இந்த வேசியின் மீது கல்லெறியுங்கள்” என்ற இயேசுநாதரின் பொன்மொழி இந்த நேரத்திலா என் நினைவுக்கு வந்து தொலைய வேண்டும்.

    பாலா யாருடைய மனித உரிமையை மீறியதாகக் சங்கரன் கதறுகிறாரோ, அவர்களைக் கஷ்டப்படக் கூடாது என்பதால்தான் அளவு கடந்த காலவிரயம் மற்றும் பண விரயத்தைக் குறித்துக் கவலைப்படாமல் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இல்லையென்றால் படம் வெளியாகி இரண்டு தீபாவளி கடந்திருக்கும். ஒருவேளை “நான் கடவுள்” படமும் புரவல ஸ்தாபனத்தின் புராடக்ட்டாக இருந்திருந்தால் இந்த செருப்படி விழுந்திருக்காதோ என்னவோ!!!

    திருவாளர் சங்கரன் சென்சார் போர்டைக் குட்டியதில் அவருக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பன்மடங்கு சந்தோஷத்தை நான் எய்தினேன். பக்கா “ஏ” படமான குசேலனுக்கு ஒரு இடத்தில் கூட கத்திரி போடாமல் “யூ” சர்டிபிகேட் கொடுத்த காரணத்துக்காக சென்சார் போர்டை நானே குட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். யார் குட்டினால் என்ன? விழ வேண்டியவர்களுக்குக் குட்டு விழுந்ததா, நமக்கு அது தான் முக்கியம்.

    மேல் விவரங்கள்:

    1. பிரபலங்களைத் திட்டி எழுதி வலைப்பதிவுக்கு ஹிட் தேடுகிறான் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதல்லவா… அதற்காகவே இப்பதிவில் சங்கரனின் இயற்பெயரான சங்கரன் என்பதையே குறிப்பிட்டிருக்கிறேன் (அவருடைய ஆர்குட் குழுமத்தில் கூட தற்போதைய பெயருடன் சங்கரன் என்பதையும் சேர்த்தே போட்டிருந்தார். புதிதாகத் தொடங்கியிருக்கும் சொந்த வலைப்பதிவில் கூட தன்னுடைய இளம்வயது காலத்தைப் பற்றிய பதிவுக்கு ‘சின்ன’ சங்கரன் என்றே தலைப்பிட்டிருக்கிறார்)

    2. தவிர்க்க முடியாமல் குமுதத்தின் பெயரை குமுதம் என்றே குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. சும்மா இல்லை ரூ.12க்கு வாங்கிருக்கிறேன். வெளிமாநிலத்தில் வசிக்கும் பாவத்துக்கு எக்ஸ்ட்ரா ரூ.2, கண்டுக்காதீங்க)

    3. திருவாளர் சங்கரனை காஞ்சிபுரத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அந்தக் குற்றம் கம்பேனி பொறுப்பில் வராது

    4. அஹம் ப்ரம்மாஸ்மி என்ற கருத்தியலில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பாலா என்ற கலைஞனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது

    5. குட்ட வேண்டும் என்று நினைத்திருந்த சென்சார் போர்டை திருவாளர் சங்கரனே குட்டிவிட்டார். அதனால் இந்தப் பதிவுக்கான குட்டு எனக்கே. குட்டுக்கான காரணம் ‘மேல்’ விவரங்களைக் ‘கீழே’ கொடுத்ததற்காக

    அம்சா

    10:43 பிப இல் பிப்ரவரி 15, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , ,

    image இங்கே ஏன் விசித்ரா படம் என்று தமிழ் கூறும் வலையுலகம் ஐயுறலாம். நடிகை விசித்திரா அறிமுகமான காலத்தில் நமிதாவுக்கு தற்போதுள்ள வரவேற்பு அவருக்கு இருந்தது. விசித்ரா என்ற அவருடைய நிஜப் பெயரே இரண்டொரு படங்களுக்குப் பிறகு தான் அனைவராலும் அறியப்பட்டது. “மடிப்பு அம்சா” என்ற பெயரில்தான் அவர் தமிழர்களுக்கு அறிமுகமானார். தற்சமயம் விசித்ரா என்ற பெயரை கூகுளில் தேடினால் இந்த ஒரு படம் மட்டுமே தென்படுகிறது.

    இப்போது விசித்ராவை நினைவுகூர வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்தப் படமும் பதிவும் என்று பலரும் ஐயுறலாம். ஐயன்மீர் பொறுமை காப்பீராக. இந்த அம்சாவை இன்னொரு அம்சா நினைவுபடுத்திவிட்டார். அவர்தான் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அம்சா. இலங்கையில் நிகழ்ந்து வரும் படுகொலைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும், காலிட வேண்டும் என்ற குரல்கள் மட்டும்தான் இதுவரை எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்தியாவின் அதிருப்தியை வெளிக்காட்ட குறைந்தபட்சம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை இனிமேலாவது முன்னெடுக்க வேண்டாமா? தூதருக்கான பணிகளைக் கடந்து “நக்கீரன் பத்திரிகை மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வழக்குத் தொடருவேன்” என்று ராஜபக்‌ஷே கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் போல உறுமியிருக்கிறார். இந்த வேளையிலாவது இலங்கைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்.

    இவ்வளவும் ஆரம்பமானது ராஜபக்‌ஷே தலை ஓட்டு மாலை அணிந்திருப்பது போன்ற படத்துடனும் “ராஜபக்‌ஷே நாசமா போவான்” என்ற சாப வாசகத்துடனும் வந்த அட்டைப் படம் காரணமாகத்தான். இந்த அட்டைப் படமும் சாப வாசகமும் இலங்கை அதிபரின் மாட்சிமையைக் குலைக்கிறதாம். இலங்கையின் அதிபர் எந்தத் தமிழினத்தை அழித்துவிடத் துடிக்கிறாரோ, எந்தத் தமிழினத்தின் மீது வன்மத்தோடு இருக்கிறாரோ அந்தத் தமிழினம் அவருடைய மாட்சிமையைக் குலைக்கக் கூடாதாம். அந்த மாட்சிமை குலையும் போது அதை தமிழர்களின் மண்ணிலே தன்னுடைய கைத்தடியை வைத்துத் தட்டிக் கேட்பாராம். என்ன கொடுமை சார்…

    இதற்குப் பிறகாவது இந்தியா இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மாணம் முன்னெடுக்கப்படுமா? வலைப்பதிவு சமூகமே, சிந்திப்பீர்…

    பின் குறிப்பு: நக்கீரன் பத்திரிகையும் கோபாலும் யோக்கியமா என்று கேட்க இருப்பவர்களே, இதே மாதிரி வேறு எங்காவது கவர்ச்சிப்படம் போட்டிருந்தால் பார்த்துவிட்டு பின்னூட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். இது உங்களுக்கான இடம் அல்ல. இலங்கையில் இருக்கிற தமிழர்களைத் தான் ஆதரிக்கவில்லை, குறைந்தது இங்கிருக்கும் கோபாலையாவது ஆதரித்துத் தொலையுங்கள் (எனக்கும் நக்கீரனுடன் பல கருத்து முரண்கள் உண்டு. நக்கீரனையும் கோபாலையும் கேள்விகேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உண்டெனினும் ஒரு சிங்களன் தமிழ் மண்ணில் இருந்துகொண்டு தமிழனை மன்னிப்புக் கேட்கச் சொல்வதை ஏற்பதற்கில்லை).

    என்னமோ போடா மாதவா – 14/2/2009

    10:09 பிப இல் பிப்ரவரி 14, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்

    image

    பதிமூணு வயசுப் பையனும் பதினைஞ்சு வயசு பொண்ணும் அப்பா அம்மாவா ஆகிட்டாங்களாம். அத ஒரு செய்தீன்னு குதியோ குதின்னு குதிக்கிறாங்க. பதினேழு வயசுல எங்க தாத்தா பதிமூணு வயசு இருந்த எங்க பாட்டிய கல்யாணம் பண்ணாரு. பாட்டிக்குப் பதினாலு வயசு (1956) இருந்தப்போ எங்க அப்பா பொறந்தாரு. இவனுங்க சொல்றாப்ல பாத்தா மிகக் குறைந்த வயசுல தாயாகி சாதனை படைச்சவங்க என் பாட்டி. இந்த ஒலக சாதனையப் பத்தி அப்போ இருந்த சுதேசமித்திரன், தினமணி உள்ளிட்ட எந்த பேப்பர்லயும் செய்தி போடல. வெள்ளத் தோல் இருக்கறவனுங்களுக்கு நடக்கறது தான் வரலாறுன்னு நெனச்சுட்டானுங்க போல இருக்கு.

    image இன்னிக்கு மத்தியான செய்தியப் பாத்தா கேள்விப் படாத புதுப் புதுப் பேரா சொல்றாங்க. அனுமன் சேனாவாம், துர்கா சேனாவாம், தமிழ் மாநில சிவசேனாவாம், புதுசு புதுசா சொல்றானுங்க. போற போக்கப் பாத்தா போன பதிவுல அர டிக்கெட்டு போட்ட பின்னூட்டம் பொய்யாயிரும் போல இருக்கே. எல்லாத்துக்கும் மேல ரெண்டு நாய்களுக்கு கல்யாணம் வேற பண்ணி வச்சிருக்கானுங்க. “யாயும் யாயும் யாராகியரோன்னு” ரொம்ப வருஷத்துக்கு முன்னயே ஒரு தமிழன் எழுதி வச்சுட்டுப் போயிட்டான் காதலப்பத்தி. இவனுவ இப்பத்தான் நாயும் நாயும் கூடிக் குடும்பம் நடத்த ஏற்பாடு பண்றானுங்க. மாமா வேலையவே ஹைடெக்கா பண்றானுங்களோ!

    image ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஐந்தாவது ரயில்வே பட்ஜெட் நேற்று சமர்பிக்கப்பட்டது. இந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிதித்துறையில் ஒரு தமிழர் அமைச்சராக வந்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தோம். ஆனால் அவருடைய நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் அனைவராலும் கேலி செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் இந்த ஐந்தாண்டுகளில் சிறந்த நிர்வாகியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கச் செய்தமை, ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட ரயில் கட்டணத்தை உயர்த்தாமை, என்று ரயில்வே துறையை முழுமையாகப் பயன்படுத்தியதன் மூலம் ரயில்வேயை லாபகரமான துறையாக மாற்றியுள்ளார் லாலு. மீண்டும் பல ரயில்வே பட்ஜெட்களை சமர்ப்பிக்க லாலுவுக்கு வாழ்த்துக்கள்.

    நாங்க என்ன பாவம் பண்ணோம்... இந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குளிர்பானம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பால் உற்பத்தியின் போது கிடைக்கக் கூடிய ஒரு உபபொருளிலிருந்து அந்தக் குளிர்பானம் தயாரிக்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் அதனை நாடு முழுவதும் விநியோகிக்க இருக்கிறது. அப்படி ஒரு பானம் எதுன்னு கேக்குறீங்களா! பசு மூத்திரம். இதை எதிர்த்து எருமை மாடுகளும், காளை மாடுகளும் சேந்து போராட்டம் நடத்தப் போகுதாம். வேற எதுக்கு, அதுங்க மூத்திரத்தையும் சேக்கச் சொல்லிதான்.

    image

    சென்னை செம்பரம் பாக்கத்தைச் சேர்ந்த எழுபது வயது முதியவர் ஒருவர் பீடி நெருப்பு தாடியில் பற்றி பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். அதாவது தனக்கான கொள்ளியைத் தானே வைத்துக் கொண்டுள்ளார். இதிலிருந்து அறியவரும் நீதி: மொகத்த சுத்தமா செரைச்சுக்கோங்கப்பா!!!

    ஸ்ரீ ராம் சேனா சர்குலர்

    12:55 முப இல் பிப்ரவரி 11, 2009 | அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , ,

    பிப்ரவரி 14 அன்னிக்கி ஜோடி ஜோடியா சுத்துற பசங்களையும் பொண்ணுங்களையும் பலவந்தமா கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா “ஸ்ரீ ராம் சேனா” காரங்க சொல்லிருக்கங்கப்பா. அதனால பெங்களூரூ வாழ் இளைஞர்களே யுவதிகளே ஜாக்கிரதையா இருந்துக்குங்க…

    ஒருவேள இப்படியெல்லாம் நடந்தாலும் நடக்குமோ…

    image

    [படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்]

    நன்றி: கேலிச்சித்திரம் வரைந்தவருக்கும், அதை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பன் வினோத் குமாருக்குக்கும்.

    பச்சை மனிதன் – நடந்தது என்ன?

    3:03 பிப இல் பிப்ரவரி 8, 2009 | பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , ,

    ஹல்க் என்ற ஆங்கிலத் திரைப்படம் “பச்சை மனிதன்” என்ற பெயரில் தமிழில் வெளியாகியது. இப்பதிவு அதைப் பற்றியதல்ல. மக்களிடம் நிதி திரட்டி அதிலிருந்து “பச்சை மனிதன்” என்ற படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தைப் பற்றித்தான் இப்பதிவு பேச இருக்கிறது.

    ஆண்டுதோறும் பூதாகரமாக உருவெடுக்கும் காவிரிப் பிரச்சினையை முன்னிறுத்தியே “பச்சை மனிதன்” என்ற படம் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்தன. இயக்குனர் சேரனிடம் உதவி-இயக்குனராக இருந்த ஷரத் சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டுவதற்காக “பச்சை மனிதன் அறக்கட்டளை” என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் இயக்குனர் சேரன், சமூக ஆர்வலர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பச்சை மனிதன் படத்தை இயக்க இருந்த ஷரத் சூர்யா (இவரது படம் கிடைக்கவில்லை) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

    image image image

    தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து தொண்டுள்ளம் கொண்ட 16,000 மாணவர்களிடம் நிதி திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும், 110 டிக்கெட்டுகள் கொண்ட புத்தகம் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்றும், நூறு டிக்கெட்டுகான தொகையை அறக்கட்டளையினருக்கு வரைவோலையாக அனுப்பிவைக்கும் செலவுக்கு பத்து டிக்கெட்டுகளுக்கன ரூ.100ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகளில் படத்தைப் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டுகளாகவும் பயன்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது.

    image

    படத்தின் இயக்குனர் ஷரத் சூர்யா “பச்சை மனிதன்” என்ற தலைப்பில் ரூபாய் ஐம்பது மதிப்புள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

    படத்துக்கான நிதி வசூலை ஜூன் 2004க்குள் முடித்து படத்தை ஏப்ரல் 14 2005 அன்று வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஆறாம் திணை தளத்தில் வெளியாகிய இக்கட்டுரையில் (போராட்ட ஆயுதமாய் ஒரு தமிழ் சினிமா) கூறப்பட்டுள்ளது. இன்று வரை படமும் வெளிவரவில்லை, ஏறக்குறைய 16,000 பேர் திரட்டித் தந்த தொகை என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.

    துணை இயக்குனராகும் கனவுடனிருந்த நண்பன் (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவன்) ஒருவனுக்காக அறுபது டிக்கெட்டுகளை என் அலுவலக நண்பர்களிடம் விற்றுத் தந்தேன். மேலும் என்னுடைய பங்களிப்பாக இருபது டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொண்டேன். இந்த முயற்சிக்கு என் பொறுப்பில் ரூ. 800 திரட்டித் தரப்பட்டுள்ளதாலேயே இப்பதிவை எழுதுகிறேன். ஒரு நல்ல முயற்சியை நான் கொச்சைப்படுத்துவதாக யாரேனும் பின்னூட்டம் எழுத எத்தனித்தால் கீழ்க்கண்ட முகவரியிலோ அல்லது தொலைபேசியிலோ விசாரித்து திரட்டப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கேட்டுச் சொல்லலாம்.

    அறக்கட்டளை இயங்கும்/இயங்கிய முகவரி மற்றும் தொலைபேசி எண்:

    பச்சை மனிதன் அறக்கட்டளை
    பதிவு எண் : 370/4/03
    9-A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு
    தி.நகர், சென்னை 600 017
    போன்: 2834 4946, செல்: 98403 44474

    ஏக்கமும் பெருமூச்சும்

    5:30 பிப இல் பிப்ரவரி 7, 2009 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , , , ,

    image

    ஈராக்குல ஜார்ஜ் புஷ்ஷ செருப்பால அடிச்சாகளாம்

    லண்டன்ல சைனா பிரதமர செருப்பால அடிச்சாகளாம்

    சுவீடன்ல இஸ்ரேல் தூதர செருப்பால அடிச்சாகளாம்

    காமெடியன் தங்கபாலு கூட அப்பப்போ பத்திரிகைகாரங்கள சந்திக்கிறாரு. ஹூம்…

    [நன்றி: குறுஞ்செய்தி அனுப்பிய நண்பன் ஆண்டனிக்கு]

    எச்சரிக்கை: வலையுலகில் ஒரு கொடூர மனநோயாளி

    1:52 முப இல் பிப்ரவரி 4, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , ,

    image

    மிகக் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளான ஒரு மனநோயாளியின் வலைப்பதிவை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. வேர்ட்பிரஸ்சை ரோஜாத் தோட்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த சைக்கோ தன் வீட்டு நடைபாதையிலேயே கழிந்து வைத்திருக்கிறது. இது போன்றவர்களுக்கு மற்றவர்கள் நம்மைக் கவனிக்க வேண்டும் என்ற குறுகுறுப்பு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களின் கவனிப்பு இவர்கள் மேல் விழுகிற வரை பிரச்சனை இல்லை. அந்த சமயங்களில் வெகு இயல்பாகவே இருப்பர்.

    ஒலிப்புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவார்கள், திவாலாகிற அமெரிக்க வங்கிகளைக் குறித்து பதிவு எழுதுவார்கள், வால்மார்ட்டைப் பற்றியும் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க்கர்களைப் பற்றியும் கூட எழுதுவார்கள். மற்றவர்கள் பார்த்தால் “ச்சே ச்சே, இவராவது சைக்கோவாவது” என்று சொல்லுமளவுக்கு இயல்பாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்ட சைக்கோ வாரனம் ஆயிரம் படத்துக்குத் திரை விமர்சனம் கூட எழுதியிருந்தது. அது வெள்ளைத் தாளில் கரும்புள்ளி வந்த ரிஷிமூலத்தைக் கூட தேடிக் கொண்டிருக்கிறதாம் (தன்னுடைய மூலம் பௌத்திரமாகி ரத்தமும் சீழும் வடிவது கூடத் தெரியாமல்).

    மற்றவர்களின் கவனிப்பு வேறு பக்கம் திரும்புவது போல் தெரிந்தால் (அதாவது வலைபூவில் ஹிட்ஸ் குறைந்தால்) அப்போது தான் விபரீதம் ஆரம்பமாகும். பிறரை கவன ஈர்ப்பு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தானாக சுவற்றில் மோதிக் கொள்வார்கள், கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஜனத்திரளான இடத்தில் தோன்றி பயமுறுத்துவார்கள். வழக்கமாகக் கத்தி, அரிவாள், பெட்ரோல், டீசல், தீப்பெட்டி, தீப்பந்தம், வாகனங்களின் சாவி, உருட்டுக்கட்டை, கம்புகள் போன்றவற்றைத் தான் இவர்களது பார்வையில் படாமல் ஒளித்து வைப்பார்கள்.

    இனிமேல் வலைப்பதிவுகளின் பயனர் கணக்குகளையும் கடவுச் சொற்களையும் கூட இவைகளின் பார்வையில் படாத இடத்தில் ரகசியமாக வைக்க வேண்டும் போலிருக்கிறது. இவைகள் கணிணியில் ஸ்பைடர் சாலிட்டேரும், மைன் ஸ்வீப்பரும் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்வது நலம்.

    பின்குறிப்பு: அதிமுக்கியமான இந்த விஷயத்தைப் பதிவின் தொடக்கத்தில் பெரிய எழுத்துக்களில் போட்டிருக்க வேண்டும். மறந்துவிட்டேன். விஷயம் முக்கியமானதென்றால் எங்கே இருந்தாலும் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பின்குறிப்பாகத் தருகிறேன்.

    அந்த மனநோயாளியின் வலைப்பூவுக்கு இப்பதிவில் தொடுப்பு கொடுக்கவில்லை (உங்களது மனநலம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு). “இல்லை, நான் அந்தப் பதிவைப் படித்தே ஆகவேண்டும்” என்று அடம் பிடிப்பவர்கள் மட்டும், தோழர் மதிமாறனுடைய இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கள். சைக்கோவின் வலைத்தள முகவரி அங்கே கிடைக்கும். சைக்கோவின் வலைப்பதிவுக்குச் சென்று உங்கள் மனநிலையும் பாதிக்கப்பட்டு நீங்களும் சைக்கோ ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.

    பத்திரிகா தர்மம்…

    7:03 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , ,

    imageimageimageimage

    ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கொந்தளிப்பு தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே ஒருவர் தீக்குளித்துள்ள நிலையில், இன்னொருவரும் இதே காரணத்துக்காக தீக்குளித்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் நாகேஷின் மறைவும் இதனுடன் சேர்ந்துள்ளது.

    சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பும் அகில இந்திய அளவில் இதே போன்றதொரு சூழல். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமரான வி.பி. சிங் அவர்களும் இயற்கை எய்துகிறார்.

    முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதனையொட்டி மாநிலம் முழுவதும் நிகழ்ந்து வரும் போராட்டங்களும் ஊடகங்களால் செய்தியாக்கப்படும்போது, நாகேஷின் மரணமும் விடுபடாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பு, ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தின்போது எங்கே போயிற்று. நாகேஷ் ஒரு சிறந்த நடிகர் தான். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், இடஒதுக்கீட்டு வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற  வி.பி. சிங் அவர்களை இழந்தது ஒரு நடிகரின் மரணத்தை விட முக்கியத்துவமற்ற செய்தியா? சொல்லித் தொலையுங்கள் தமிழக ஊடகங்களே…

    கை சின்னத்தை இல்லாதொழிப்போம்

    5:51 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , ,

    image

    ராஜபக்சே: தமிழ்நாட்டுல இன்னுமா உங்கள நம்புறாங்க…

    பிரணாப்: அது அவனுங்க தல விதி பிரதர்…

    image

    வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ளிட்ட நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் எங்களிடம் கிடையாது. காங்கிரசில் இணைந்த நாள் முதலாய் இவற்றுக்கான அர்த்தம் என்ன என்பது கூட தெரியாது என்பதை உண்மையான காங்கிரஸ்காரனாகப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். – தங்கபாலு

    image

    பெரியாரின் பேரன் என்பதற்காக பெரியாரிடமிருந்த சுயமரியாதை, தமிழுணர்வு, கொள்கைப்பற்று இவை அணைத்தும் என்னிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய மூடத்தனம். – ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

    image

    தமிழ்நாடு காங்கிரஸ் பதருகளா, இங்க சரக்க நம்பித்தான் ஆட்சியே நடத்திக்கிட்டிருக்கேன். இப்போ என்னத்துக்கு மதுவிலக்கு வேணும்னு போராடுறீங்க! கொஞ்சமாவது பகுத்தறிவோட இருந்துத் தொலைங்க. – வைத்தியலிங்கம்

    image

    ஆகவே வாக்காளப் பெருமக்களே, வருகிற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரசை இல்லாதொழிக்கும் மகத்தான திருப்பணியை சிரமேற்கொண்டு தவறாமல் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மம்மியைக் கண்டு பம்மிய குறிப்புகள் – 1

    11:01 முப இல் ஜனவரி 29, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
    குறிச்சொற்கள்: , ,

    image

    போர் நேரத்துல உயிரிழப்புகள் சகஜம்ங்கற அரிய கண்டுபிடிப்ப எங்களுக்கெல்லாம் தெரிய வைச்சிட்டீங்க. அப்படியே இந்த காங்கிரஸ்காரங்க கிட்ட இந்தியாவுல அரசியல் படுகொலைகளும் சகஜம்னு (ஒலகம் பூராவுமே சகஜம் தான்) சொல்லிடுங்களேன்!

    ஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்

    10:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
    குறிச்சொற்கள்: ,

    இன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

    clip_image002

    வெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி, அதன் காரணமாகப் பதிவு எழுத முடியாதவர்களுக்கான விருது இது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது திடிரென பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமாக நிறுத்திவிட்டாலோ அவர்களை இந்த விருதுக்கு முன்மொழியலாம்.

    image

    பகிரங்கக் கடித மன்னர்: வலைப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து ஒருவருக்காவது பகிரங்கக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடங்கொடாத வகையில் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருந்தாலும் ஒரு பதிவருக்கு ஒரு கடிதம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    image

    இதயம் முரளி விருது: மிட்-நைட்ல (எந்த நாட்ல இருக்காரோ அந்த நாட்டோட மிட்நைட்) காதல் கவிதை எழுதி பதிவேற்றம் பண்ணுகிற ஆண் பதிவராக இருக்க வேண்டும். உருகி உருகிக் கவிதை எழுதியும் ஒரு ஃபிகரும் மாட்டாத ஏக்கத்தோடு அலைகிறவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் சகட்டு மேனிக்கு முன்மொழிவுகள் இருக்கும் என்பதால் முதலில் வருகிற பத்து முன்மொழிவுகள் மட்டுமே ஏற்கப்படும். பத்தைத் தாண்டி பதினொன்றாக இருந்தால் அது எவ்வளவு பெரிய பதிவராக இருந்தாலும் நிராகரிப்புதான்.

    image

    ஒற்றை ரோசா விருது: பதிவுலகக் கவிதாயினிகளுக்கான விருது. அதிர்ச்சி மதிப்புகளுக்காக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் சேர்த்து எழுதுபவராக இருக்க வேண்டும். பெரும் கைகலப்புகளை எதிர்பார்ப்பதால், இவ்விருதுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அரக்கு முத்திரையிட்ட உரையில் வைத்து அனுப்பப்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் முன்மொழியலாம். ஆனால் நீங்கள் முன்மொழிந்ததை அந்தக் கவிதாயினி உள்பட யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது. வீண் கலகங்களைத் தவிர்க்கும் பொருட்டே இத்தனைக் கட்டுப்பாடுகள்.

    image

    பெஸ்ட் போட்டோகிராபி விருது: ஐயா வலைமக்களே, நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஒன்றும் நன்றாகப் படம் எடுக்கிறவர்களுக்கான விருது கிடையாது. நன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கான விருது. அப்படி யாராவது பதிவுலகப் “பட விரும்பிகள்” இருந்தால் தயங்காமல் இவ்விருதுக்கு முன்மொழியலாம்.

    image

    உலகம் சுற்றும் வாலிபன் விருது: அலுவலகக் காசில் ஆன்-ஷோர் போயிருந்தாலும், ஆணிகளை மறந்துவிட்டு பயணக் கட்டுரைகளைப் பதிவேற்றிய பதிவராக இருக்க வேண்டும். முன்மொழியப்படும் பதிவர் குறைந்தது இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்குப் பறந்திருக்க வேண்டும்.

    மேற்கண்ட விருதுகளுக்கான முன்மொழிவுகளை வருகிற 23ம் தேதிக்குப் பிறகு எப்போ வேணுமானாலும் அனுப்புங்க. ஏன்னா, வலைச்சரத்துக்கு அப்போ வேற யாராவது ஆசிரியரா இருப்பாங்க. சைட்ல குப்பத் தொட்டி இருந்தா அதுல காறித் துப்பிட்டு தொடர்ந்து படியுங்க. எனக்கு வாக்குறுதி கொடுக்க மட்டும் தான் தெரியும். உண்மையிலயே யாருக்காவது இந்த மாதிரி விருதுகளக் குடுக்கனும்னு ஆசையா இருந்தா தாராளமா குடுக்கலாம். இத ஒரு கோரிக்கையா இல்லாம கட்டளையா ஏத்துக்கிட்டு வலையுலகச் சிங்கங்கள் யாராவது இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படி யாராவது முயற்சி எடுத்து என் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்தால், சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸில், டாய்லெட்டிலேயே ஹைதராபாத் “வந்து செல்லும்” அரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

    டிஸ்கி: மேற்கண்ட விருதுகள் யாரையும் கேலி செய்வதற்காக எற்படுத்தப்பட்டதல்ல. அப்படி நேர்ந்திருக்குமாயின் அது உள்நோக்கமற்றதே.

    நாளை சந்திப்போமா…

    வலைச்சரத்தில் விஜய்கோபால்சாமி

    1:02 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
    குறிச்சொற்கள்: ,

    வணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1, 2). நாலாண்டுகளுக்கு மேல் சென்னை வாசி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாதில் வசித்து வருகிறேன். எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார். நடந்ததென்னவோ நடந்து போச்சு, அதனால நடக்காதது ஆட்டோல போகட்டும். சரி, நான் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.

    image

    அது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் நாள். அலுவலகத்தில் பிடுங்க ஆணிகளற்ற ஒரு நாளில் திடீரென்று எழுத்தாளர் பாமரனின் நினைவு வந்தது. அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று தமிழில் “பாமரன்” என்று தட்டச்சித் தேடியபோது அவருடைய தளம் கண்ணில் பட்டது. சரி நாமும் எழுதுவோம் என்று நினைத்தது அன்றுதான். இதோ, எனது விஜய்கோபால்சாமி வலைப்பூ தனது முதல் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

    என்னுடைய நகைச்சுவையில் மாஸ்டர் காமெடி என்று இன்றளவும் வலை நண்பர்களால் குறிப்பிடப்படுவது இது தான். என்னுடைய கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தின் விவரிப்பு. இதல்லாமல் அவ்வப்போது நிகழும் சமூக அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சனங்களும் பகடிகளும் எனது பதிவில் பரவலாக இடம்பெறுவன. அவற்றுள் மிக முக்கியமானதாக நான் கருதுவது இந்தப் பதிவு. கொஞ்சம் மூக்கப் பொத்திக்கிட்டாவது படிச்சிட்டு வந்திடுங்க.

    எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவற்றைப் பற்றி ஏதும் தெரியாமல் நானும் ஒரு வெண்பா எழுதினேன். தமிழறிந்த புலவர் பெருமக்கள் யாராவது இதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, தளை தட்டுகிறதா, மூச்சு முட்டுகிறதா என்பதையெல்லாம் எனக்கு மின்மடலில் அனுப்பினால் மிகவும் மகிழ்வேன். சர்ச்சைக்குரிய ஒரு பதிவை எழுதி அதன் பலனாக சிலபல அர்ச்சனைகளையும் (1, 2, 3, 4, 5) வாங்கியிருந்த காலத்தில், வேறு எதாவது எழுதுவோம் என்று தோன்றியது. நம்மை நாமே செய்து கொள்ளும் பகடி தான் ஆகச் சிறந்தது, என்று பலரும் சொல்லக் கேட்டு எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். இதுவரை மூண்று (1, 2, 3) பகுதிகள் எழுதியுள்ளேன்.

    அதன் பிறகு எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கவிஞன் ஒரு நள்ளிரவில் மூச்சு முட்டியதாலோ, மூச்சா முட்டியதோலோ எழுந்துகொண்டதால் “கொலைவெறிக் கவிதைகள் 1754” என்ற கவிதைப் பதிவுத் தொடரும் ஆரம்பமானது. இதிலும் மூண்று பதிவுகள் (1, 2, 3). இவற்றுள் இரண்டாவது கவிதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளரால் மேற்கோள்காட்டப்பட்டது (அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா). இஃதல்லாமல் சில புகைப்படப் பதிவுகளும் உண்டு (1, 2, 3). என்னுடைய புகைப்படப் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதால், அநாகரிகமாக மற்றும் நாகரிகமாக வந்த வேண்டுகோள்களுக்கு இணங்கி அதற்குப் கடவுச்சொல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்.

    அதென்னவோ ரீமிக்ஸ் எழுதுவதென்றால் ஒரு அலாதி சந்தோஷம். கடைசியாய் எழுதிய ரீமிக்ஸ் இது. யாரைக் கலாய்க்க வேண்டுமே அவரிடமே அனுமதி கேட்டுப் பதிப்பித்தது. எள்ளளவும் சினம் கொள்ளாமல் தன்னைக் கேலி செய்ய மேலும் ஒரு விஷயத்தை அவரே எடுத்துக் கொடுத்தார். இதில் நான் விரும்புகிற பல பதிவர்களின் தளத்துக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகம், “திண்டுக்கல் சாரதி” படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சன் டிவி சொல்வதைப் போல. ஆனாலும் எதைப் படித்தாலும் தங்கள் மேலான கருத்துக்களைத் தவறாமல் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

    பாப்பையா படம் இங்க எதுக்குன்னு நீங்க எல்லாம் மண்டைய ஒடைச்சிக்கிட்டு யோசிச்சிருப்பீங்க. சரி, “நாளை சந்திப்போமா”.

    விடைபெறும் நேரம்

    12:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
    குறிச்சொற்கள்: , ,

    image

    என் இனிய வலையுலகமே…

    உங்கள் பாசத்துக்குரிய

    விஜய்கோபால்சாமியின்

    மொக்கைகளை

    பொறுமையாகச்

    சகித்துக்கொண்ட

    உங்கள் சகிப்புத் தன்மைக்கு

    நன்றி சொல்லி

    விடை பெறுகிறேன்

    அப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக் கெடுத்த பல பதிவர்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

    உஸ்மான் ரோடுல ஜோதி உதயமாகுதுன்னு ஒரு விளம்பரம். பரங்கிமலைலேந்து ஷிஃப்ட் பண்றாங்களோன்னு பயந்துட்டேன். பிறகு தான் தெரிந்சுது இது வேற ஜோதியாம். பீதிய கெளப்பி பேதியில கொண்டு போய் விடப் பாத்தானுங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.

    தம்பி விக்னேஸ்வரன் சில சமயம் என்னுடன் ஜி-டாக்கில் உரையாடியபடியே பதிவுகளை எழுதி முடித்துவிடுவான். பொங்கல் நாளன்றும் அப்படித் தான். பொங்கல் சிறப்புக் கொசுறுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தான். திடீரென்று ஒரு கேள்வி “சித்தப்பு, மாவு பொங்குவதற்கு ஒரு பொடி போடுவார்களே, அதன் பெயர் என்ன?” என்று “மகனே, சோடா உப்பு போட்டால் மாவு பொங்கும். சந்தேகம் என்றால் தூயா அக்காவிடம் கேட்டுக்கொள்” (மேட்டரே தூயா அக்காவைக் கலாய்ப்பதுதான் என்பது வேறு விஷயம்) அக்கா என்று விநாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் சொன்னேன். ஆமாம், சமையல் கலை என்றாலே வலையுலக மக்களுக்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஞாபகம் வருவது தூயா அக்காவின் பெயர் தான். அவர்களுடைய சிறுகதைகள் படித்த பல மணிநேரங்களுக்குப் பிறகும் மனதை என்னவோ செய்யக் கூடியவை. பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்தக் கதை.

    கவிதை, கதை, உலக நடப்புகள் என்று பல துறைகளில் கலக்கினாலும் ரிஷான் ஷெரிப் அவர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது சிறுகதைகள்தான். அவருடைய கதைகளில் என்னைப் பதம் பார்த்தவை சில (1, 2, 3).

    வருங்கால முதலமைச்சர்களைப் போட்டுத் தாளித்திருக்கிறார் ஒருவர். “நாளைக்கு நீங்கள் ஒரு முதலையமச்சர் ஆகி ஆட்சி நடத்தும்போது உங்கள் பேரனோ பேத்தியோ, நீங்கள் தொப்புளில் பம்பரம் விட்ட காட்சியையோ…டபுள் ட்ரிபுள் மீனிங் பேசும் காட்சிகளையோ பார்க்க நேர்ந்தால்..?” என்று சட்டையைப் பிடித்து கேட்பது போல கேட்டிருக்கிறார். இதற்கு அந்த வருங்கால முதல்வர்கள் சொல்லக்கூடிய ஒரு பதிலை அவரே சொல்லவும் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே எழுதுகிறார். கேட்டால் “பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி” என்கிறார்.

    கேபிள் ஷங்கர் அண்ணன் தற்சமயம் நிதர்சனக் கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதிவருகிறார். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு படித்த இந்தக் (இப்போது வந்திருப்பது மீள்பதிவு) கதை இன்னும் மனதிலேயே இருக்கிறது. மறக்காமல் படித்துவிடுங்கள்.

    லதானந்த் அங்கிளின் எச்சரிக்கையையும் மீறி செல்வேந்திரன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்தேன். தலைப்பு வெறும் அதிர்ச்சி மதிப்புகளுக்காக வைக்கப்பட்டதல்ல என்பது முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கே புரியும். இதே போல பல பகீர் ரகப் பதிவுகள் நிறைந்தது அவருடைய தளம்.

    இளையராஜா வேலுச்சாமி, என் கல்லூரி சீனியர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். “உணர்ந்ததைச் சொல்லுகிறேன்” என்ற தன்னுடைய தளத்தில் எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்களில் என்னைக் கவர்ந்தவை “காதல் வசனங்கள்” என்ற தலைப்பில் இவர் எழுதும் குறுங்கவிதைகள்.

    பதிவர்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே, பலரும் அறியாத ஒரு திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் கலைஞர் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நாடகங்களில் நடித்த காலத்தில் அவர்களுடன் நடித்தவர். பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அண்ணாமலை தொடரில் இவர் நடித்ததோடல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். அது தான் இவருடைய முதல் குரலிசை முயற்சி. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ” என்ற சீர்காழியாரின் பாடலை தன்னுடைய குரலில் பாடியிருப்பார். அதன் பிறகு விருமாண்டி படத்தில், “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்ற பாடலைப் பாடினார். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது பூ படத்தில் “சிவகாசி ரதியே” என்ற பாடலைப் பாடியுள்ளார். நாடக உலகிலிருந்து திரையுலகம், இசையுலகம் என்று தன் வாழ்நாளில் நீண்ட பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் “பெரியகருப்புத் தேவரை” உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. கீழே பாடலையும் இணைத்துள்ளேன், நேரம் இருந்தால் தவறாமல் கேளுங்கள்.

    நாளை சந்திப்போமா…

    மணிமேகலையும் ‘தண்ணி’மேகலைகளும்

    3:21 முப இல் ஜனவரி 1, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: ,

    image image

    வருடத்தின் முதல் நாள் தொடங்கி ஒரு மணி நேரமே கடந்திருந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் கண்ட காட்சிகளின் தொகுப்பு இது.

    ஹைடெக் சிட்டி சாலை சந்திப்பில் கருமமே கண்ணாக இருந்தனர் காவலர்கள். இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் வந்த வண்டிகள் நிறுத்தி வாகனப் பரிசோதனை செய்துகொண்டிருந்தனர். வழிநெடுக ஆங்காங்கே காவலர்கள் கண்ணில் பட்டனர்.

    ஜூபிலி ஹில்சில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரவலர்களை (பிச்சைக்காரர்கள்) எழுப்பி, ஒரு வெளிநாட்டுப் பெண் கேக் கொடுத்துக்கொண்டிருந்தார். அதே சாலையில் இருநூறடிகள் தள்ளி ஒரு பப்பின் (pub) வாயிலில் இந்திய இளைஞர்களும், இளம்பெண்களும், புத்தாண்டை தன்னிலை மறந்த நிலையில் வரவேற்ற களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பால் வேறுபாடின்றி சாலையைப் புகைமண்டலமாக்கிக் கொண்டிருந்த கூட்டத்தின் நடுவே நான் வந்த வாகனம் ஊர்ந்தபடியே வந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டியும் ஏராளமான வாகனப் போக்குவரத்து இருந்தது.

    அதே சாலையில் செய்தி அலைவரிசையின் வாகனமொன்று, போதையுடன் வந்து போலிசில் சிக்கியவர்களை நேரலையாகப் பதிவு செய்துகொண்டிருந்தது.

    சாலைத் திருப்பத்தில், உயரம் குறைவான ஸ்கர்ட்டும் அதைவிட உயரம் குறைவான டாப்சும் அணிந்தபடி ஆண் துணைவனின் வாகனத்தில், பின்னாலமர்ந்தபடி சென்றுகொண்டிருந்த பெண்னின் வயது பத்தொன்பதிற்கு மிகாது.

    தொடர்ந்து பழைய விமான நிலையத்தின் எதிரிலிருக்கும் பாலத்தில், நண்பர்கள் இருவர், கைப்பிடிச் சுவரை ஒட்டித் தங்கள் காரை நிறுத்திவிட்டு, சுவரில் ஒரு காலும் காரின் மீது ஒரு காலுமாக நின்றபடி, பாலத்தின் அடியில் சென்றவர்களுக்குத் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர்.

    மற்ற நாட்களில் அந்நேரத்தில் ஈக்கள் கூட பறக்காத எல்.பி. சாலையில், தேவாலயத்திலே நள்ளிரவுப் பிரார்த்தனையை முடித்துவிட்டுக் குடும்பம் குடும்பமாக மக்கள், பேருந்துக்காகக் காத்திருந்தனர். காருக்குள்ளிருந்து ஒரு குழந்தை கையசைத்து வாழ்த்து தெரிவித்தாள். புன்னகையுடன் நானும் கையசைத்தேன்.

    சிறிது தூரம் கடந்து பேரேடு கிரவுண்டை ஒட்டி நான் வந்த வாகனம் திரும்பியது. ஒரு சுவரொட்டியில் நாகார்ஜுனா, திரிஷாவின் கழுத்துப் பகுதியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். சற்று முன்பு தன்னிலை மறந்து புத்தாண்டை வரவேற்ற நண்பர் ஒருவர், அந்த சுவரொட்டிக்கு (சிறு)நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். கிங் ஃபிஷர் அல்லது 5000 அல்லது ப்ளாக்நைட் அல்லது பட்வைசர் அல்லது ஃபோஸ்டர்ஸ், இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ அருந்தியிருக்கக் கூடும்.

    பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இந்தப் புத்தாண்டு இரவில் கிடைத்திருக்கிறது. பதிவை வலையேற்றியதற்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கும் இடையே இரண்டு மணிநேர இடைவெளி கூட இல்லாததால் ஒருவகையில் இதுவும் சூடான இடுகை என்றே கருதுகிறேன்.

    சித்திரம் – விசித்திரம்

    3:28 பிப இல் திசெம்பர் 28, 2008 | படங்கள் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , ,

    image001

    … பட்டா சின்னப் பையன் நீ, என்னை முடிக்கப் போறியா…. ஏய், ஒழிஞ்சடா இன்னியோட….

    image002

    … பாருங்கப்பா, இவருதான் கைவிலங்கிட்டுகின காவலரு… நல்லா பாத்துக்குங்க…

    image003

    …ஃபிஃப்டி பர்செண்ட் டிஸ்கவுண்ட்ல பொறந்திருப்பாரோ?!

    image004

    …கால்ஷீட்டு கால்ஷீட்டுன்னு சொல்றாங்களே, அதுவா இது?

    image006

    …டேய், ஒரு சங்கிலியப் போட்டு வைக்க மாட்டீங்களா. சோலிய முடிச்சிடும் போல இருக்கே…

    image007

    …அரைகுறையா அலையிறியே, ஒழுங்க ட்ரெஸ் பண்ணி விடுவோம்னு பாத்தா இப்படி பண்ணிட்டியே…

    image008

    … யேய்… அங்கயே நில்லு… எதாருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்…

    image010

    …நல்ல வேளை, பேப்பர முழுசாத் தூக்கி நம்ம மானத்த வாங்காம விட்டானுங்களே…

    image011

    …தன் கையே தனக்குதவின்னு சொல்றாங்களே, அது இது தானா?!

    image014

    …ஃபர்ஸ்ட் எய்ட் கேள்விப் பட்டிருக்கேன், இது என்ன செல்ஃப் எய்டா?

    13678974_nami250

    மச்சான், நீ படம் எல்லாம் பாத்தாச்சு… இப்போ நா சொல்றது கேளு… மறக்காம ஒரு கமெண்ட் போடு…

    சதன் எழுதும் மலபார் தேங்காய்…

    10:51 பிப இல் திசெம்பர் 20, 2008 | அரசியல், கதைகள், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
    குறிச்சொற்கள்: , , , , ,

    விரைவில் ஆரம்பம், “சதன் எழுதும் மலபார் தேங்காய்…”. வரும் திங்கள் முதல் அடுத்த ஐந்து வாரங்கள் வெளிவர உள்ளது. தவறாமல் படியுங்கள், என்ற பீடிகைகள் ஏதுமின்றி இப்போதே தொடங்குகிறது “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” சிறுகதை. இக்கதையை ஐந்து வாரங்கள் தொடராக எழுதினால் உங்களில் பலபேர், மூலம், பௌத்திரம், குடலிறக்கம், மூட்டுவலி, சோரியாசிஸ், ஆஸ்துமா, சொறி, சிரங்கு, பக்கவாதம், மாரடைப்பு, கிட்னி ஃபெயிலியர், அல்சர், எய்ட்ஸ், இவற்றுள் ஒன்றோ அல்லது அத்தனையுமோ வரக் கடவது என்று என்னைச் சபிக்கலாம். அவற்றைத் தவிர்க்க கதையை இன்றே முடித்துக்கொள்கிறேன். நோ சாபம் ப்ளீஸ்.

    ஹரிஹரசுதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சதன் ஒரு எழுத்தாளன் மற்றும் மீடியா தொழிலதிபன். நீங்கள் நினைப்பதுபோல் அவன் ஒன்றும் இலக்கியவாதி இல்லை. அவன் எப்படி எழுத்தாளன் ஆனான், என்ன மாதிரி எழுத்தாளன் ஆனான் என்பதைச் சொல்வது தான் இந்த சிறுகதை. ஹ.ஹ.சு.வின் முழுப் பெயரையும் அடிக்கடி சொல்வது சாத்தியப்படாது என்பதால் இனி சதன் என்றே அழைப்போம்.

    சாந்தோம் குயில்தோப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்தான் சதன் வழக்கமாக தம்மடிக்கும் பெட்டிக்கடை இருந்தது. சதனின் கல்லூரிப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் வீணாகக் கழிந்திருந்தது. ஒரு சனிக்கிழமை ராகுகாலத்தில், அதே கடையின் முன்பு, பில்டர் கோல்டு ஒன்றின் கடைசி இழுப்பில், தானும் ஒரு தொழிலதிபனாவது என்று முடிவெடுத்தான். அதைத் தொடர்ந்து என்ன தொழில் செய்வது என்று நண்பர்களுடன் விவாதம் தொடங்கியது. பட்டிணப்பாக்கம் டாஸ்மாக்கில் ஏறக்குறைய ஆறு மணிநேரத்துக்கு மேலாக ஆராய்ச்சி நடந்தது. அவனுடன் வந்திருந்த ஆறு நண்பர்களில் இருவர் ஆம்லேட் போட்டது தனிக்கதை. ஆம்லேட் போட்டவர்கள் போக மீதமிருந்த நண்பர்களுடன் ஆராய்ச்சி தொடர்ந்தது.

    சதனுக்கு இயல்பிலேயே தமிழார்வம் அதிகம் என்பதால், எழுத்தாளனாகலாம் என்ற யோசனையை ஒரு நண்பன் முன்வைத்தான். பெரிய முதலீடு எதுவும் தேவைப்படாது என்பதால் சதனுக்கும் அந்த யோசனை சரியென்றே பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்று யாரோ ஒருவரின் மேடைப்பேச்சில் கேட்டது அவனைச் சற்றே கலவரப்படுத்தியது. அவனுக்கு ஏறியிருந்த போதையில் அந்த பயம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. எழுத்தாளனாவது என்று தீர்மானமாகவே முடிவெடுத்துவிட்டான்.

    பேச்சு எதைப்பற்றி எழுதுவது என்ற திசையில் சென்றது. அதுவரை பதினெட்டு ரவுண்டுகள் போயிருந்ததால் அவர்கள் போதையில் இருந்தார்கள் என்று சொல்வதை விட ராஜ போதையில் இருந்தார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த ராஜ போதை அவர்கள் இருக்குமிடம் சூழல் முதலியவற்றை மறக்கடித்திருந்தது. இடுப்புக்கு மேலே உள்ள பிரச்சனைகளை எழுதப் பல பேர் இருப்பதாலும், இடுப்புக்குக் கீழே உள்ள விவகாரங்களை எழுதுவோர் குறைவாக இருப்பதாலும், முன்னதைத் தவிர்த்து பின்னதைத் தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இவை

    எழுத்தாளனுக்குப் பேனாவை விட புணைப்பெயர் முக்கியம் என்ற அதி உன்னதமான கொள்கைப் பிடிப்பு சதனுக்கும் இருந்தது. என்ன தான் நாம் சதன் என்று அழைக்கத் தொடங்கிவிட்டாலும் கதையோட்டத்தில் நமது நாயகன் இன்னும் ஹ.ஹ.சு. தான். சிறிதளவு வாசிப்பனுபவம் உள்ள சதனுக்கு அகிலன் எழுத்துக்களில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. பல வருடம் முன்பே காலமான ஒரு எழுத்தாளரை அவமதிக்க விரும்பாத சதன், அகிலனைத் தவிர்த்து வேறு புணைப்பெயர்களை முயற்சி செய்யலாம் என்று முடிவை மாற்றிக்கொண்டான். எழுதப் போவது கிளுகிளுப்பு சமாச்சாரம் என்பதால் கிளுகிளுப்பு சாம்ராஜ்யத்தின் பேரரசி (ராதிகா அம்மையாரைச் சொல்லவில்லை, அவர் செந்தமிழ் அரசி) ஷகிலா அவனது நினைவைக் கடந்து செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அகிலனையும் ஷகிலாவையும் கோத்து ஷகிலன் என்று ஒரு பெயரை இறுதி செய்தான். நண்பர்களுக்கும் அதுவே பிடித்திருந்தது.

    மற்ற விஷயங்களை நண்பர்களுடன் கலந்தாலோசித்தாலும், கதை குறித்து சதன் எவருடனும் விவாதிக்கவில்லை. சொந்த சிந்தனையிலேயே கதைகளை எழுத வேண்டும் என்பதே அவனது விருப்பம். பெங்களூர் சரோஜா தேவி, பருவம், தேன் சிட்டு, போன்ற புத்தகங்கள் தரவுகளாகப் பயண்பட்டது. எல்லா புத்தகங்களிலும் கதாபாத்திரங்கள் தங்களுடைய அனுபவங்களைச் சொல்வது போலவே இருந்தது. ஆனால் சதனின் கற்பனை வேறு விதமாக வேலை செய்தது. கதை எழுதுகின்றவனே ஒவ்வொரு கதையிலும் நாயகனாக இருப்பது போல எழுதினான். ஒரே ஆள், பல அனுபவங்கள். இது தான் அவனது கதை உத்தியாக இருந்தது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்று புத்தகத்துக்குப் பெயரும் வைத்துவிட்டான். ஒவ்வொரு கதையையும் தன்னையே நாயகனாகப் பாவித்து எழுதியிருந்தான். (இது தான் ஹ.ஹ.சு. சதன் ஆன கதை)

    கதையை ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டு வருமா வராதா என்று ஏங்கி, வீங்கி அலைவதிலெல்லாம் சதனுக்கு இஷ்டமில்லை. அவனே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவது தவிற வேறு வழியில்லை என்று எண்ணினான். ஏறக்குறைய ஒரே வாரத்தில் இருபது கதைகளுடன் தனது மேல்நிலைப் பள்ளித் தோழன் ஒருவன் நடத்தும் அச்சகத்துக்குச் சென்றான். பட்டிணப்பாக்கத்தில் சதனுடன் விவாதத்தில் கலந்துகொண்ட ஆறுபேரும் பார்ட்னராக இணைந்து பத்திரிகையைத் தொடங்கினர். அச்சக நண்பன் மட்டும் இந்த ஆட்டைக்கு வர இஷ்டமில்லாமல் ஒதுங்கியே இருந்தான். தன்னுடைய வேலைக்கும் பொருட்களுக்கும் உரிய தொகை வந்துவிட்டால் போதும் என்ற முடிவுடனிருந்தான் அவன்.

    வெவ்வேறு வேலைகளில் இருந்த நண்பர்களின் மேன்சன் வாடகைப் பணம், கழுத்தில் கையில் கிடந்த சொற்ப தங்கம், எஸ்.எல்.ஆர். சைக்கிள், டி.வி.எஸ். சேம்ப் உள்ளிட்ட வாகனங்கள், அனைத்தையும் தின்று முதல் இஷ்யூ வெளிவந்தது. ஆயிரம் பிரதிகள். கடைக்கு இருபது என்று விநியோகிப்பது அவர்களுடைய மார்கெட்டிங் உத்தி. விற்ற பிறகு காசு கொடுத்தால் போதும் என்ற அறிமுகச் சலுகை வேறு. சதன் அவன் பங்குக்கு நூறு புத்தகங்களை எடுத்துக்கொண்டு சில கடைகளுக்குச் சென்றான். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடைகாரர் புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தார். புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சற்று மறைவாக இருந்த டீக்கடையிலிருந்தபடி கடையை நோட்டமிட்டான். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு பதுங்கிப் பதுங்கிப் பள்ளிச் சீருடையில் வந்த பையன் ஒருவன் கையை நீட்டிக் காட்டி மலபார் தேங்காயை வாங்கிச் சென்றான். சதனுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமிதம்.

    மறுநாள் மீண்டும் அதே கடையை ரகசியமாகக் கண்காணித்தான். முதல் நாள் கொண்டு வந்து கொடுத்த இருபது புத்தகங்களில் எட்டு மட்டுமே மீதம் இருந்தது. கடைக்காரரிடம் சென்ற போது மறு பேச்சில்லாமல் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். மறக்காமல் அவனது விலாசத்தையும், அடுத்த இஷ்யூ எப்போது வரும் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு அனுப்பினார். ஒரு மாதம் கழித்துக் கணக்குப் பார்த்தபோது நூற்றி இருபது பிரதிகள் மிஞ்சிய போதும் போட்ட காசுக்குப் பாதகமில்லாமல் ஓரளவு லாபமும் வந்திருந்தது.

    ஒரே மாதத்தில் அடுத்த இஷ்யூவுக்கான கதைகள் ரெடியானது. இம்முறையும் ஆயிரம் பிரதிகள். கடந்த முறை மிஞ்சிய நூற்றி இருபது பிரதிகளுக்கும் இந்த இஷ்யூவின் அட்டையை ஒட்டி அவற்றையும் கடைகளுக்கு அனுப்பினான் சதன். புத்தகங்களை ஸ்டேப்லர் அடித்து அனுப்புவதாலும், வாங்குகிறவன் கடையிலேயே பிரித்துப் பார்த்து எடுத்துச் செல்ல மாட்டான் என்பதாலும் சதன் தைரியமாக இவ்வாறு செய்திருந்தான். இரண்டாவது இஷ்யூவிலேயே தேர்ந்த தொழிலதிபனாகிவிட்டான் சதன்.

    இது நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சதன் தென்னிந்தியாவில் கவனிக்கத்தக்க ஊடகத் தொழிலதிபர். சதனின் செய்தி ஏடு பல எதிர்ப்புகளுக்கிடையில் தமிழகத்தில் மூண்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருது வேறு வழங்கப்பட்டது. ஆளுங்கட்சி மத்திய அமைச்சர் ஒருவருடனான நெருக்கம் காரணமாக எஃப்.எம். ரேடியோ ஒன்றைத் துவக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தான். என்னதான் பெரிய தொழிலதிபராக மாறியிருந்தாலும், அவனுடைய அச்சகத்தில் “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” புத்தகம் ரகசியமாக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. இதற்கெனவே கதை இலாகா ஒன்றும் “ஷகிலனின்” (அதாவது சதனின்) தலைமையில் இயங்கிவருகிறது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்ற ஓர்குட் கம்யூனிட்டிக்கு மட்டும் பதினாறாயிரம் உறுப்பினர்கள் (வெவ்வேறு பெயர்களில் இந்தப் புத்தகத்துக்குப் பல கம்யூனிட்டிகள் இருக்கின்றன, பத்தாயிரத்துக்கும் குறையாத உறுப்பினர்களுடன்). எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இன்றளவும் கதைகளை மட்டும் சதனே தேர்ந்தெடுப்பதாகக் கேள்வி.

    — முற்றும் —

    பின்குறிப்பு: அந்தக்காலத்து ரோஜா முதல் இந்தக்காலத்து நரசிம்மா வரை (அதற்குப் பிறகும்) எல்லாப் படங்களிலும் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகக் காட்டப்படுவது எப்படித் தற்செயலானதோ, வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் ஓரினச்சேர்கையாளர்களுக்கு இளா, அமுதன் என்று தூய தமிழில் பெயர் வைத்தது எப்படித் தற்செயலானதோ, அப்படியே ஹரிஹரசுதன் என்ற வடமொழி மேட்டுக்குடிப் பெயரை இந்தக் கதையின் நாயகனுக்கு வைத்ததும் தற்செயலானதே.

    அடுத்த பக்கம் »

    வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
    Entries மேலும் மறுமொழிகள் feeds.